புத்தாண்டு வாழ்த்துக்கள்
இருபத்து ஒராம் நூற்றாண்டு நங்கை
பருவம் பதினாறைப்* பொலிவுடன் கடந்து *2016
அகவை பதினேழை* அடைகின்ற நேரம் *2017
மகிழ்வுடன் உங்கட்கு வாழ்த்துபல சொல்வேன்.
சென்றபல ஆண்டுகளின் தொடக்கத்தில் நீங்கள்
செய்துபின் கைவிட்ட தீர்மானங் களிலே
ஒன்றிரண் டையேனும் உருப்படி யாக
இன்றுமுதல் நிறைவேற்ற என்னுடைய வாழ்த்து.
பண நோட்டு மதிப்புக் குறைத்திட்ட திட்டம் -( மனித)
குணங்களின் குறைகளை சிறிதேனும் மாற்றி
கறுப்புப்பணம் சேர்த்தல் வரியேய்ப்பு போன்ற
சிறுமைச் செயல்கள் செத்தொழிய வாழ்த்து .
வங்கியில் போட்டுள்ள உங்கள் பணத்தை
தங்கு தடையின்றி எடுத்திடவே வாழ்த்து.
ஏடிஎம்* முன்னால் கால் கடுக்க நின்று *ATM
வாடாமல் இனியேனும் பணமெடுக்க வாழ்த்து.
சிந்து , சக்ஷி , கர்மார்கர் * போன்ற * P.VSindhu, Sakshi Malik, Deepa Karmarkar,
இந்தியப் பெண்களின் இணையற்ற ஆற்றல்
பிந்தி இருக்கும்நம் ஆண்களை உசுப்பி
முந்தி அவர்சென்று மெடல்* வாங்க வாழ்த்து. * medal
கிரிக்கட்டு*, ஐஓஏ^ , இதுபோன்று இன்னும் * cricket ^ IOA
தறிகெட்டு நடக்கின்ற விளையாட்டு குழுமம்
நெறிகெட்டு போகாமல் நேர்வழியில் நின்று
சரியான முறையில் செயலாற்ற வாழ்த்து.
தாணே* புயலுடன் தொடங்கிய துயரம் * Thane
வார்தா* வரவுடன் தொடர்கதை ஆக * Vardha
வீணாய்ப் போனவர் வாழ்க்கைகள் எல்லாம்
மீண்டும் இவ்வாண்டு மலர்ந்திட என் வாழ்த்து.
செயற்கைக் கோளொன்றை செவ்வாய்க் கனுப்பி
நிச்சயம் உண்டங்கு "எச்டூஓ" * என்ற * H2O
வியப்புறு உண்மையைக் கண்ட பின்இன்று
சென்னையில் தண்ணீரைக் கண்டெடுக்க வாழ்த்து.
இவ்வாண்டு முழுதும் இனிதாய் இருக்க
செய்காரி யங்கள் செவ்வனே சிறக்க
வெவ்வினைகள் என்றும்நமை கவ்வா திருக்க
செவ்வேளின் கருணை கிட்டிட என் வாழ்த்து.