Search This Blog

Jul 13, 2018

ஒத்தைச் செருப்பு

ஒத்தைச் செருப்பு

ஹைக்கூ என்பது என்ன?
ஹைக்கூ என்பது ஒரு சம்பவப்   பங்கீடு.
அந்த சம்பவத்தை மூன்று வரிகளில் படிப்பவருடன் பகிர்ந்துகொள்வதுதான் ஹைக்கூ.
சம்பவத்தை மட்டுமே கவிதை வர்ணிக்கிறது.
அதன் மூலம் ஏற்படும் உணர்வுகளை புரிந்துகொள்வதை படிப்பவருக்கே விட்டுவிடுகிறது.எழுதுபவருக்கும் படிப்பவருக்கும்  ஏற்படும் உணர்வுகள் வெவ்வேறாகவும் இருக்கக் கூடும்.
அந்த வடிவத்தில்  நான் எழுதத்  துணிந்த வரிகள் இவை!
இதைப்  படிக்கையில் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை பின்னொரு சமயம் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்

ரமேஷ்






ஒத்தைச் செருப்பு

காலையில் நடந்து  செல்லும்போது
சாலையில் கிடந்தது-
ஒரு ஒற்றைச் செருப்பு.




3 comments:

  1. அன்புள்ள ரமேஷ்

    என் மனதில் படுவது இது தான்

    ஜோடியில் ஒன்று பாதியில் அறுந்து போனால் /ன்/ள் என்றால்
    வாழ்க்கையில் மீதி அழிந்து போகும்

    இரட்டை மாட்டு வண்டியின் இரண்டு மாடுகள் போன்று
    ஒன்றை ஒன்று விட்டுக்கொடுக்காமல் போனால் வாழ்க்கை நன்று போகும்.

    அன்புடன் ராம்மோகன்

    ReplyDelete
  2. அன்புள்ள ரமேஷ்

    செருப்புதானே ஒன்று போனால் பயனில்லா
    இன்னொன்றையும் தூக்கிப் போடு
    புதுசு வாங்கக் காசில்லையா? கவலையை விடு
    ஒரு கால் இல்லாதவனைப் பார்! உனக்கு ஒன்றல்ல, இரண்டு உண்டு

    ReplyDelete
  3. நேற்று இந்த சாலையில் அறப்போர் நடந்தது
    காலையில் கண்ட ஒற்றை செருப்பு
    சாட்சி சொன்னது

    ReplyDelete