உடலில் தங்காத கழிவுகளுக்கு தங்கத்தில் பாத்திரம்!
இன்று (1-11-2025)டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித் தாளில் வந்த ஒரு செய்தி!
முழுவதும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு கழிவு நீர்க்கலம் ( toilet cistern ) புகழ் பெற்ற Sotheby என்னும் ஏலம் விடும் நிறுவனத்தாரால் ஏலம் விடப்பட இருக்கிறது!
இதை அந்த நிறுவனம் " கலையின் வெளிப்பாட்டிற்கும் வணிக மதிப்பிற்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய கூர்மையான விமர்சனம் " (an incisive commentary on the collission of artistic production and commodity value ) என்று விவரத்திருக்கிறது !படிப்பவர்க்குப் புரிந்தால் சரி!
ஏலத்தின் ஆரம்பத் தொகை சுமார் 90 கோடி ரூபாய்! இதற்கு மேலும் பணம் கொடுத்து வாங்கத் தயாராக இருக்கும் பைத்தியக்காரப் பணக்காரர்களும் இருப்பார்கள்தான்!
இது குறித்து ஒரு குறும்புக் கவிதை - லிமெரிக் வடிவில்- படித்துச் சிரிக்க !
அன்புடன்
ரமேஷ்
தங்கத்தாலே செஞ்ச ஒரு பாத்திரம்
கழித்திடவே தினம் மலஜல மூத்திரம்!
விடு வாராம் ஏலம்!
உலகம் போற கோலம்!!
நினைச்சாலே பொங்கிவருது ஆத்திரம்!
No comments:
Post a Comment