இன்று திருவாதிரை.
அறுபத்துமூன்று நாயனார்களுக்குள் ஒருவராக திருநாளைப்போவார் என்று போற்றப்படும் நந்தனாரைப் பற்றிய ஒரு வரலாறு.
சீரிய சிவபக்தர் நந்தனாரை , அவர் பிறந்த குலத்தைக் காரணம் காட்டி சிதம்பரத்தின் கோயிலுக்குட்செல்ல அனுமதிக்கவில்லை.
சிதம்பரத்தின் வெளியே, பல நாட்கள் தவித்துக் காத்திருந்த நந்தனாருக்கு சிவன் அருள் புரிந்ததை பற்றி பல விதமான வரலாற்றுக் கதைகள் உள்ளன.
ஒரு வரலாற்றில் , நந்தனார் சிவபெருமான் கனவில் தோன்றிக் கூறியபடி , கோவிலுக்கு வெளியே ஏற்றப்பட்ட தீயில் புகுந்து , கோவிலின் கர்ப்பகிரஹத்தில் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது.
வேறு ஒரு கதையில், சிவபெருமானே கோவிலுக்கு வெளியே வந்து நந்தனாருக்கு தரிசனம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது ! இந்த வரலாற்றை உட்கொண்டு இந்த திருவாதிரையன்று ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
திரு நாளைப் போவார் நாயனார்
திருவாதிரை
மாதினைப் பாதியாய்க் கொண்டவன் நந்தனின்
சாதியைப் பாராமல் ஆதிரைத் தாரகையில்
வீதிக்கு வந்தே தரிசனம் தந்தவன்
மாதிரியோர் தெய்வமுண் டோ?
பின் குறிப்பு:
தில்லை நடராஜனின் தாண்டவம் பற்றி இதற்கு சில மாதங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு பாடலின் இணைப்பு கீழே!
http://kanithottam.blogspot.in/2017/02/blog-post_23.html
Great
ReplyDeleteநந்தனாரைப் பற்றி தெரிவித்தமைக்கு நன்றி. பாராட்டுக்கள்
ReplyDeleteநன்றி
ReplyDeleteதிருவாதிரைக்கு ஒரு வாய் களி
ReplyDeleteதிருவாய் திறந்து ஒரு வாக்களி