Search This Blog

Showing posts with label limericks. Show all posts
Showing posts with label limericks. Show all posts

Jul 12, 2026

மயிரால் போன உயிர்

மயிரால் போன உயிர் 

சென்ற சில மாதங்களாய் ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் விவாதப்பொருளாக விளங்கும் ஒரு செய்தி சியா கோயல்- கேதன் அகர்வால் ஆகிய இருவரைப் பற்றியது. இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும்போது, சியா கோயல் கேத்தன் அகர்வாலை பூனாவிலுள்ள லோஹகட் கோட்டைக்கு சுற்றுலா செல்ல  அழைத்துச் சென்று,  மூவாயிரம் அடிக்கு  மேற்பட்ட உயரத்திலிருந்து ஒரு பள்ளத்தாக்கில் கேதனைத் தள்ளிக் கொலை செய்துவிட்டாரென்று செய்திகள் வெளிவந்திருக்கின்றன. 

இந்தக் கொலைக்கு  காரணமாகக் கூறப்படுவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது! கேதனின் தலையில் வழுக்கை விழுந்திருப்பதாகவும், அதை மறைக்க அவன் செயற்கை  முடியை( wig) அணிந்ததிருந்ததாகவும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத சியா அவனை அந்தக் கோட்டையின் மேல் இருந்து தள்ளிக் கொலை செய்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது!

தன் மயிரை இழந்தால் உயிர்விடும் கவரிமான் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்! ஆனால், தலைமயிரை இழந்ததால் தன் உயிரையே  ஒருவன் இழந்ததைப்  பற்றி இன்றுதான் கேள்விப்படுகிறேன்! 

அழுவதா, சிரிப்பதா  என்று தெரியவில்லை ! 

அழுதுகொண்டு, தமிழில் ஒரு வெண்பா! சிறிதே சிரிப்புடன் ஆங்கிலத்தில் ஒரு லிமெரிக்.

படித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்!

அன்புடன் 

ரமேஷ் 






"வழுக்கை" விழுந்தவனைக் கேள்வனாய்க்* கொள்ளல்

இழுக்கென்று எண்ணி அவனை- வழுக்குமோர்**

பள்ளத்தில் தள்ளியே கொன்றாள்; அவள்காதல்

கள்ளத்தைத் தூற்றும் உலகு

                                                                                                  ( இருவிகற்ப நேரிசை வெண்பா)

கேள்வன் - கணவன், காதலன்

** வழுக்குமோர்- வழுக்கும் ஓர்


 A Limerik on the same subject - with a different humorous take!


When she   found that   her lover was bald

Her feelings   for him    turned very cold

     But How can she be blame(d) 

     When Her ex lover and Flame

Slipped into  an abyss   and rolled ?



Nov 1, 2025

தங்காத கழிவுகளுக்கு தங்கத்தில் பாத்திரம்!

உடலில் தங்காத கழிவுகளுக்கு தங்கத்தில் பாத்திரம்!

இன்று   (1-11-2025)டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித் தாளில் வந்த ஒரு செய்தி!

முழுவதும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு கழிவு நீர்க்கலம் ( toilet cistern ) புகழ் பெற்ற Sotheby என்னும் ஏலம் விடும் நிறுவனத்தாரால் ஏலம் விடப்பட இருக்கிறது! 

இதை அந்த நிறுவனம் " கலையின் வெளிப்பாட்டிற்கும் வணிக மதிப்பிற்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய கூர்மையான விமர்சனம் " (an incisive commentary on the collission of artistic production and commodity value ) என்று விவரத்திருக்கிறது !படிப்பவர்க்குப் புரிந்தால் சரி!

ஏலத்தின் ஆரம்பத்  தொகை சுமார் 90 கோடி ரூபாய்! இதற்கு மேலும் பணம் கொடுத்து வாங்கத்  தயாராக இருக்கும் பைத்தியக்காரப் பணக்காரர்களும் இருப்பார்கள்தான்!

இது குறித்து ஒரு குறும்புக் கவிதை - லிமெரிக் வடிவில்- படித்துச் சிரிக்க !

அன்புடன் 

ரமேஷ் 




தங்கத்தாலே செஞ்ச ஒரு பாத்திரம் 

கழித்திடவே தினம் மலஜல மூத்திரம்!

விடு வாராம்  ஏலம்!

உலகம் போற கோலம்!!

நினைச்சாலே பொங்கிவருது ஆத்திரம்! 


Apr 22, 2022

லிமெரிக் (LIMERIK)- ஒரு குறும்புக் கவிதை. -தோனி அண்ட் சி,எஸ் .கே பற்றி

லிமெரிக் (LIMERIK)- ஒரு குறும்புக் கவிதை.

