Search This Blog

Dec 29, 2017

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி

இன்று வைகுண்ட ஏகாதசி.
இந்நாளில் அனைவருக்கும் திருமாலின் அருள்சேர வேண்டி ஒரு சிறு பாடல்.
அன்புடன்
ரமேஷ்

வைகுண்ட ஏகாதசி



பாற்கடலில் பாம்பின்மேல்  பொய்த்துயிலில் துய்த்திருக்க
பொற்பாதம் லட்சுமியும்   நீவிவிட  - கார்மேக
வண்ணத்தான் காட்சிதரும்  பேரழகை நாள்தோறும்
எண்ணவே  இப்பிறப் பாம்.
                                                                                          ( பலவிகற்ப இன்னிசை வெண்பா)

4 comments:

  1. துயிலும் பெருமாளுக்குப்பின்
    ஆடும் அரசன் வரவேண்டாமா?
    ஆதிரை அன்று ஆடும் அழகை பதிவிடுக

    ReplyDelete
    Replies
    1. பார்வைக்கும் பதிவுக்கும் நன்றி!

      உங்கள் விருப்பத்துக்கிணங்க ஆதிரையான் மேல் இரு சிறு பாடல்கள் - இவைகளைத் சிறு திருத்தங்களுடன் சீக்கிரம் பதிப்பேன்!
      1.
      மாதினைப் பாதியாய்க் கொண்டவன் நந்தனின்
      சாதியைப் பாராமல் ஆதிரைத் தாரகையில்
      வீதிக்கு வந்தே தரிசனம் தந்தவன்
      மாதிரியோர் தெய்வமுண் டோ?
      2.
      காதினிக்கும் 'சிவாய நம'வெனும் நாமத்தை
      ஓதியே தொழுபவர்க் கெல்லாம் - மேதினியில்
      சாதிக்க இயலாத செயலொன்றும் உண்டோ
      ஆதிரையான் அவனருளி னால் .

      Delete
  2. Super....அது என்ன பலவிகற்ப இன்னிசை வெண்பா? அப்பவே சொன்னார் VVN நண்ணூல் சூத்திரம் நன்னா படிச்சுக்கோன்னு. அப்பாவும், இப்பவும், எப்பவுமே ஏறமாட்டைங்குது...

    ReplyDelete