Search This Blog

Jan 29, 2018

பிரதோஷப் பாடல்- 4

பிரதோஷப் பாடல் 4

இன்று- திங்கட்கிழமை, திருவாதிரை நட்சத்திரம், திரயோதசி.
இந்த மூன்றும் சேர்ந்து வரும் பிரதோஷ தினம் 108 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருமாம்!
இந்த பிரதோஷ தினத்தன்று சிவபெருமானைத் துதித்து, ஒரு பாடல்!

அன்புடன்
ரமேஷ் .

பிரதோஷப் பாடல்- 4


காதினிக்கும் பஞ்சாட் சரசிவ நாமத்தை 
ஓதித்  தொழுபவர்க் கெல்லாமிம்  மேதினியில்
சாதிக்க ஏலாத*  காரியம்  இல்லையே  
ஆதிரை யானருளி  னால் 

                                                                      

* ஏலாத = இயலாத 

Jan 20, 2018

ஒரு நீண்ட ரயில் பயணம்

வாழ்க்கையே ஒரு நீண்ட ரயில் பயணம்.
அப்பயணம் இப்பிறவியுடன் முடிந்து விடுவதில்லை.
அது பற்றி

அன்புடன்
ரமேஷ்



ஒரு நீண்ட ரயில் பயணம்


புறப்பட்ட இடம்விட்டு இறுதியாய் இறங்குமிடம்
சேர்ந்தடைய சிறப்புரயில்  இல்லாத காரணத்தால்
மாறிப் பலரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக
ஏறித்   தொடர்ந்தால்தான்  இப்பயண மேநிறையும்


முந்திப் பலபயணம் முடித்த பின்னாலே
இந்த வண்டியிலே ஏறிப்  பயணித்தார்.
இந்நாள்  பயணத்தில் இறங்க வேண்டுமிடம்
வந்து  சேர்ந்தபின்  வேறோர் ரயில்பிடிப்பார்.

உடுத்து முடித்ததெடுத்த பழைய துணிகளையும்*
மடித்து எடுத்துவைத்த மீதித் துணிகளையும்**
அடைத்த பையிரண்டை கையில் பிடித்திழுத்து 
 இடத்தைக் காலிசெய்து இறங்கப் போகின்றார்.

படித்து முடித்துவிட்ட  நாட்செய்தித் தாள்களையும்
குடித்து முடித்துவிட்ட காலிநீர்க் குவளையையும்
படுத்துக்  கலைத்துவிட்ட  படுக்கை  விரிப்பினையும்
பிடித்துப் பழகிப்போன  பயண உறவுகளையும்

விடுத்துத் துறந்துகீழே ரயிலை விட்டிறங்கி
அடுத்த ரயிலிலேற   செல்லுவதைக்  காணுகின்றோம்.
கடைசி ரயில்நிலையம் சென்று சேரும்வரை
இடைவெளிக லில்லாமல்   இப்பயணம் தான்தொடரும் .


*, **, சேர்த்த பாவ, புண்ணியங்கள்



Jan 14, 2018

பொங்கலும் பிரதோஷமும் - (பிரதோஷப் பாடல் 3)

பொங்கலும் பிரதோஷமும் 
(பிரதோஷப் பாடல் 3)

அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
இன்று தை  மாத முதல் நாளும் - பொங்கலும் - பிரதோஷமும் சேர்ந்து வருகின்றன.
இந்த நாளில் சிவபெருமான் பொங்கலன்று நடத்திய ஒரு திருவிளையாடலைப்  பார்க்க (கேட்க)லாமே !

அன்புடன் 
ரமேஷ்.



முன் குறிப்பு :

பாண்டிய அரசன் அபிஷேக  பாண்டியன் மதுரையை ஆண்டு வருகையில், மாநகர் மக்களை  மகிழ்ச்சியில் ஆழ்த்திடும் விதமாக, சிவபெருமான் ஒரு சித்தர் வடிவில் வந்து, பல சித்துகள்  புரிந்து வந்தார். இது பற்றி கேள்விப்பட்ட அரசன், அவரே சிவபெருமான் என்று அறியாததால், அவரை தனது அரசவைக்கு அழைத்தான். சித்தர் , " முற்றும் துறந்த எனக்கு அரசனால்  ஆவது என்ன ? என்னை  சந்திக்க அவனல்லவோ வரவேண்டும் " என்று கூறி அதை மறுத்தார். 

