Search This Blog

Showing posts with label Prose. Show all posts
Showing posts with label Prose. Show all posts

Dec 7, 2019

குமரிக் கண்டம்


திருவிளையாடல்  பாடல்கள் - ஒரு விளக்கம் 

சென்ற திருவிளையாடல் பாடல் 13-ல் , இந்திரனின் ஆணைக்கு உட்பட்ட  , வருணனின் ஏவலால் , கடல் மதுரையை மூழ்கடிக்க வந்ததாகவும், அதை 
வேலெறிந்து பாண்டிய அரசன் வற்றச்செய்ததாகவும்  இருந்தேன்.
இது பற்றி  நண்பர் சுந்தர் ' மதுரையை எப்படி கடல் கொள்ளமுடியும்?"  என்ற வினாவை எழுப்பியத்தின் விளைவே இந்தப் பதிவு.

அக்கேள்விக்கான விடை - 
பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மதுரை   இப்போதைய மதுரையல்ல! அது கடலில் மூழ்கி அழிந்த தென்மதுரை .

பல தமிழ் ஆய்வாளர்களின் கருத்துப்படி, இப்போதைய கன்னியாகுமரிக்கு தென்புறம் , ஒரு  நிலப்பகுதி இருந்தது. இது குமரிக் கண்டம் (லெமுரியா ) என்று அழைக்கப்பட்டது. ( வரைபடம் பார்க்கவும் ).  இங்கிருந்த மதுரையே முதல் சங்கத்தின் இருப்பிடம். 

இப்பகுதியை   பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள்.  அந்த மன்னர்களில் சிவபெருமான், முருகர் ஆகியோரும் அடங்குவர். திருவிளையாடல் புராணம் நடந்தது இந்த பாண்டிய நாட்டில் என்று கருதலாம்.





குமரிக் கண்டம்


கடலால் இப்பகுதி அழிந்தபிறகு, கபாடபுரம் பாண்டிய நாட்டின் தலைநகராக ஆனது. இடைச்சங்கம் இங்கு அமைக்கப்பட்டது.

இதுவும் கடலுக்கு இரையானபிறகு , பாண்டியநாடு இன்றைய தமிழத்தின் தென் பகுதியில் அமைந்தது.  இப்போதைய மதுரை அதன் தலைநகரானது. இதுவே  கடைச்சங்கம் அமைந்த இடம்.

இத்தகவல்கள் சில தமிழ், சமஸ்க்ருத நூல்களின்  அடிப்படையில் கணிக்கப்பட்டவை. விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும் விவரம் அறிய விரும்புவோர் https://www.slideshare.net/sagarben/lemuria-56619904 என்ற தொடர்பை பார்க்கவும்.


Apr 30, 2017

தமிழா! விழித்தெழு!


சில நாட்களுக்கு முன்பு  நிதி ஆயோக் ( Niti Aayog ) அமைப்பு மேற்கொண்ட  ஒரு கணக்கெடுப்பின்படி, தமிழ் நாடு மூன்றாம் இடத்திற்கு தள்ளப் பட்டு இருக்கிறது. கருநாடக மாநிலம் முதல் இடத்தையும், ஆந்திர மாநிலம் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன. இது எல்லாத் தமிழர்களுக்கும் கவலையை வரவழைக்கும் ஒரு செய்தி.
இது பற்றி ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை.

அன்புடன் 
ரமேஷ் 

முக்கியமான பி.கு: 
நிதி ஆயோக் ( Niti Aayog ) அமைப்பின்  கணக்கெடுப்பு பற்றிய குறிப்பை கட்டுரையின் முடிவில் காண்க.

தமிழா! விழித்தெழு!

தமிழா! விழித்தெழு!
தூங்கிவிட்டாயா?
கல்தோன்றி மண்தோன்றாக்  காலத்தே முன்தோன்றி மூத்தவன் நீ!
விந்தியத்தின் தென்திசைத்  திராவிடத்திருநாட்டின் தலைமகன் நீ!
மற்ற திராவிட இனங்களுக்கு முன்னோடி நீ!

