Search This Blog

Sep 30, 2019

யாதும் ஊரே யாவரும் கேளிர்

ஐக்கிய நாடுகள் அரங்கில் உரையாற்றிய பாரதப் பிரதமர், கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல் கருத்தை  மேற்கோள் காட்டிப்  பேசியது , தொன்று தொட்டு நிலவி தமிழரின் பரந்த மனப்போக்கை உலகிரிக்குப் படம்போட்டுக் காட்டியிருக்கிறது. 
இந்த மேற்கோளை மேற்கொண்டதால்  இந்தப் பேச்சு  மேலும் சிறந்து விளங்கியது என்றால் அது மிகையாகாது. 

இதை பற்றி ஒரு வெண்பா.

அன்புடன் 
ரமேஷ் 


யாதும்  ஊரே யாவரும் கேளிர்

மூவாயிரம் ஆண்டு முன்னமே முத்தமிழ்ப்
பாவாணன் பாடிய பாடலை - வாயுரையில்
சேர்த்துப்   பிரதமர் பேசியதா லப்பேச்சு
நேர்த்தி நிறைந்ததாய் ஆச்சு 

(பல விகற்ப இன்னிசை வெண்பா) 

Sep 29, 2019

ஊடல் ?

ஊடல் ?

யாணர் தமிழ்கவிதைக் குழுமத்தில் சரவணன் மணி பதித்திருந்த ஒரு படத்தின் உந்துதலில் எழுந்த கவிதை!

அன்புடன் 

ரமேஷ் 




முகங்காட்ட மறுத்துநீ  புறங்காட்டி அமர்ந்தாலும்
அகமுழுதும் எந்தன் நினைவுதான் அறிவேன் - உன் 
நகமேனும் நான்தீண்டும் சுகமொன்று வேண்டினேன்
பகையேதும் காட்டாது வா

ரமேஷ் (கனித்தோட்டம் ) 29-9-2019

கண்ணுக்கு வராத கனவு - (யாணர் கூடல் பாட்டு- 1)

யாணர் கூடல் பாட்டு- 1 

யாணர் கவிதைக்கு குழுமம் நடத்திய கூடலில் அனைவரும் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஆறு வரிக்கு மேலாகாமல் கவிதைகளை எழுதிப் படிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை  ஏற்று , கொடுக்கப்பட்ட தலைப்புகளை ஈற்றடியாக அமைத்து நான் ஐந்து வெண்பாக்களையம் ஓர் அறுசீர் விருத்தத்தையும் எழுதினேன். 
நான்  இந்தியாவில் அப்போது இல்லாத காரணத்தால் அவைகளை கூடலில் படிக்குமாறு அனுப்பி வைத்தேன். 
அப்பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக என் கனித்தோட்டத்தில் பதிவிடுகிறேன்.
அவற்றில் முதல் பாடல் , இதோ!

அன்புடன் 

ரமேஷ் 


கண்ணுக்கு வராத கனவு 

கருக்கல் இருட்டு அரைத்தூக்க நேரம் 
உறக்கம் கலையாத வேளை - பிறக்கின்ற  
எண்ணத் திழைகள்  விழித்தால்   மறையுமிது 
கண்ணுக்கு வாராக்  கனவு .

(பல விகற்ப இன்னிசை வெண்பா )

கலைவாணி

நவராத்திரிப் பண்டிகையன்று கலைமகளைத் துதித்து ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 




கலைவாணி 



தோளினில்   சாய்த்த மரகத வீணை 
-----ஒலித்திடு  மோர்பூ பாளம் 
காலினில்  பூட்டிய வெள்ளிக் கொலுசுகள் 
-----போடும் தகதை தாளம்.

சிரித்த முகமும் சரித்த கழுத்தும்
-----கரங்களில் ஏந்திய எழுத்தும் 
கருத்த கூந்தலும் கொண்ட கலைமகள்
-----உலகம் அவளை வழுத்தும்.

Sep 27, 2019

யாணரில் பதித்தது

யாணரில்  பதித்தது 


யாணர் கவிதைத் தளத்தில் நான் ஒரு அங்கத்தினர்.
தினந்தோறும் அதில் பதிக்கப்படும் பல பாடல்களை , முதல் வேலையாக காலை விழித்தவுடன் படித்து மகிழுவேன.
அதைப்பற்றி நான் புனைந்துப் பதீவு செய்த ஒரு வெண்பா!
அன்புடன்
ரமேஷ்


விழுமிய சிந்தனைகள் சேர்த்து அவற்றை
தழுவிய சொற்களில் கோர்த்துப் புனைகின்ற
நற்கவிதைத்  தேனமுதம்  நாளும்  பருகாது
முற்றுமோ எந்தன் தினம்.

