Search This Blog

Sep 11, 2019

பிரதோஷப் பாடல் - 22


பிரதோஷப் பாடல் - 22

இன்றைய பிரதோஷப் பாடல் - 

கைலாய  மலையை அசைக்க முயன்று, அதன் அடியில் அகப்பட்டுத் தவித்த ராவணன் , தன்  ஒரு தலையை வீணைக் குடமாக்கி, உடல் நரம்புகளை நாணாக்கி இசைத்த கானத்தைக் கேட்டு மனமகிழ்ந்த சிவபெருமான் , அவனை விடுவித்து , வலிமை மிக்க வாளொன்றையும் 
பரிசாக அளித்ததை விவரிக்கும் பாடல் .

அன்புடன் 
ரமேஷ் 


சிரத்தி  லொன்றெடுத்து  நரம்பை நாணாக்கி 
          வீணை உருவாக்கி விரல்மீட்டி

அரக்கன் இசைத்திட்ட  இசைக்கு மனமிரங்கி 
          வாளை  வரமளித்த வாகீசா !

கரியின் உருவம்கொண்ட  அரக்கன் தோல்உரித்து 
          இடையில் உடையணிந்த  உமைபாகா

தெரிந்தும் தெரியாது அறிந்தும் அறியாது 
          புரிந்த   பிழைபொறுத்து அருள்வாயே!

( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

No comments:

Post a Comment