இப்படி இருக்கையில்

அண்டைத்   திராவிட நாடுகளான கர்நாடகமும் ஆந்திரமும்  உன்னை மிஞ்சிவிட்டனவே!
கர்நாடகம் காவிரித் தண்ணீரைத் தர மறுக்கலாம்!
நாமும் அதை மறந்துவிடலாம்!
ஆந்திரம் கிருஷ்ணா நதி நீரைத் தராமல் இருக்கலாம்!
அதையும் நாம் மன்னித்துவிடலாம்!

ஆனால்-

இன்று இந்த  இரண்டு மாநிலங்களும்  நம் தமிழ் நாட்டை மிஞ்சி விட்டனவே!
இது பெரும் இழுக்கன்றோ?
இந்த நிலைமை உடனே மாற
விழித்திடுவோம்!  கொதித்தெழுவோம் !

"கே"வும் "ஜே "வும், பதவியில் இருக்கையில்  
கனியும், சசியும் உதவிகள் செய்கையில்  
மாறன்,ராஜா, மற்ற "மாண்பு"களும்   
விழுக்காடு பெற்றே பழுதில்லாமல் வேலையை   முடிக்கும்   அலுவலர் பலரும் 

இவர்கள் எல்லாம் இருக்கும் வரையில்
லஞ்ச லாவண்யப்  போட்டியில் நம்மை மிஞ்சிட  ஒருவரும் இல்லை என்று 
இறுமாந்திருந்த நிலைமை மாறி  
மூன்றாம் இடமே இன்று பெற்றோமே !
இந்த நிலை இன்னும் நீடிக்கலாமோ?

வீறு கொண்டுநீ விழித்தெழு தமிழா ! 
வெற்றி விரைவில் வந்து உன்னை  அடையும்!

Context :

Survey Report by Niti Aayog 
Karnataka, Andhra Pradesh & Tamil Nadu Most Corrupt:
Of  20 states surveyed , people in Karnataka (77%) faced corruption the most in accessing public services. This is followed by Andhra Pradesh (74%) and Tamil Nadu (68%),











Dec 2, 2016

ஊதா கலரு ரிப்பன், யாரு உங்க அப்பன் ?

ஊதா கலரு ரிப்பன், யாரு உங்க அப்பன் ?

ஊதா கலரு ரிப்பன், யாரு உங்க அப்பன் ?
சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்.

ரோஜா கலரு பொம்மி, யார் உங்க மம்மி?
சொல்லடி அவளுக்கு நான் சபாஷ் சொல்லணும் 
 
மேலுள்ள  வரிகளுடன் கூடிய திரைப்பாடல் , சில நாட்களுக்குமுன் மிகப் பிரபலமாக இருந்தது. கிடைக் கேட்கும்போது எனக்குத் தோன்றிய எண்ணம் - " சே, என்ன ஒரு ரௌடித்தனமாக இருக்கிறது? திரைப் படைப்பு பாடல்களின் தரம் இப்படிக்கு குறைந்து போய்விட்டதே ! " என்பதுதான். (இதைவிட மோசமான பாடல்களும் இருக்கின்றன என்பதும் உண்மைதான்).
 
இதைக் கேட்ட சில நாட்களுக்குப் பின் சென்னை அண்ணா நூற்றாண்டு புத்தக நிலையத்தில் அமர்ந்து புத்தகங்களை படித்துக்கொண்டிருக்கும் போது ,சங்க கால இலக்கியமான நற்றிணை -யைப் படிக்க நேர்ந்தது.
 
என்ன ஆச்சரியம்.! நற்றிணையில் ஒரு பாடல் , ஊதா கலர் ரிப்பன் பாட்டுக்கு முன்னோடியாக இருக்கக் கண்டேன். பழந் தமிழ்ப் பாடல்களின் கருத்து , வரிகள் இவைகளை பின்பற்றி பல திரைப்படப் பாடல்கள் இதற்க்கு முன்னே வந்திருந்தாலும் , இது எனக்கு பெருத்த  வியப்பையே அளித்தது. 
 
என்ன சொல்ல? அந்த காலத்திலேயே நம்ப பசங்க தேறிட்டாங்க என்றா? 
 
ஆனாலும் ஒன்றை ஒத்துக்கொள்ளவேண்டும். கருத்து அதேதான் என்றாலும் , சொல்லப்பட்டிருந்த  விதமும், நயமும் வியக்கத்தான் வைக்கிறது!
 
அந்தப் பாடல் இதோ! படித்து மகிழுங்கள்!
 