இதன் பின்னர், மகர சங்கராந்தி அன்று சோமசேகரக் கடவுளைத் தரிசிக்க கோவில் சென்ற அரசன் அங்கு சித்தரை சந்தித்தான். சந்திக்கையில், அவரை சோதிக்கவும் எண்ணினான். அப்போது நடந்த கதை இது 

பாடல்

தைத்திங்கள் முதலாம்நாள்  சித்தரைச்  சந்தித்து சோதிக்க அவரை* எண்ணி
மத்தகக் கல்லிதுவும்**  கரும்பினைக் கவ்வுமோ காட்டெனக்   கேள்வி கேட்க
சித்தரின் சித்தத்தால் சீவன்^   அடைந்தமா   கரும்பினை உண்ணக் கண்டு
சித்தரே சிவனென்று புத்தியும்  தெளிந்தனன் பாண்டியன் அபிஷேகனே.

சோதிக்க அவரை = அவரை சோதிக்க என்று அறிய 
** மத்தகக் கல் =  கல் மத்தகம்= கல்லால் ஆன யானைச் சிற்பம் 
^ - சீவன்=ஜீவன்= உயிர் 
^^ மா=விலங்கு, யானை 

பாடற்பொருள் :

தைமாத முதல் நாளன்று, சித்தரை சந்தித்த மன்னன் அபிஷேக பாண்டியன், அவரை சோதிக்க எண்ணி, கோவிலில் இருந்த ஒரு கல்யானையின் சிற்பத்தைக் காட்டி , " உம்மால் இந்த யானையை, ஒரு கரும்பை உண்ணச்  செய்ய இயலுமா?" என்று வினவினான்.  உடனே சித்தரும் யானையை நோக்க , அது உயிர் பெற்று , கரும்பைக்  கவ்வி உண்டது. இது கண்ட அரசன், சிவனே சித்தர் வடிவில் வந்திருக்கிறார் என்று உணர்ந்து அவரை வணங்கி அருள் பெற்றான்.

Jan 10, 2018

ஊர்சென் றடைந்தபின்னே வாட்சப்பில் பேசுகிறேன்

ஊர்சென்றடைந்தபின்னே வாட்சப்பில் பேசுகிறேன்




இது whatsapp , twitter , facebook உலகம்.  wifi மூலம் இணைய தளத்தில் இணைந்து எப்போதும் மற்றவருடன் தொடர்பு கொண்டிருப்பதால், பலருக்கு எதிரே உட்கார்ந்திருப்பவரிடம்  பேசக்கூட முடியாமல் போகிறது.

வீட்டுக்கு விருத்தினர் வந்தால் அவருக்கு காபி,டிபன் கொடுத்து உபசாரம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை - நம் வீட்டு wifi யுடன் connect செய்வதற்கான paasword -ஐ கொடுத்துவிட்டால் போதும். வந்தவர்கள் எல்லாம் கையிலுள்ள ஐ- பேட் , மொபைல் இத்யாதி கருவிகளை நோண்டிக்கொண்டு  இருப்பார்கள். வந்த வேலையைப் பற்றிக் கூட பேச மறந்துவிடுவார்கள்.

உங்களில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம், வியப்பெதுவும் இல்லை!

இந்த நிலைமை பற்றி ஒரு கவிதை.


அன்புடன் 

ரமேஷ் 

ஊர்சென் றடைந்தபின்னே வாட்சப்பில் பேசுகிறேன்

வெகுநாட் களுக்குப்பின் மனைவியொடும்  மகளோடும்
-----வீடுவந்த   உறவினரை  வருகவென வரவேற்று
முகமன்கள் பலகூறி முகமகிழ்ந்து அமரவைத்து
------சுற்றங்கள் பற்றிப்பல தகவல்பரி மாறுமுன்னே

விருப்பமுடன் அவருண்ண வகைவகையாய் இனிப்புகளும்
-----முருக்குடன் தட்டைஎன நொறுக்குத் தீனிகளும்
கருப்புக் காபியுடன் சுருங்கக்  காய்ச்சிய பால்
-----விருந்துண்ணக் கொடுத்துப்பின்  பேசத் தொடங்கையிலே

என்னுடைய இல்லத்தின் கம்பியில்லா மெய்நிலையின்*
-------கடவுச் சொல்லினையே** முதலாகக் கேட்டறிந்து
தன்னுடைய கைபேசி மனைவிமகன்  ஐ-பேட்கள்
--------இன்னபிற கருவிகளை இணையத்தில் இணைத்திட்டார்

காசெதுவும் கேட்காத  வாட்சப்பின் வாய்ஸ்காலில்
-----பேசத் தொடங்கியவர் பலமணிகள் பலருடனும் 
பேசி முடித்தவுடன்  மணிகாட்டியைப்  பார்த்து
------ரயிலுக்கு லேட்டாச்சு  எனக்கூறி  மிகப்  பதைத்து .

