Search This Blog

Showing posts with label kurum paadal. Show all posts
Showing posts with label kurum paadal. Show all posts

Oct 31, 2018

நேற்று-இன்று - நாளை

நேற்று-இன்று - நாளை 

நேற்று நடந்ததை யோசி 
அது அளித்த பாடத்தை சுவாசி
இன்று நடப்பதை நேசி 
சிறு  துன்பங்கள்-  அவை  தூசி ! 
நாளை நன்றாய் விடிய 
இறைவனைப் பணிந்து யாசி.


அன்புடன் 

ரமேஷ் 

Sep 7, 2018

வலிகள்


வலிகள் 






வயதாகிவிட்ட தாத்தாவிற்கு 
முதுகுத் தண்டின்  L -4 L -5  ஜாயிண்ட்-இல்   ப்ரொலாப்ஸ்*  (Prolapse)

ஒன்றரை வயதுப் பேத்தியைத் தூக்கிக் கொஞ்சினால் 

முதுகு வலிக்கிறது.

தூக்க முடியாமல் போனதால்

மனது வலிக்கிறது!----------------------


அன்புடன் 

ரமேஷ் 

Jul 19, 2018

அகலிகை





அகலிகை 

ராமன் கால் பட்டு 
பெண்ணான அகலிகை 
மீணடும் கல்லானாள் -
இன்றைய ராவணர்களுக்கு பயந்து.

Jul 18, 2018

சேதுவை மேடுறுத்தி ----

சேதுவை மேடுறுத்தி ----









லக்ஷ்மணன்   கோடு  போட்டான்

சீதை அதைத்  தாண்டியதால்

இலங்கைக்கு

ராமன் ரோடு போட்டான்.