அன்புடன்

ரமேஷ்
 
அழகுபட குழந்தை அரிமதர் மழைக்கண்
பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல்
திருமணி புரையும் மேனி மடவோன்
யார் மகள் கொல் ? இவள் தந்தை வாழியர் !
துயரம் உறீஇனள் எம்மே: அகல் வயல்
 
செவ்வரி படர்ந்த குளிர்ந்த கண்களையும், பல்வகைப் பூக்களால் தொடுக்கப்பட்ட தழையுடையை அணிந்தவளும், நீல மணியொத்த மேனியளு மான இவ்விளம்பெண், அசையாத உள்ளம் உள்ள என்னையே அவளை எண்ணித் துயருரைச் செய்தாளே !
இவளைப்  பெற்று எனக்கு உதவிய இவள் தந்தை நெடுங்காலம் வாழ்க !

அரிவளர் அரிந்தும் , தருவளர்ப் பெற்றும்
தன்சேறு தாஅய் மதனுடை நோன்தாள்
கண்போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண்தேர்ப் பொறையன் தொண்டி
தன்திறம் பெறுக இவள் ஈன்ற தாயே!


இவளை ஈன்ற தாயும் திண்ணிய தேரையுடைய பொறையனது தொண்டிநகர் போன்ற சிறப்பைப் பெறுவாளாக!

("அறிவளர்" என்று தொடங்கி, "பூக்கும்" என்று முதல் மூன்று வரிகளின் மொழிபெயர்ப்பு இங்கு தரப்படவில்லை.)

Feb 14, 2016

அப்பா

அப்பா

சென்னையிலிருந்து  பெங்களூருக்கு  ரயில் பயணம்.

அதிகாலையில் புறப்படும் சதாப்தி ரொம்ப சௌகரியமாய் இருந்தாலும் , நாலு மணிக்கே எழுந்திருந்து அரக்கப் பறக்க ஓடி , அஞ்சு மணிக்கு முன்னாலேயே வீட்டை விட்டு கிளம்ப இப்போதெல்லாம் முடிவதில்லை. பிருந்தாவன்  எக்ஸ்பிரஸ் ஏழு மணிக்கு கிளம்புவதால், இன்னும் ஒரு மணி அவகாசம் கிடைக்கிறது
.
630 மணிக்கு ஸ்டேஷன் வந்து, A .C சேர் காரில் சீட்டைத் தேடிப் பிடித்து உட்கார்ந்தாகிவிட்டது. ஜன்னல் ஒர சீட் .

சீட்டில் உட்கார்ந்து செட்டில் ஆனேன். வண்டி புறப்பட இன்னும் அஞ்சு நிமிடம்தான்.  பக்கத்தில் இருந்த இரண்டு சீட்டுகளும் நிரம்பவில்லை. யார் வரப் போகிறார்கள் என்ற க்யூரியாசிட்டியோடு , அவசரம் அவசரமாக ரயில்பெட்டிக்குள் ஏறுபவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தேன். நான் ஏறும் அவசரத்தில் , ரிசர்வேஷன் சார்ட்டில் பார்க்க மறந்துவிட்டேன். ஒருவேளை ஒருத்தரும் வரவில்லை என்றால் , கொஞ்சம் கையைக், காலை நீட்டி வைக்க சௌகரியமாக இருக்கும் என்ற ஒரு நப்பாசை கூட.

 

ரயில் மெல்ல நகர ஆரம்பித்து விட்டது. சரி, இன்னிக்கு நமக்கு கொஞ்சம் லக் இருக்கு என்று நினைப்பதற்குள் . பின் பக்கத்தில் இருந்து வந்து நின்றார்கள் இரண்டு பேர் - முப்பதுக்கு மேல் வயதான ஒரு ஆணும்,ஒரு ஏழு வயதுப் பெண் குழந்தையும்.

குழந்தை கொள்ளை அழகு.

அதிதி- என் பேத்தி- இந்த வயதில் இப்படித்தான் இருப்பாள் என்று கற்பனை ஓடியது.

 பெட்டி, பைகளை யதாஸ்தானம் செய்துவிட்டு அப்பா என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தார். குட்டிப் பெண் அதற்கு அடுத்த எயில் (aisle)சீட்டில் .

ரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரித்தது. குட்டிப் பெண் முகத்தை "உம்" என்று வைத்துக்கொண்டிருந்தாள் .என்னைப் பார்த்து கையைக் காட்டிஅப்பாவின் காதில் "குசு - குசு என்று எதோ சொன்னது. என்ன சொல்லியிருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், வேண்டும் என்றே மூஞ்சியை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டு, வெளியே வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்தேன். அப்பா ' இரு ,இரு" என்று சமிஞ்கை செய்து அவளை அடக்குவதை ஓரக்கண்ணால் பார்க்க முடிந்தது.

 ஒரு ஐந்து நிமிடம் இந்த நாடகம் தொடர்ந்தது. என்னால் அதற்கு மேலும் அடக்கமுடியவில்லை. அப்பாவிடம் கேட்டேன்--


 "குழந்தை என்ன சொல்றாள்?"
ஹி , ஹி , ஒண்ணும் இல்லை, ஜன்னல் ஒர சீட்டு வேணுமாம். கேக்கறா. இருடி, தாத்தாவை டிஸ்டர்ப் செய்யக்கூடாது" -ன்னு சொல்லிண்டு இருந்தேன்."
'
அதனால் என்ன, கொழந்தைதானே, தாரளமா  வரட்டுமே"

 என்று கூறியவாறு, என் ஜன்னல் ஒர சீட்  ஆசைகளுக்கு ஒரு மூட்டை கட்டி விட்டு சீட்டை மாற்றிக்கொண்டேன்.

அப்போது அந்த குழந்தையின் முகத்தில் ஒரு பூரிப்பு  -- ஆகா, பார்க்க ஆனந்தமாக இருந்தது.

 

சதாப்தியில் ரயில்வேஸ்- ஏ சாப்பாடு கொடுத்து விடுகிறார்கள். ஒரு வகையில் இது சௌகர்யம் என்றாலும் , அவன் கொடுப்பதை சாப்பிட்டாகவேண்டிய கட்டாயம். ஆனால் சாப்பிட்டுவிட்டு தூங்கலாம்! மற்ற ரயில்களில், இடைவெளி விடாமல் , இப்படியும் அப்படியுமாய் , தோசை, பூரி, பஜ்ஜி, ஆம்லெட், பிஸ்கேட் , சிப்ஸ் இத்யாதி இத்யாதி வகையறாக்களை விற்றுக்கொண்டு போவார்கள். எல்லாருக்கும் சாப்பிடவேண்டும் என்ற சபலம் வராமல் இருக்காது.  இதற்காக வேண்டியே , "டிபன் கட்டிக் கொடுக்கிறேன்" என்று சொன்ன மனைவியிடம், : உனக்கு எதுக்கு சிரமம்," என்று சொல்லி விட்டு வந்து இருந்தேன்!.

 

எனக்கே இப்படி என்றால் அனன்யா விற்கு ( அவள் பெயர்- கே.அனன்யா, 3 rd ஸ்டாண்டர்ட்  சீ செக்ஷன்- அப்பா -கிருஷ்ணன், அம்மா - பவித்ரா, டீச்சர்- மாலதி மிஸ், ரொம்ப ஸ்ட்ரிக்ட்,- பிடிச்ச ப்ரெண்ட்-பாவனா, எனிமி - மகேஷ் போன்ற கம்ப்லீட் பயோ டாடா சொல்லி முடித்து விட்டாள் .) கேட்கவா வேண்டும்ஒவ்வொரு வியாபாரி போகும் போதும் ' அப்பா, இது வேணும்" என்று கோரிக்கை. சிலதை வாங்கிக் கொடுத்தார் கிருஷ்ணன். மற்றதற்கு எல்லாம் ஏதோதோ காரணங்கள் சொல்லி சமாளித்தார். மனுஷனுக்கு ரொம்ப பொறுமை என்று நினைத்தேன்.

ஒரு இரண்டு மணி நேரம்  கழித்து ஐஸ் கிரீம் விற்பவன்  வந்தான்.. 'ஐஸ் க்ரீம் ' என்ற வார்த்தையைக் கேட்டதுமே அனன்யாவின் கண்கள் அகல விரிந்தன! அந்தக் கண்களாலேயே அப்பாவுக்கு கோரிக்கை வைத்தாள் குழந்தை.

 

கிருஷ்ணன் சாமர்த்யசாலி .