ஆறிய  காபியையும்  அவசரமாய்க்  குடித்திட்டு
------வாரிச் சுருட்டுக்கொண்டு  வாடகை வாகனத்தில்
ஏறிப் புறப்படுமுன் உரைத்தஒரு  வார்த்தையிது -
----   ஊருக்குப் போனபின்னே  வாட்சப்பில் பேசுகிறேன் !"


*   கம்பியில்லா மெய்நிலை = WI-FI
** கடவுச் சொல் = PASS WORD

Jan 5, 2018

சங்கடஹர சதுர்த்திப் பாடல் - 3

சங்கடஹர சதுர்த்திப் பாடல் - 3 

இன்று சங்கடஹர சதுர்த்தி. இந்நாளின் மகிமை பற்றிய பல கதைகள் இருப்பினும், மிகவும் முக்கியமான ஒன்று கண்ணனைப் பற்றியது. ஸ்யமந்தகமணி என்னும் சிறந்த மணியொன்றை களவாடியதாக, கண்ணன் மேல் வீண்பழி சுமத்தப்பட்டது. நாரத முனியின் அறிவுரைப்படி, கண்ணன் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டு முடிந்த்தபின் , உண்மை வெளிவந்து அப்பழி விலகியது .
இந்தக் கதையை உட்கொண்ட ஒரு சங்கடஹர சதுர்த்திப் பாடல்.

அன்புடன் 

ரமேஷ்.

பி.கு ; இதற்கு முந்தைய சங்கடஹர சதுர்த்திப் பாடல்களை பின்வரும் இணைப்புகளில் படிக்கலாம்.

http://kanithottam.blogspot.in/2017/11/blog-post_7.html
http://kanithottam.blogspot.in/2017/10/blog-post_59.html



சங்கட ஹர சதுர்த்தி

மந்தக  மணி*தனையே தான்வேண்டிக் கேட்டதனால் 
நந்தனின் மகனும்தன்** நற்பேருக் கேற்பட்ட
குந்தகங்கள் தீர்ந்திடவே குறையில்லா முழுநிலவின்
பிந்திவரும் நான்காம்நாள் நல்விரத நோன்பேற்று
முந்திமுதல் கணபதியை சிந்தனையில் சீர்நிறுத்தி
வந்தித்து வந்ததனால் வந்தபழி விலகியதாம்.
இந்நாளில் நாமும் விநாயகனை வணங்கிப்பின்
சந்திரனின் பிறைநோக்கல் குறைகளையும் வழியாமே.

* மந்தக மணி = ஸ்யாமந்தகமணி
** நந்தனின் மகன்= நந்தகோபன் மகன் கண்ணன்
 ^ பிந்திவரும் நான்காம்நாள் = தேய்பிறைச் சதுர்த்தி

The Chamanthaka Mani story - an abridged version , based on various publications is given below :

Satrajith and Prasena were brothers. Satrajith got a beautiful gem called "Chamanthaka mani" from the Sun God after worshipping him for many years. The dazzling gem had many magical properties. Satrajith went to Dwarka wearing the gem around his neck.   When Krishna  asked Satrajith to give it to king Ugrasen  saying it would be safe with Him ,  Satrjith refused but gave it to his brother Prasena.  Prasena, wearing the jewel, went out hunting along with Krishna and other friends but got lost in the jungle. In the jungle , he was killed by a lion which took away the Chamanthaka mani. Later,  Jambavan , a bear,   killed the lion and gave the gem to his daughter  to play with.


Meanwhile  Krishna and his friends returned to Dwaraka after a futile search for Prasena. They all went back and informed Satrajith .  On hearing this Sathrajith got angry and doubted that Krishna might have killed his brother Prasenan  and  stolen the gem. This was believed by everybody and they blamed Krishna for having stolen the gem.

Krishna, in order to prove his innocence, gathered a search party and went into the forest. He traced the dead bodies of Prasena, the lion and following the tracks of the bear , reached Jambavan's cave where he found the gem.  There he fought with  Jambavan  for 28 days, when Jambavan, his whole body terribly weakened from the hammering of Krishna's fists, finally recognised Him as none other than an incarnation of Lord Vishnu. He immediately  surrendered  to Krishna and returned the gem.   Krishna returned  to Dwaraka ,  met Sathrajith and returned the gem to him after telling everything. Sathrajith regretted for his mistake. He gave back the gem to Krishna  requested him to accept his daughter Sathyabama . Krishna accepted Sathyabama but not  the gem.
   
