Search This Blog

Jan 10, 2018

ஊர்சென் றடைந்தபின்னே வாட்சப்பில் பேசுகிறேன்

ஊர்சென்றடைந்தபின்னே வாட்சப்பில் பேசுகிறேன்




இது whatsapp , twitter , facebook உலகம்.  wifi மூலம் இணைய தளத்தில் இணைந்து எப்போதும் மற்றவருடன் தொடர்பு கொண்டிருப்பதால், பலருக்கு எதிரே உட்கார்ந்திருப்பவரிடம்  பேசக்கூட முடியாமல் போகிறது.

வீட்டுக்கு விருத்தினர் வந்தால் அவருக்கு காபி,டிபன் கொடுத்து உபசாரம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை - நம் வீட்டு wifi யுடன் connect செய்வதற்கான paasword -ஐ கொடுத்துவிட்டால் போதும். வந்தவர்கள் எல்லாம் கையிலுள்ள ஐ- பேட் , மொபைல் இத்யாதி கருவிகளை நோண்டிக்கொண்டு  இருப்பார்கள். வந்த வேலையைப் பற்றிக் கூட பேச மறந்துவிடுவார்கள்.

உங்களில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம், வியப்பெதுவும் இல்லை!

இந்த நிலைமை பற்றி ஒரு கவிதை.


அன்புடன் 

ரமேஷ் 

ஊர்சென் றடைந்தபின்னே வாட்சப்பில் பேசுகிறேன்

வெகுநாட் களுக்குப்பின் மனைவியொடும்  மகளோடும்
-----வீடுவந்த   உறவினரை  வருகவென வரவேற்று
முகமன்கள் பலகூறி முகமகிழ்ந்து அமரவைத்து
------சுற்றங்கள் பற்றிப்பல தகவல்பரி மாறுமுன்னே

விருப்பமுடன் அவருண்ண வகைவகையாய் இனிப்புகளும்
-----முருக்குடன் தட்டைஎன நொறுக்குத் தீனிகளும்
கருப்புக் காபியுடன் சுருங்கக்  காய்ச்சிய பால்
-----விருந்துண்ணக் கொடுத்துப்பின்  பேசத் தொடங்கையிலே

என்னுடைய இல்லத்தின் கம்பியில்லா மெய்நிலையின்*
-------கடவுச் சொல்லினையே** முதலாகக் கேட்டறிந்து
தன்னுடைய கைபேசி மனைவிமகன்  ஐ-பேட்கள்
--------இன்னபிற கருவிகளை இணையத்தில் இணைத்திட்டார்

காசெதுவும் கேட்காத  வாட்சப்பின் வாய்ஸ்காலில்
-----பேசத் தொடங்கியவர் பலமணிகள் பலருடனும் 
பேசி முடித்தவுடன்  மணிகாட்டியைப்  பார்த்து
------ரயிலுக்கு லேட்டாச்சு  எனக்கூறி  மிகப்  பதைத்து .

ஆறிய  காபியையும்  அவசரமாய்க்  குடித்திட்டு
------வாரிச் சுருட்டுக்கொண்டு  வாடகை வாகனத்தில்
ஏறிப் புறப்படுமுன் உரைத்தஒரு  வார்த்தையிது -
----   ஊருக்குப் போனபின்னே  வாட்சப்பில் பேசுகிறேன் !"


*   கம்பியில்லா மெய்நிலை = WI-FI
** கடவுச் சொல் = PASS WORD

1 comment:

  1. எதிர்காலத்தில் வாட்சப் என்று ஒரு religion ஏற்பட்டால் ஆச்சர்யம் இல்லை

    ReplyDelete