Search This Blog

Jul 12, 2026

மயிரால் போன உயிர்

மயிரால் போன உயிர் 

சென்ற சில மாதங்களாய் ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் விவாதப்பொருளாக விளங்கும் ஒரு செய்தி சியா கோயல்- கேதன் அகர்வால் ஆகிய இருவரைப் பற்றியது. இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும்போது, சியா கோயல் கேத்தன் அகர்வாலை பூனாவிலுள்ள லோஹகட் கோட்டைக்கு சுற்றுலா செல்ல  அழைத்துச் சென்று,  மூவாயிரம் அடிக்கு  மேற்பட்ட உயரத்திலிருந்து ஒரு பள்ளத்தாக்கில் கேதனைத் தள்ளிக் கொலை செய்துவிட்டாரென்று செய்திகள் வெளிவந்திருக்கின்றன. 

இந்தக் கொலைக்கு  காரணமாகக் கூறப்படுவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது! கேதனின் தலையில் வழுக்கை விழுந்திருப்பதாகவும், அதை மறைக்க அவன் செயற்கை  முடியை( wig) அணிந்ததிருந்ததாகவும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத சியா அவனை அந்தக் கோட்டையின் மேல் இருந்து தள்ளிக் கொலை செய்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது!

தன் மயிரை இழந்தால் உயிர்விடும் கவரிமான் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்! ஆனால், தலைமயிரை இழந்ததால் தன் உயிரையே  ஒருவன் இழந்ததைப்  பற்றி இன்றுதான் கேள்விப்படுகிறேன்! 

அழுவதா, சிரிப்பதா  என்று தெரியவில்லை ! 

அழுதுகொண்டு, தமிழில் ஒரு வெண்பா! சிறிதே சிரிப்புடன் ஆங்கிலத்தில் ஒரு லிமெரிக்.

படித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்!

அன்புடன் 

ரமேஷ் 






"வழுக்கை" விழுந்தவனைக் கேள்வனாய்க்* கொள்ளல்

இழுக்கென்று எண்ணி அவனை- வழுக்குமோர்**

பள்ளத்தில் தள்ளியே கொன்றாள்; அவள்காதல்

கள்ளத்தைத் தூற்றும் உலகு

                                                                                                  ( இருவிகற்ப நேரிசை வெண்பா)

கேள்வன் - கணவன், காதலன்

** வழுக்குமோர்- வழுக்கும் ஓர்


 A Limerik on the same subject - with a different humorous take!


When she   found that   her lover was bald

Her feelings   for him    turned very cold

     But How can she be blame(d) 

     When Her ex lover and Flame

Slipped into  an abyss   and rolled ?



10 comments:

  1. இராம கி.July 12, 2026 at 6:47 PM

    Trying Limeric.

    ReplyDelete
  2. கலிகாலத்தில் இப்படிப்பட்ட அபத்தங்கள் அரங்கேறும் போலும் !

    ReplyDelete
  3. TO BE BOLD TO BE BALD

    ReplyDelete
  4. Is baldness a curse in this era of fashionable shaving?

    ReplyDelete
  5. வழுக்கைக்கு விக்(செயற்கை முடி ).
    அதனால் மரணம். வாழ்க்கைக்கு முடி முக்கியமா.
    வெண்பாவும் ஆங்கில Limerik ம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. முடியால் முடிந்த வாழ்க்கை!

      Delete
  6. சிறிதெனும் அருமை !

    ReplyDelete