Three other people Sathathanva, Akrurar, and  Krithavarmar were not happy about the marriage of Krishna and Sathyabama. They were very angry with Sathrajith. They decided to steal the gem. One night when Krishna was away from Dwaraka, they all planed and killed Sathrajith and  took  the gem. 

Krishna on hearing this returned to Dwaraka with Balarama. After hearing Krishna's arrival in Dwaraka , Sathathanva gave the gem to  Akrurar and Kiruthavarmar ane wnt away.  Krishna  caught Sathathanva and killed him, but the gem was not with him. Krishna returned empty handed on  seeing which, everybody  blamed him  for killing innocent Sathathanva.  Krishna felt very ashamed. He was worried and wept to himself. 
     
After some days Narada, the Deva Rishi came to Dwaraka , saw Krishna and asked him the reason for his sad face . Krishna told everything to Narada. Narada  adviced Krishna to keep upvaas on krishna paksha  chathurthi and do  pooja for Ganapathi in the evening duly giving arkkiya to  chandra (moon). He emphasised that it is only  Ganapathy who can solve all his problems and  give him peace. Krishna followed  Narada's advice and did the pooja sincerely . Ganapathy appeared before him and blessed him that he will be  free from all his worries and problems very soon .
   
After some days Akrurar came to Yadhava's court room and explained the truth and returned the gem to Krishna in front of everyone and told them the complete story.. Krishna took it and he  was very happy as he was able to reddem his honour. 
  

Jan 4, 2018

திருவிளையாடல் பாடல்கள் -4-தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்.

திருவிளையாடல் பாடல்கள் -4

தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப்  படலம்.


அன்னை மீனாட்சி, தடாதகை என்ற பெயெரெடுத்து மன்னன்  , மலையத்துவசனுக்கும், காஞ்சனமாலைக்கும் மகளாக அவதரித்ததை விவரிக்கும் படலம் இது 

முன்பே நான் பதித்திருந்த மீனாட்சி திருமணப் படலத்திற்கு   முன்பாகவே  வந்திருக்க வேண்டியது. 
சிறு கவனக் குறைவு.
இந்த திருவவதாரப்  படலத்தைப் படித்த    பின்  , தொடர்ச்சியைக் கருதி, மீனாட்சி  திருமணப் படலத்தை  கீழ்க்காணும்  இணைப்பில் சென்று மீண்டும் படிக்கவும்.



http://kanithottam.blogspot.in/2017/11/1_15.html



அன்புடன் 

ரமேஷ் 

தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப்  படலம்.







பாடல் 

மன்னனும் காஞ்சனையும் மகன்வேண்டி மிகப்பெரும் யாகங்கள் பலபுரிந்தததன் 

பின்னரே தீவிடுத்து வெளிவந்த பெண்ணுக்கு மும்முலைகள் முளைத்திருந்ததால் 


இன்னலால் வாடுகையில் " தடாத(க்)கை  என்றபெயர் ஏற்றவளும் அரசாண்டபின் 


தன்னிணை யைக்கண்டதும் முலைமறைந்து நலம்சேரும் என்றுரைத்து அருளினானே 


பாடற்பொருள் :


மலையத்துவச மன்னனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் மகப்பேறு வேண்டி செய்த தவப்பயனால் ,  அவ்வேள்வித் தீயிலிருந்து , மூன்று வயதடைந்த  ஒரு பெண் குழந்தை வெளிவந்தது. பெண் குழந்தை என்பதாலும், அக்குழந்தைக்கு மூன்று முலைகள் உள்ளதாலும், மனம் கலங்கிய அவர்களுக்கு, ஈசன்  " வருந்தற்க! தடாதகை என்ற பெயர் கொண்ட இப்பெண் பாண்டிய நாட்டை அரசாள்வாள். அவள் தன்னுடைய துணைவனை சந்திக்கும்போது மூன்றாம் முலை மறையும்." என்று கூறி அருள் புரிந்தான்.

