Search This Blog

Jul 19, 2018

அகலிகை





அகலிகை 

ராமன் கால் பட்டு 
பெண்ணான அகலிகை 
மீணடும் கல்லானாள் -
இன்றைய ராவணர்களுக்கு பயந்து.

Jul 18, 2018

சேதுவை மேடுறுத்தி ----

சேதுவை மேடுறுத்தி ----









லக்ஷ்மணன்   கோடு  போட்டான்

சீதை அதைத்  தாண்டியதால்

இலங்கைக்கு

ராமன் ரோடு போட்டான்.

Jul 13, 2018

ஒத்தைச் செருப்பு

ஒத்தைச் செருப்பு

ஹைக்கூ என்பது என்ன?
ஹைக்கூ என்பது ஒரு சம்பவப்   பங்கீடு.
அந்த சம்பவத்தை மூன்று வரிகளில் படிப்பவருடன் பகிர்ந்துகொள்வதுதான் ஹைக்கூ.
சம்பவத்தை மட்டுமே கவிதை வர்ணிக்கிறது.
அதன் மூலம் ஏற்படும் உணர்வுகளை புரிந்துகொள்வதை படிப்பவருக்கே விட்டுவிடுகிறது.எழுதுபவருக்கும் படிப்பவருக்கும்  ஏற்படும் உணர்வுகள் வெவ்வேறாகவும் இருக்கக் கூடும்.
அந்த வடிவத்தில்  நான் எழுதத்  துணிந்த வரிகள் இவை!
இதைப்  படிக்கையில் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை பின்னொரு சமயம் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்

ரமேஷ்






ஒத்தைச் செருப்பு

காலையில் நடந்து  செல்லும்போது
சாலையில் கிடந்தது-
ஒரு ஒற்றைச் செருப்பு.




Jul 7, 2018

வாழ்வெனும் போனஸ்


வாழ்வெனும்  போனஸ் 

நான் சென்ற வாரம் என்னுடைய மருத்துவரைப் பார்க்கச் சென்றபோது, வயதாகிவிட்டதால் வரும் உபாதைகளைப்  பற்றி நொந்துகொண்டபோது அவர் சொன்ன அறிவுரையை ஒரு பாடலாக வடித்திருக்கிறேன்.

அன்புடன்

ரமேஷ்

வாழ்வெனும்  போனஸ் 




ஆண்டுகள் ஐம்பது அகவை  ஆனபின்
தாண்டும் ஒவ்வோர் ஆண்டும் போனஸ்
அறுபது ஆண்டுகள் ஆயின வென்றால்
வருகின்ற மாதங்கள் ஒன்றொன்றும் போனஸ்

எழுபது ஆண்டுகள்  எட்டினோம் என்றால்
கழியும்  வாரம்  எல்லாம்  போனஸ்
எண்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் காலை
கண்விழித் தெழுந்தால் அதுவே போனஸ்

தொண்ணூறை  நாம்  தொட்டுவிட் டாலோ
எண்ணும் ஒவ்வொரு  மணியும்   போனஸ்
நூறு வயதுநாம் வாழ்ந்து விட்டாலோ
சேரும் நிமிடமும் நொடிகளும்  போனஸ்

பிறவி முழுதும்  மனிதர் களுக்கு
இறைவன் அளித்த பெரியதோர்  போனஸ்
இனியதே  எண்ணி இனியதை  செய்து
மனிதப் பிறவி முழுதும் வாழ்வோம்.





Jul 1, 2018

சங்கடஹரசதுர்த்திப் பாடல்

சங்கடஹரசதுர்த்திப்  பாடல் 

இன்றைய சங்கடஹர சதுர்த்தியன்று கோவிலில் விநாயகரைத் துதிக்கையில் தோன்றிய துதிப்பாடல்.---இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிகழ்வு பற்றிய குறிப்புடன்!

அன்புடன் 

ரமேஷ் 



கவ்விக்  கரிமுகத் தும்பிக்கை யால்தூக்கி 
அவ்வையைக் கைலயம்  சேர்த்தானை - செவ்விதாய்
எவ்விதத்  துன்பமும் நீக்கிடும் நாதனை
பவ்விய மாகப் பணி.

செவ்விதாய் =, beautifully, elegantly; 2. opportunely.

Auvaiyar was a contemporary and close associate of two noble Siva bhaktas, Sundarar and Seraman Perumal, ruler of the Chera kingdom, both extolled as great Saiva saints in Sekkilar's epic hagiography, the Periyapuranam. One day, near the end of her life, it is said that Auvaiyar was in the midst of her daily worship of her beloved Ganesha. She had a vision in which Saint Sundarar was proceeding to Mount Kailasa, Siva's abode, with his comrade, King Seraman. Sundarar was riding a white elephant, and Seraman was on a white horse. They were as aware of her as she was of them. She became disturbed and tried to rush her worship, filled with a yearning to join her spiritual friends on their last journey.But Lord Ganesha appeared and told her to finish her rituals calmly and without haste, with the promise that she would be taken to Kailasa ahead of her two friends. Thereupon she entered her trance even more deeply and sang the renowned hymn of praise entitled Vinayaka Ahaval. (This great song of religious devotion to Ganesha is sung to this day throughout the Tamil land at the time of Ganesha worship, particularly during the annual Ganesha Chaturthi festival.
As she finished her worship and placed the sacramental offering at His gracious feet, Vinayaka appeared before her, lifted her in His gentle trunk and delivered her to the Sivaloka, to Mount Kailasa, before the two friends arrived. When Seraman Perumal inquired how it was that she had arrived ahead of them, she sang this in her unique and charming Tamil.Agaval means blank poetry and it is a song addressed to Lord Ganapathy. He is addressed as Vinayagar (he who removes obstacles)
(story from from jaishreesblog.blogspot.com)