Search This Blog

Jul 7, 2018

வாழ்வெனும் போனஸ்


வாழ்வெனும்  போனஸ் 

நான் சென்ற வாரம் என்னுடைய மருத்துவரைப் பார்க்கச் சென்றபோது, வயதாகிவிட்டதால் வரும் உபாதைகளைப்  பற்றி நொந்துகொண்டபோது அவர் சொன்ன அறிவுரையை ஒரு பாடலாக வடித்திருக்கிறேன்.

அன்புடன்

ரமேஷ்

வாழ்வெனும்  போனஸ் 




ஆண்டுகள் ஐம்பது அகவை  ஆனபின்
தாண்டும் ஒவ்வோர் ஆண்டும் போனஸ்
அறுபது ஆண்டுகள் ஆயின வென்றால்
வருகின்ற மாதங்கள் ஒன்றொன்றும் போனஸ்

எழுபது ஆண்டுகள்  எட்டினோம் என்றால்
கழியும்  வாரம்  எல்லாம்  போனஸ்
எண்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் காலை
கண்விழித் தெழுந்தால் அதுவே போனஸ்

தொண்ணூறை  நாம்  தொட்டுவிட் டாலோ
எண்ணும் ஒவ்வொரு  மணியும்   போனஸ்
நூறு வயதுநாம் வாழ்ந்து விட்டாலோ
சேரும் நிமிடமும் நொடிகளும்  போனஸ்

பிறவி முழுதும்  மனிதர் களுக்கு
இறைவன் அளித்த பெரியதோர்  போனஸ்
இனியதே  எண்ணி இனியதை  செய்து
மனிதப் பிறவி முழுதும் வாழ்வோம்.





7 comments:

  1. Very true and very nice. At 70, rich or poor makes no difference. At 80, awake or asleep have no difference. At 90, man and woman have no difference. At 100, alive or dead make no difference. Life is very simple. In the long run, nothing makes any real difference!

    ReplyDelete
    Replies
    1. " Life is very simple. In the long run, nothing makes any real difference!" - Nicely put.
      Thanks Shivakumar.

      Delete
  2. முதுமை எட்டிவிட்டோம் என்று கவலை படாமல் எடுத்த கடமையை முடித்தோமா என்று ஆராய வேண்டும் -வெறும் உயிரோடு இருப்பது பொனுச் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஒரு வயதுக்குப் பின் கடமைகள் நமக்கு நாமே விதித்துக் கொள்பவையே!

      "பொனுச் இல்லை" ???????

      Delete
  3. Am I re-sending it?
    Good, Here is my response.

    வாழ்வானது மூச்சுவிடல் என்றால்
    ஐம்பதோ எண்பதோ எல்லாம் ஒன்றே
    வாழ்வாங்கு வாழ்தல் எனல் - மூச்சடக்கி
    ஐம்புலன்களில் ஒளிரும் சக்தியாவதே.

    ReplyDelete
    Replies
    1. Thanks for the response The poem also implies that, whatever be your age, if you have not realised
      " வாழ்வாங்கு வாழ்தல் எனல் - மூச்சடக்கி
      ஐம்புலன்களில் ஒளிரும் சக்தியாவதே."
      then, there is less and less time for you to realise and actualise that and that you better make good use of the Bonus you have got!

      Delete
  4. Super song. Keep going. For us, every one of your poems is a bonus

    ReplyDelete