Search This Blog

Nov 8, 2026

தீபாவளி வாழ்த்து

 தீபாவளி வாழ்த்து.

தீபாவளி என்றாலே கடைத்தெருக்கள் களை கட்டிவிடும். விலைத் தள்ளுபடிகள், ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்றெல்லாம் விளம்பரங்கள்! 

இதையே பின்பற்றும் வகையாக, இன்றைய வாழ்த்துக் கவிதைகள் இரண்டு - முதலாவது வெண்பா வடிவில்! மற்றது அதனோடு ஒட்டி வரும் இலவசம்! படித்து மகிழுங்கள்!

அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துகள்

அன்புடன்

ரமேஷ்

1.

வெள்ளி முளைக்கும் பொழுதிற்கு முந்தி{யே)

பள்ளி எழுந்து இறையை வணங்கி

வெளியிருள் நீஙக தீபங்கள் ஏற்றும்நம்

உள்ளத் திருள்நீங்க வாழ்த்து                                         

2. 

துலக்கிநம் வீடுகளைத் தூய்மை செய்து

இலக்குமியை வரவேற்க தீபம் ஏற்றி

உலகத்தோர் எல்லாரும் ஒன்றாய்ச் சேர்ந்து

நலம்காண நானின்று வாழ்த்துச் சொல்வேன்!