The Story in Tamil 

குலசேகர பாண்டியனின் வழிவந்த மலையத்துவச பாண்டியன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தான். அரசனும் அவனது மனைவி காஞ்சனமாலையும் , வெகு நாட்கள் கழிந்தும் , குலம் தழைக்க ஒரு மகன் இல்லாததால் மனம் வருந்தினர். அக்குறையைத் தீர்க்கும் பொருட்டு , இறைவன் அருள் வேண்டி யாகங்கள் பல செய்தனர் . அவர்கள் இறுதியில் செய்த புத்திர காமேஷ்டி யாகத்திற்கு பலன் கிடைத்தது. அந்த யாகத்தின் வேள்வித்  தீயிலிருந்து , மூன்று வயது நிரம்பிய ஒரு பெண்குழந்தை தோன்றி காஞ்சனாமாலையின் மடி சேர்ந்தது. குலம் தழைக்க ஒரு ஆண்மகவை  எதிர்பார்த்திருந்த தம்பதியினருக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. அது மட்டுமல்லாமல், வந்தடைந்த பெண்குழந்தைக்கு மூன்று முலைகள் இருந்தன! அதனால் மனம் வருந்தினர், அரசனும் அரசியும். அப்போது வானிலிருந்து, ஈசன் அருளால், அசரீரி ஒன்று ஒலித்தது. " அரசே, மனம் கலங்காதே! இப்பெண் குழந்தையை , தடாதகை எனப் பெயரிட்டு,  ஒரு ஆண்மகனைப்போலவே  நினைத்து வளர்ப்பாய்.. அவளுக்கு சகல கலைகளையும் கற்பித்து சிறக்கச் செய். உனக்குப் பின் அவள் அரியணை ஏறி அரசாள்வாள். அனைத்து தேசங்களையும் வெல்வாள். அச்சமயம், அவள் தான் மணக்கப்போகும்  மணமகனை சந்திக்க நேரிடும். அச்சமயம், அவளது மூன்றாம் முலை மறைந்து போகும்." என்ற அந்த அசரீரியின் செய்தியைக்  கேட்டு  இருவரும் மனம் மகிழ்ந்தனர்.

The story in English 

Paandiyan Malayathuvasan  , a descendant of Kulasekara Pandian, was ruling Madurai. He and his wife, Kanchanamalai longed for a male offspring who can succeed Malayathtuvasan. They performed several Yagnas , praying to Lord almighty. Finally, they performed a Puthra Kameshti Yagna as advised by Lord Indra. While the King was performing this Yagna, a three year old girl appeared  out of the fire . The King took the child and gave it to his wife . It was seen that the child was born with three breasts. This added to the disappointment of the  King and the Queen  who were wanting a male offspring. At that time, a voice sounded from the Heavens , asking them not to worry and to bring up the child as they would bring up a boy. It further asked them to name the girl Thadathagai and that she would ascend the throne after  the King,  will win many battles and rule the country and that her  third breast would disappear the moment she meets her would-be husband in one of these encounters. This news brought immense happiness to the King and Queen.



Jan 2, 2018

திருவாதிரை


இன்று திருவாதிரை.

அறுபத்துமூன்று நாயனார்களுக்குள் ஒருவராக திருநாளைப்போவார் என்று போற்றப்படும் நந்தனாரைப் பற்றிய ஒரு வரலாறு.

சீரிய சிவபக்தர் நந்தனாரை , அவர் பிறந்த குலத்தைக் காரணம் காட்டி  சிதம்பரத்தின் கோயிலுக்குட்செல்ல அனுமதிக்கவில்லை. 
சிதம்பரத்தின் வெளியே, பல நாட்கள் தவித்துக் காத்திருந்த நந்தனாருக்கு சிவன் அருள் புரிந்ததை பற்றி பல விதமான  வரலாற்றுக் கதைகள் உள்ளன.

ஒரு வரலாற்றில் , நந்தனார் சிவபெருமான் கனவில் தோன்றிக் கூறியபடி , கோவிலுக்கு வெளியே ஏற்றப்பட்ட தீயில் புகுந்து , கோவிலின் கர்ப்பகிரஹத்தில் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது.

வேறு ஒரு கதையில், சிவபெருமானே  கோவிலுக்கு வெளியே வந்து நந்தனாருக்கு தரிசனம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது ! இந்த வரலாற்றை உட்கொண்டு இந்த திருவாதிரையன்று ஒரு பாடல்.

அன்புடன்

ரமேஷ்






திரு நாளைப் போவார் நாயனார் 


திருவாதிரை 

மாதினைப் பாதியாய்க் கொண்டவன் நந்தனின் 
சாதியைப் பாராமல் ஆதிரைத் தாரகையில்  
வீதிக்கு வந்தே தரிசனம் தந்தவன் 
மாதிரியோர் தெய்வமுண் டோ?
                                                                                 ஒரு விகற்ப இன்னிசை வெண்பா 
பின் குறிப்பு:
தில்லை நடராஜனின் தாண்டவம் பற்றி இதற்கு சில மாதங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு பாடலின் இணைப்பு கீழே!
http://kanithottam.blogspot.in/2017/02/blog-post_23.html