(பல விகற்ப இன்னிசை வெண்பா )

Sep 26, 2019

பிரதோஷப் பாடல் - 23

பிரதோஷப் பாடல் - 23

இன்றைய பிரதோஷப் பாடலை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்!
அன்புடன்
ரமேஷ்











அருள்செயும்  இருவிழி  மறத்தினை  எரித்திடும்  ஒருவிழி  முகத்தினில்  இருத்தியவா

கருவிழி  இரண்டையும்   பிரித்துஉன் முகத்தினில்  
பொருத்திய வேடற்கு அருளியவா

பிரம்பில்   அடிபட்டு  முதுகில்  மண்சுமந்து பெரிய  கிழவிக்கு  உதவியவா

தெரிந்தும்  தெரியாது  அறிந்தும்  அறியாது புரிந்த   பிழைபொறுத்து  அருள்வாயே!

Sep 13, 2019

கமலாத்தாவின் இட்டலிகள்



கோயம்பத்தூர் வடிவேலம்பாளையம் கிராமத்தில் ,  தனது  கையாலலேயே  அரைத்த மாவால், விறகு அடுப்பில் தினமும் ஆயிரம் இட்டலிகள் சுட்டு , அவற்றை ஒரு இட்டலிக்கு  ரூபாய் ஒன்றுக்கு   மட்டுமே  விற்று , அப்பகுதி மக்களுக்கு சேவை செய்து வரும் எண்பது வயதான " இட்டலிப்  பாட்டி"கமலாத்தா  அனைவருக்கும் ஒரு வழிகாட்டி!
அவர்  பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்!
அவரது  சேவை பற்றி ஒரு பாடல் !

அன்புடன் 

ரமேஷ். 

கமலாத்தாவின் இட்டலிகள் 




இட்டலி  கள்இட்டு ரூபாய்க்கு ஒன்றென்று
சுட்டு  வழங்கும்  கமலாத்தா - தொட்டுக்க
சட்டினி சாம்பாரை  மட்டும் தராமல்
தருகிறாள் தாயன்பும் சேர்த்து


(இருவிகற்ப இன்னிசை வெண்பா )




Sep 11, 2019

பிரதோஷப் பாடல் - 22


பிரதோஷப் பாடல் - 22

இன்றைய பிரதோஷப் பாடல் - 

கைலாய  மலையை அசைக்க முயன்று, அதன் அடியில் அகப்பட்டுத் தவித்த ராவணன் , தன்  ஒரு தலையை வீணைக் குடமாக்கி, உடல் நரம்புகளை நாணாக்கி இசைத்த கானத்தைக் கேட்டு மனமகிழ்ந்த சிவபெருமான் , அவனை விடுவித்து , வலிமை மிக்க வாளொன்றையும் 
பரிசாக அளித்ததை விவரிக்கும் பாடல் .

அன்புடன் 
ரமேஷ் 


சிரத்தி  லொன்றெடுத்து  நரம்பை நாணாக்கி 
          வீணை உருவாக்கி விரல்மீட்டி

அரக்கன் இசைத்திட்ட  இசைக்கு மனமிரங்கி 
          வாளை  வரமளித்த வாகீசா !

கரியின் உருவம்கொண்ட  அரக்கன் தோல்உரித்து 
          இடையில் உடையணிந்த  உமைபாகா

தெரிந்தும் தெரியாது அறிந்தும் அறியாது 
          புரிந்த   பிழைபொறுத்து அருள்வாயே!

( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

Sep 1, 2019

Jasprit Bumrah -பூம் பூம் பூம்ரா

பூம் பூம்  பூம்ரா 

ஜஸ்பிரீத் பூம்ரா தன அபார போலிங்கால் இன்று விழுந்த ஏழு மேற்கிந்திய வீரர்களின் விக்கெட்டுகளில் ஆறை வீழ்த்தினார்.
அதிலொரு ஹாட்ரிக்கும் அடங்கும்.
சென்ற பந்தயத்திலும் ஏழே ரன்கள் கொடுத்து  ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் பூம்ரா.
அவரது சாதனையைப் பாராட்டி ஒரு லிமெரிக்!

அன்புடன்

ரமேஷ்



பூம் பூம்  பூம்ரா 

ஜஸ்   பிரித்து    பூமு    ராவின்     போலிங்கு *             * Bowling  

பார்த்த தில்லே இது வரையிது போலிங்கு#                 #- போல் இங்கு 

---------- ஒரு     பாலு    இன்ஸ்விங் 

----------அடுத்த பாலு அவுட்ஸ்விங்

விண் டீஸு**  பேட்ஸ்மென் எல்லாம் ஷிவரிங்^ !    ** windies ^ shivering