திருவிளையாடல் பாடல்கள் -4
தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்.
ரமேஷ்
பாடல்
மன்னனும் காஞ்சனையும் மகன்வேண்டி மிகப்பெரும் யாகங்கள் பலபுரிந்தததன்
பின்னரே தீவிடுத்து வெளிவந்த பெண்ணுக்கு மும்முலைகள் முளைத்திருந்ததால்
இன்னலால் வாடுகையில் " தடாத(க்)கை என்றபெயர் ஏற்றவளும் அரசாண்டபின்
தன்னிணை யைக்கண்டதும் முலைமறைந்து நலம்சேரும் என்றுரைத்து அருளினானே
பாடற்பொருள் :
தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்.
அன்னை மீனாட்சி, தடாதகை என்ற பெயெரெடுத்து மன்னன் , மலையத்துவசனுக்கும், காஞ்சனமாலைக்கும் மகளாக அவதரித்ததை விவரிக்கும் படலம் இது
முன்பே நான் பதித்திருந்த மீனாட்சி திருமணப் படலத்திற்கு முன்பாகவே வந்திருக்க வேண்டியது.
சிறு கவனக் குறைவு.
இந்த திருவவதாரப் படலத்தைப் படித்த பின் , தொடர்ச்சியைக் கருதி, மீனாட்சி திருமணப் படலத்தை கீழ்க்காணும் இணைப்பில் சென்று மீண்டும் படிக்கவும்.
http://kanithottam.blogspot.in/2017/11/1_15.html
அன்புடன்
ரமேஷ்
தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்.
பாடல்
மன்னனும் காஞ்சனையும் மகன்வேண்டி மிகப்பெரும் யாகங்கள் பலபுரிந்தததன்
பின்னரே தீவிடுத்து வெளிவந்த பெண்ணுக்கு மும்முலைகள் முளைத்திருந்ததால்
இன்னலால் வாடுகையில் " தடாத(க்)கை என்றபெயர் ஏற்றவளும் அரசாண்டபின்
தன்னிணை யைக்கண்டதும் முலைமறைந்து நலம்சேரும் என்றுரைத்து அருளினானே
பாடற்பொருள் :
மலையத்துவச மன்னனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் மகப்பேறு வேண்டி செய்த தவப்பயனால் , அவ்வேள்வித் தீயிலிருந்து , மூன்று வயதடைந்த ஒரு பெண் குழந்தை வெளிவந்தது. பெண் குழந்தை என்பதாலும், அக்குழந்தைக்கு மூன்று முலைகள் உள்ளதாலும், மனம் கலங்கிய அவர்களுக்கு, ஈசன் " வருந்தற்க! தடாதகை என்ற பெயர் கொண்ட இப்பெண் பாண்டிய நாட்டை அரசாள்வாள். அவள் தன்னுடைய துணைவனை சந்திக்கும்போது மூன்றாம் முலை மறையும்." என்று கூறி அருள் புரிந்தான்.
The Story in Tamil
குலசேகர பாண்டியனின் வழிவந்த மலையத்துவச பாண்டியன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தான். அரசனும் அவனது மனைவி காஞ்சனமாலையும் , வெகு நாட்கள் கழிந்தும் , குலம் தழைக்க ஒரு மகன் இல்லாததால் மனம் வருந்தினர். அக்குறையைத் தீர்க்கும் பொருட்டு , இறைவன் அருள் வேண்டி யாகங்கள் பல செய்தனர் . அவர்கள் இறுதியில் செய்த புத்திர காமேஷ்டி யாகத்திற்கு பலன் கிடைத்தது. அந்த யாகத்தின் வேள்வித் தீயிலிருந்து , மூன்று வயது நிரம்பிய ஒரு பெண்குழந்தை தோன்றி காஞ்சனாமாலையின் மடி சேர்ந்தது. குலம் தழைக்க ஒரு ஆண்மகவை எதிர்பார்த்திருந்த தம்பதியினருக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. அது மட்டுமல்லாமல், வந்தடைந்த பெண்குழந்தைக்கு மூன்று முலைகள் இருந்தன! அதனால் மனம் வருந்தினர், அரசனும் அரசியும். அப்போது வானிலிருந்து, ஈசன் அருளால், அசரீரி ஒன்று ஒலித்தது. " அரசே, மனம் கலங்காதே! இப்பெண் குழந்தையை , தடாதகை எனப் பெயரிட்டு, ஒரு ஆண்மகனைப்போலவே நினைத்து வளர்ப்பாய்.. அவளுக்கு சகல கலைகளையும் கற்பித்து சிறக்கச் செய். உனக்குப் பின் அவள் அரியணை ஏறி அரசாள்வாள். அனைத்து தேசங்களையும் வெல்வாள். அச்சமயம், அவள் தான் மணக்கப்போகும் மணமகனை சந்திக்க நேரிடும். அச்சமயம், அவளது மூன்றாம் முலை மறைந்து போகும்." என்ற அந்த அசரீரியின் செய்தியைக் கேட்டு இருவரும் மனம் மகிழ்ந்தனர்.
The story in English
Paandiyan Malayathuvasan , a descendant of Kulasekara Pandian, was ruling Madurai. He and his wife, Kanchanamalai longed for a male offspring who can succeed Malayathtuvasan. They performed several Yagnas , praying to Lord almighty. Finally, they performed a Puthra Kameshti Yagna as advised by Lord Indra. While the King was performing this Yagna, a three year old girl appeared out of the fire . The King took the child and gave it to his wife . It was seen that the child was born with three breasts. This added to the disappointment of the King and the Queen who were wanting a male offspring. At that time, a voice sounded from the Heavens , asking them not to worry and to bring up the child as they would bring up a boy. It further asked them to name the girl Thadathagai and that she would ascend the throne after the King, will win many battles and rule the country and that her third breast would disappear the moment she meets her would-be husband in one of these encounters. This news brought immense happiness to the King and Queen.

No comments:
Post a Comment