எப்படியும் ஐஸ் கிரீம் வாங்கித் தராமல் இருந்தால் விட மாட்டாள் என்று தெரியும்.
அதனால் அவளுடன் ஒரு அக்ரீமெண்ட் போட்டுக்கொண்டான்.


" அனன்யா, நான் ஐஸ் கிரீம் வாங்கிர்த் தரேன்! ஆனா ஒரு கண்டிஷன், கண்டோன்மென்ட் ஸ்டேஷன் வர வரைக்கும் நல்ல பொண்ணா , இது வேணும், அது வேணும் -ன்னு தொந்தரவு பண்ணாம இருந்தா, இறங்கரத்துக்கு முன்னாடி வாங்கித் தருவேன்".


இது அனன்யாவுக்கு சரியாகப் பட்டது.

 "ப்ராமிஸ்?"
"
ப்ராமிஸ்!"
"
தம்ப் ப்ராமிஸ்?"
"
தம்ப் ப்ராமிஸ்!"

 ஒப்பந்தம் செய்து முடிந்தாயிற்று.

ஒரு ஐந்து நிமிடம் போனது.

 "அப்பா"--

ஆள்காட்டி விரலால் கிருஷ்ணனின் தோளில் குத்தி எழுப்பினாள் அனன்யா.


"என்னம்மா?"
'
டூட்டி பிரூட்டி  தான் வேணும்."
"
சரி."
"
நீயும் சாப்பிடனும்."
"
சரி."
"
ஒனக்கு ஒண்ணு , எனக்கு ஒண்ணு !"
"
ஓகே ."

அப்பா, உனக்கு ஐஸ் கிரீம் பிடிக்குமா ?
"
பிடிக்குமே."
"
எவ்வளோ பிடுக்கும்?"
"
இவ்வளோ !"-

 கிருஷ்ணன் கை அகல விரித்துக் காட்டினான்.

 

"எந்த ஐஸ் க்ரீம் உணல்லு ரொம்பப் பிடிக்கும்?"
"
சாக்லேட்!"
"
அப்போ,நம்ப ஒரு டூட்டி பிரூட்டி, ஒரு சாக்லேட் ஐஸ் கிரீம் வாங்கலாம்."
"
சரி."
"
நீ எனக்கு ஒரு வாய் சாக்லேட் கிரீம் தா, நான் ஒனக்கு ஒரு வாய் டூட்டி பிரூட்டி தரேன். சரியா?"
"
ஓகே. டீல் !"

 இருவரும் ஒரு "ஹை பய்வ்" கொடுத்துக்  கொண்டார்கள்.

 "உங்கப்பா உனக்கு ஐஸ் க்ரீம் வாங்கி தருவாரா?
"
தருவாரே!"

உரையாடல் தொடர்ந்தது.கிருஷ்ணன் அவரது சின்ன வயது ஐஸ் க்ரீம் கதைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான்.
நான் தூங்கப் போய்விட்டேன்.

 

 கண்டோன்மென்ட் ஸ்டேஷன் வருவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்னாலேயே , கச்சா முச்சா என்று சத்தத்துடன் இறங்குவதற்கு ஆயத்தம் செய்ய பலர் ஆரம்பித்தார்கள். நானும் இந்த சத்தத்தில் முழித்துக்கொண்டு விட்டேன்.

அனன்யா " அப்பா, ஐஸ் கிரீம்," என்று தொண  தொணக்க ஆரம்பித்து இருந்ததாள் !
கிருஷ்ணன் ஒரு பதபதைப்புடன் ஐஸ் கிரீம் கொண்டு வருபவனைத் தேடிக்கொண்டிருந்தான்.

அவன் வருவதாகக் காணோம் .

 அப்போது அந்தப் பக்கம் வந்த காபி விற்பவரிடம் கிருஷ்ணன், " ஏம்பா!அந்த ஐஸ் கிரீம் ஆளை கொஞ்சம் வரச் சொல்லேன்" என்று சொல்லி அனுப்பினான்.

 

குழந்தையின் முகம் சுருங்கி , உதடுகள் பிதுங்கின!.எந்த சமயமும் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடலாம்.

நல்ல வேளை ! " கூல் டிரிங்க் , ஐஸ் கிரீம் " என்ற கூவலுடன் விற்பவன் வரவும், அனன்யாவின் கண்களில் மீண்டும் ஒளி  மின்னல்!