-தோனி அண்ட் சி,எஸ் .கே  பற்றி 

நேற்று நடந்த விறுவிறுப்பான ஐ.பி .எல் போட்டியில் சென்னை அணி மும்பை  தோற்கடித்தது.

கடைசி ஓவரில் தோனி நான்கு பந்துகளில் பதினாறு ஓட்டங்கள் எடுத்து சென்னையை வெற்றி பெறச் செய்தார்.

இது தோனிக்கு சகஜமாகிவிட்டது.! 

2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இது பற்றி ஒரு லிமெரிக் எழுதினேன். நேற்றும் சரித்திரம் திரும்பியது!

அந்தப் பாடல் மறுபதிவாக மீண்டும் இன்று!

அன்புடன் 

ரமேஷ் 





 
CSK    தல    ரொம்பக்           கூலு 
அடிப்பாரு    six     லாஸ்ட்     பாலு 
     அவர் பேரு    தோனி 
     மேட்ச் பாக்க வாநீ 
விசில் போட்டு கிளப்பலாம் தூளு

லிமெரிக் பற்றிய ஒரு சிறு குறிப்பு 
இது ஒரு ஐந்தடிப் படைப்பு. 1,2 மற்றும் 5-ம் அடிகளின் ஈற்றுச் சீர் ஒரே மாதிரி ஒலிக்கும் .
அதுபோல் 3,4 ம் வரிகளின் ஈற்றுச் சீர் ஒரே மாதிரி ஒலிக்கும் . 
பொதுவாக இவை ஹாஸ்யரசம் ததும்பும் குறும்புக் கவிதைகள்!


Jul 21, 2021

ஜெப் பீசோசின் விண்வெளிப் பயணம்

ஜெப் பீசோசின் விண்வெளிப் பயணம் 

இரண்டு செய்தித் துணுக்குகள்-

1. அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப் பீசோஸ் தனது நியூ ஷெப்பர்ட் என்ற ஏவுகணை ஊர்தியில்  புவியீர்ப்பை கடந்து விண்வெளியில் பயணித்தார். இதற்காக அவர் செய்த செலவு 5.5 பில்லியன் டாலர்கள்.

2. 2020 ம் ஆண்டு அவர் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அதற்காக அவர் செய்த செலவு 38 பில்லியன் டாலர்கள்!

இது பற்றிய செய்திப் பரிமாற்றங்களின்போது என் நண்பர் அரவிந்த் "மனைவியிடமிருந்த தப்பிக்க அவர் செய்த செலவு, புவியீர்ப்பிலுருந்து  தப்பிக்கச் செய்த செலவை விட அதிகமா இருக்கிறதே!" என்று வியந்தார்.

இது குறித்து நான் எழுதிய ஒரு நகைச்சுவை தமிழ் லிமெரிக், இதோ !

அன்புடன் 

ரமேஷ் 


புவியீர்ப்பு விசை மீற நாட்டம் !

அண்டத்தை ஆராயத்  தேட்டம்!*               *தேட்டம் = தேடல் 

------பெண்டாட்டி தொல்லை 

------இவருக்கோ இல்லை!

எனினும் ஏன் உலகைவிட்டு ஓட்டம்?

Apr 2, 2020

கொரானா கவிதை - 8

கொரானா கவிதை  - 8

இந்த வலுக்கட்டாய கொரானா தனிப்படுத்தலின் பொது ஒரு சிறிய லிமெரிக் - சுத்தத்தை வலியுறுத்தி!

அன்புடன் 

ரமேஷ் 

கை கழுவ  உதவு கின்ற  சோப்பு 
நமக் கின்று மிகப் பெரிய  காப்பு 

செஞ்சிடுவோம்   சுத்தம்
பலதடவை    நித்தம்

அடிச்சுடுவோம்  கொரானாக்கு ஆப்பு!

Sep 1, 2019

Jasprit Bumrah -பூம் பூம் பூம்ரா

பூம் பூம்  பூம்ரா 

ஜஸ்பிரீத் பூம்ரா தன அபார போலிங்கால் இன்று விழுந்த ஏழு மேற்கிந்திய வீரர்களின் விக்கெட்டுகளில் ஆறை வீழ்த்தினார்.
அதிலொரு ஹாட்ரிக்கும் அடங்கும்.
சென்ற பந்தயத்திலும் ஏழே ரன்கள் கொடுத்து  ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் பூம்ரா.
அவரது சாதனையைப் பாராட்டி ஒரு லிமெரிக்!

