உடலில் தங்காத கழிவுகளுக்கு தங்கத்தில் பாத்திரம்!
இன்று (1-11-2025)டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித் தாளில் வந்த ஒரு செய்தி!
முழுவதும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு கழிவு நீர்க்கலம் ( toilet cistern ) புகழ் பெற்ற Sotheby என்னும் ஏலம் விடும் நிறுவனத்தாரால் ஏலம் விடப்பட இருக்கிறது!
இதை அந்த நிறுவனம் " கலையின் வெளிப்பாட்டிற்கும் வணிக மதிப்பிற்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய கூர்மையான விமர்சனம் " (an incisive commentary on the collission of artistic production and commodity value ) என்று விவரத்திருக்கிறது !படிப்பவர்க்குப் புரிந்தால் சரி!
ஏலத்தின் ஆரம்பத் தொகை சுமார் 90 கோடி ரூபாய்! இதற்கு மேலும் பணம் கொடுத்து வாங்கத் தயாராக இருக்கும் பைத்தியக்காரப் பணக்காரர்களும் இருப்பார்கள்தான்!
இது குறித்து ஒரு குறும்புக் கவிதை - லிமெரிக் வடிவில்- படித்துச் சிரிக்க !
அன்புடன்
ரமேஷ்
தங்கத்தாலே செஞ்ச ஒரு பாத்திரம்
கழித்திடவே தினம் மலஜல மூத்திரம்!
விடு வாராம் ஏலம்!
உலகம் போற கோலம்!!
நினைச்சாலே பொங்கிவருது ஆத்திரம்!
உண்மை தான். விளக்காமருக்கு பட்டுக்குஞ்சம் என்றொரு பழமொழி உண்டு. அதுபோல் உள்ளது.
ReplyDeleteஅபத்தத்தின் எல்லை இந்த ஏலம் !
ReplyDeleteThere will be a crazy fellow buying this.
ReplyDeleteமத்திய கிழக்கில் எவனாவது வாங்குவான்.
ReplyDeleteஇதை கலை என கொண்டாடும் மானுடம் உன் மனம் தான் கழிப்பறையோ? கலி தான் முற்றியதோ?
ReplyDelete