 ஐஸ் கிரீம்! இங்க வாப்பா, "

 நூறு ரூபாய்த் தாள் ஒன்று நீண்டது.

 " ஒரு டூட்டி பிரூட்டி, ஒரு சாக்லேட்"

"சாரி சார், ஒரே ஒரு ஐஸ் கிரீம் தான் இருக்கு. - டூட்டி பிரூட்டி ;

மீதி எல்லாம் காலி!"

 கிருஷ்ணன் அதை வாங்கி குழந்தையிடம் கொடுத்துவிட்டு, ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
'கொடுத்த வாக்கைக் காப்பாற்றியாகி விட்டது".

அனன்யா கொடுக்கப்பட்ட ஐஸ் கிரீமை சாபிடாமல் கையிலேயே வைத்துக் கொண்டு இருந்தாள்.

 "ஏண்டா செல்லம், ஏன் சாப்பிடலே? சீக்கிரம். கண்டோன்மெண்டுக்கு அப்பறம் உடனே சென்ட்ரல் வந்துடும்.  க்விக்,க்விக் "
'
ஒண்ணுதானே இருக்கு; உனக்கு சாக்லேட் வரல்லையே?"
"
பரவாயில்லடா செல்லம்., நீ சாப்பிடு."
 '
ஒனக்கு ரொம்பப் பிடிக்கும்னு சொன்னே?"
"
அது உனக்காகச் சொன்னேன்டா கண்ணு ; ஆக்சவாலா எனக்கு ஐஸ் கிரீம் பிடிக்காது. டாக்டர் கூட நான் ஐஸ் கிரீம் சாபிடக்கூடாதுன்னு சொல்லி இருக்கார்"
"
நிஜமாவா?"
"
ஆமாண்டா செல்லம்."
"
ப்ராமிஸ்?"
"
ப்ராமிஸ்!"
"
தம்ப் ப்ராமிஸ்?"
"
தம்ப் ப்ராமிஸ்!"

 குழந்தை சமாதானம் அடைந்து ஐஸ் கிரீமை சாப்பிடத் தொடங்கினாள் .
நானும், கிருஷ்ணனும் ஒரு புன்னகையைப் பரிமாறிக் கொண்டோம்.

என் நினைவுகள் பல வருடங்கள் பின்னோக்கிச் சென்றன.

நான் சின்னவனாக இருக்கும்போது அப்பா அடிக்கடி மாம்பழம் வாங்கி வருவார். வீட்டில் எல்லோருக்கும் மாம்பழம் ரொம்பப் பிடிக்கும்.

அதன் கதுப்புகளை வெட்டி எனக்கும், என் தங்கைக்கும் கொடுப்பார். கொஞ்சம் அம்மாவுக்கு.

 அவர் மட்டும் கொட்டையை எடுத்துக்கொண்டு அதை  உறிஞ்சி சாப்பிடுவார்--.-" எனக்கு  கொட்டையை   சப்பி   சாப்பிடறதுதான் ரொம்பப் பிடிக்கும்" என்று சொல்லிக்கொண்டு!

 அதன் அர்த்தம் இப்போது புரிந்தது.

 கண்களில்  நீர் முட்டியது.

 

 

 

Sep 5, 2015

கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !

சற்று முன் பின் வரும் பதிப்பை, "eluthu.com " ல் பதிவு செய்திருக்கிறேன். உங்கள் கருத்து? பகிர்ந்து கொள்ளுங்கள்!

நன்றி 

ரமேஷ் 

கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !
கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !
அப்படி என்றால், உலகத்தில் நடக்கும் எல்லாத் தவறுகளுக்கும், கொடுமைகளுக்கும், காரணம் என்ன என்று நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்!
வேண்டாம்!
கடவுள் என்று ஒருவன் (ஒன்று) இருந்தால், அவனே (அதுவே) எல்லாவற்றிற்கும் காரணம் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம்  இல்லையா?
கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !
இல்லையென்று சொல்வீர்களானால் , உங்கள் தோல்விகளுக்கும், சோகங்களுக்கும் வேறு ஒரு காரணத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமே----குடித்துவிட்டுக் கிடப்பவன், தான் குடித்ததற்கு எதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பதைப் போல!
 கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !
அப்படிச் சொன்னால் , உங்கள் இயலாமையையும், முயலாமையையும் இறக்கி வைக்க ஒரு சுமைக்கல்  இல்லாமல் போய்விடுமே!
கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !அப்படிச் சொல்லிவிட்டால், வாரம் ஒரு முறை கோவில் சென்று வணங்கி,  உண்டியலில் காணிக்கை செலுத்தி , எல்லாம் அவன் செயல் என்று விட்டுவிட்டு, நாம் செய்யும் வக்கிரங்களின் விளைவுகளுக்கும் அவனே பொறுப்பு என்று தட்டிக் கழித்துவிட முடியாதே!
கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !
அதன் பிறகு, எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்!

 கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !

Aug 29, 2015

பவித்ரா வரலக்ஷ்மி விரதம் கொண்டாடுகிறாள் .

 

பவித்ரா வரலக்ஷ்மி விரதம் கொண்டாடுகிறாள் .


 பெரிய பன்னாட்டு நிறுவனமொன்றில்
பதவி வகிக்கும் பவித்ரா
வரும் வெள்ளிக்கிழமை
வரலக்ஷ்மி விரதம் கொண்டாடப் போகிறாள்.
 
அம்மாவுமில்லாமல்,மாமியாருமில்லாமல்
தலை நோம்புக்குப் பிறகு
முதல் தடவை
தனியாக செய்யப் போகிறாள்.
அவள் புருஷன் கூட " அவுட் ஆப் தி கண்ட்ரி ".
ஒரே டென்ஷன்.
 
பல தடவை தொலைபேசியிலும் ஸ்கைப் பிலும்
அம்மாவிடமும் , மாமியாரிடமும் பேசி
என்னன்ன செய்யவேண்டும் என்றும்
 'எது நம்ம ஆத்துப் பத்ததி ' என்றும் விசாரித்து
செக் லிஸ்ட் செய்து  கொண்டாகிவிட்டது. 
 
வேண்டிய  சாமானெல்லாம்  வாங்கி  வைத்துவிட்டாள்.
அலுவலகத்துக்கும் வெள்ளிக்கிழமை விடுப்பு சொல்லிவிட்டாள்.
பூஜை செய்ய வாத்தியாருக்கும், சமையல் மாமிக்கும்  சொல்லியாகிவிட்டது.  ( அன்று சாயங்காலம்
சுமங்கலிகளை அழைத்து வெற்றிலை பாக்குடன் ஹை டீ யும் கொடுப்பதாக ஏற்பாடு.)
 
 நாளை வெள்ளிக்கிழமை !
 வியாழன் அன்று மாலையே வெள்ளிக் கலசத்தில் தேங்காய் வைத்து ,
அம்மன் முகத்தைப் பொருத்தி 
மஞ்சள் கொத்து , மாவிலைத் தோரணங்களுடன்  அலங்காரம் செய்தாகிவிட்டது.
 
இரவு முழுதும் எக்சைட் மென்ட் டில் தூக்கம் வராமல் விடிகாலையிலேயே எழுந்துவிட்டாள்.
குளித்து முடித்து ரெடிமேட் பட்டு மடிசார் கட்டிக்கொண்டாள்.
கை , காது , கழுத்து நிறைய நகை அணிந்துகொண்டாள்.
பூஜை  சாமான் எல்லாம் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள்.
எல்லாம் ரெடி,. வாத்தியாரவரவேண்டியது தான் பாக்கி.
 
நேரம் இருப்பதால் ,அம்மனுடன் சேர்ந்து ஒரு செல்பி எடுத்து
அம்மாவுக்கு அனுப்பிவிட்டு வாத்தியாருக்காகக்  காத்துக் கொண்டிருக்கையில்   ---------
 
அம்மாவிடமிருந்து போன்.!
 
எடுத்துப் பேசுகிறாள் பவித்ரா.
 
' ஏண்டி, இவளே  , கழுத்திலே மாங்கல்யம் எங்கேடி ??"
 
 பவித்ராவுக்கு ஷாக்.!
 ஓடுகிறாள் மாடிக்கு -
 எப்போதோ கழட்டி , எங்கேயோ மாட்டி வைத்த ,
மாங்கல்யச் சங்கிலியைத்
தேடி எடுத்து சூடிக் கொள்ள!  
 

 அன்புடன் 

ரமேஷ்