வாள்வீசும் வீராங்கனை
டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சுப் போட்டியிலே பங்கு பெறத் தகுதி பெற்றிருக்கும் முதலாவது இந்தியன் என்ற பெருமையைப் பெற்ற பவானிதேவியின் கதை எழுச்சியூட்டும் ஒரு கதை! கோவிலில் பூசை செய்யும் ஒரு அர்ச்சகருக்கு மகளாக ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து , தடைகளை உடைத்து முன்னேறினார் பவானிதேவி. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற முதல் இந்தியன் என்ற பெருமை இவருக்கு உண்டு.
இவரது வாள்வீச்சுப் பயிற்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட இடம் , சென்னை தண்டையார்பேட்டையிலுள்ள ஒரு பள்ளி என்பது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் ஓர் செய்தி.
அவர் பல வெற்றிமாலைகளை வென்று சூட நமது வாழ்த்துக்கள்!
அன்புடன்
ரமேஷ்
வாய்ச்சண்டை ஓயாமல் போடுகின் றோரிடையே
வாள்சண்டை கற்றதிலே* தேர்ந்திட்ட காரிகையே * கற்று அதிலே
நீள்வாள் களத்தில் முதலிடத்தைப் பெற்றேநீ
மீள்வாய் பதக்கத் துடன்
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
Many of us excel in oral word-fight
But you chose to excel in the sport of sword-fight
May you return with a medal 'round your neck
As a just reward for'ur* years of long trek *for your
அருமை.வீராங்கனை வெற்றியுடன் திரும்ப வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றிகள் பல, சங்கரலிங்கம். நம் எல்லோருடைய வேண்டுதலும் அதுவெ!
DeleteVery nice. Let's all hope and pray she comes back with a medal
ReplyDeleteThanks, Aravind!
ReplyDeleteExcellent Ramesh.
ReplyDeleteLet us hope India gets a medal because of her talent.
Aman
Thanks Aman !
Deleteஅர்ச்சருக்கு பிறந்தாலும் அவள் வாள் வீச்சில் ஆச்சரியமான வளம் பெற்றவள். வெள்ளி கிடைத்தாலும் உலக களத்தில் இறங்கினதர்க்காக வளமுடன் வாழ்க என்று வரவேர்ப்போம்!
ReplyDeleteExcellent . அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteBoth your English & Tamil versions are very nice .
Thanks,Mr.Unknown!
Deleteதிறமை எங்கிருந்தாலும், எவருக்கிருந்தாலும் வாழ்த்துவோம்! வாழ்த்தியதிற்கு வாழ்த்துக்கள்( அல்லது வாழ்த்துகளா?) GR
ReplyDeleteமிக அருமை,ரமேஷ்.👌👌 வாள் வீசும் காரிகை உங்கள் வாழ்த்துப்படி திரும்பட்டும் பதக்கத்துடன்.
ReplyDeleteதண்டையார் பேட்டை என்றதும் நான் வளர்ந்த இடமாதலால் கூடுதல் வாழ்த்துக்கள்.
ReplyDelete