ஜெப் பீசோசின் விண்வெளிப் பயணம்
இரண்டு செய்தித் துணுக்குகள்-
1. அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப் பீசோஸ் தனது நியூ ஷெப்பர்ட் என்ற ஏவுகணை ஊர்தியில் புவியீர்ப்பை கடந்து விண்வெளியில் பயணித்தார். இதற்காக அவர் செய்த செலவு 5.5 பில்லியன் டாலர்கள்.
2. 2020 ம் ஆண்டு அவர் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அதற்காக அவர் செய்த செலவு 38 பில்லியன் டாலர்கள்!
இது பற்றிய செய்திப் பரிமாற்றங்களின்போது என் நண்பர் அரவிந்த் "மனைவியிடமிருந்த தப்பிக்க அவர் செய்த செலவு, புவியீர்ப்பிலுருந்து தப்பிக்கச் செய்த செலவை விட அதிகமா இருக்கிறதே!" என்று வியந்தார்.
இது குறித்து நான் எழுதிய ஒரு நகைச்சுவை தமிழ் லிமெரிக், இதோ !
அன்புடன்
ரமேஷ்
புவியீர்ப்பு விசை மீற நாட்டம் !
அண்டத்தை ஆராயத் தேட்டம்!* *தேட்டம் = தேடல்
------பெண்டாட்டி தொல்லை
------இவருக்கோ இல்லை!
எனினும் ஏன் உலகைவிட்டு ஓட்டம்?
Nice,Ramesh.👌👌
ReplyDeleteVery nice. Never knew the word தேட்டம்
ReplyDeletePlanning ahead .... ;)
ReplyDeleteபிசாசு போன்ற மநைவி கூட இருந்திருதால்
ReplyDeleteபெசோசு விண்ணத்தான்டின உல்லாச பயணத்தை விட்டுவிட்டு திரும்பி வருவாரா என்பது சந்தேகம்!