அன்புடன்

ரமேஷ்



பூம் பூம்  பூம்ரா 

ஜஸ்   பிரித்து    பூமு    ராவின்     போலிங்கு *             * Bowling  

பார்த்த தில்லே இது வரையிது போலிங்கு#                 #- போல் இங்கு 

---------- ஒரு     பாலு    இன்ஸ்விங் 

----------அடுத்த பாலு அவுட்ஸ்விங்

விண் டீஸு**  பேட்ஸ்மென் எல்லாம் ஷிவரிங்^ !    ** windies ^ shivering 


Aug 29, 2019

சிந்து

சிந்து

இந்திய விளையாட்டு வீராங்கனை சிந்து உலக மகளிர் நெட்டிப் பந்து விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார்! இந்த சாதனை குறித்து ஒரு லிமரிக் குறும் பாடல்.
அன்புடன்
ரமேஷ்

உலக மகளிர் நெட்டிப் பந்து போட்டி
வென்று அதில் வெற்றிக் கொடி நாட்டி
     முத லாக வந்து
     சாதித்த சிந்து
நமது பெண்டிர்க் கேயோர் வழி காட்டி !

Aug 25, 2019

சந்திராயன்

சந்திராயன் 

இந்தியா  அண்மையில் செலுத்திய சந்திராயன் - 2 விண்கலம் , இப்போது வெற்றிகரமாக நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் சென்று அதைச் சுற்றி வருகிறது.
இன்னும் சில நாட்களில் அது நிலவின் மீது இறங்கி தன்  சுவடுகளைப் பதிக்கும் !
அது பற்றி ஒரு லிமெரிக் கவிதை!

அன்புடன்
ரமேஷ்

வான்வெளியில் இந்தியாவின் விண் கலம்
வருகுதின்று     சந்திரனை    அது         வலம்
----------இன்னும் சில   நாள்தான்;
----------பதியும் அதன் கால்தான்;
புனிதமாகும்     அப்போ     நிலவின்    நிலம் !  

Aug 22, 2019

மாஜி நிதி மந்திரி சிதம்பரம் கைது

மாஜி நிதி மந்திரி சிதம்பரம் கைது 


மத்திய அரசவையில் நிதி மந்திரி, உள்நாட்டு மந்திரி ஆகிய முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவரும் , தமிழ்நாடு காங்கிரேசின் முக்கியத் தலைவரும் ஆன திரு. சிதம்பரம் ஊழல் குற்றங்களுக்காக இன்று கைது செய்யப்பட்டார் .
இவர் மூலம்  "வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் நாட்டின் பிரதம மந்திரியாக வரவும் வாய்ப்பு உண்டு" என்று பலராலும் கணிக்கப்பட்டவர்  இவர் !
எத்தகைய ஒரு வீழ்ச்சி!
இது பற்றி லிமெரிக் வடிவில் ஒரு பாடல் !

அன்புடன் 

ரமேஷ் 



மாஜிநிதி    மந்திரி      சிதம் பரம் 
அவரோட  ஊழல்கள் அம்   பலம் 
கிடைக்க வில்லை  பெயிலு **
அவர்  போனாரு     ஜெயிலு# 
அவர் தங்கமா? இல்லை! உதும்பரம்*

 உதும்பரம்  = செப்பு ( copper )
** Bail
#   Jail



Aug 21, 2019

அரசியல் சாசனம் - பிரிவு 370

அரசியல் சாசனம் - பிரிவு 370

காஷ்மீர் மாநிலத்திற்கு விசேட  சலுகைகளை அளிக்கும் ,இந்திய அரசியலமைப்பின் 370 வைத்த-ஆவது பிரிவை ரத்து செய்தது பற்றி பொதுவாக நாடு முழுவதும் - காஷ்மீரைத் தவிர-வரவேற்பு இருப்பதாகவே தெரிகிறது. 
இது வெகு நாட்களுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டிய முடிவே என்றும் முந்தைய அரசுகளின் மெத்தனமான போக்கினால் இந்த தற்காலிக உரிமை க்ஷரத்து காஷ்மீர் மக்களின் மனதில் வேறூன்றிவிட்டதால் , இப்போதைய நடவடிக்கையின் விளைவு சில பிரச்னைகளை விளைவிக்கும்  என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாப்போம்!

இது பற்றி ஒரு கவிதை - லிமெரிக் வடிவில் !

அன்புடன் 

ரமேஷ் 


இந்தியாவின்  அரசியல்  சட்டப்  பிரிவு
முன்னூற்றி   எழுவதாம்  நம்பர்    தெரிவு 
--------------------ரொம்ப நாளு  கழிச்சு 
--------------------போட்  டாங்க   கிழிச்சு 
கவர்மெண்டுக்கு இப்பத்தான்  வந்தது அறிவு!