Search This Blog

Aug 29, 2015

பவித்ரா வரலக்ஷ்மி விரதம் கொண்டாடுகிறாள் .

 

பவித்ரா வரலக்ஷ்மி விரதம் கொண்டாடுகிறாள் .


 பெரிய பன்னாட்டு நிறுவனமொன்றில்
பதவி வகிக்கும் பவித்ரா
வரும் வெள்ளிக்கிழமை
வரலக்ஷ்மி விரதம் கொண்டாடப் போகிறாள்.
 
அம்மாவுமில்லாமல்,மாமியாருமில்லாமல்
தலை நோம்புக்குப் பிறகு
முதல் தடவை
தனியாக செய்யப் போகிறாள்.
அவள் புருஷன் கூட " அவுட் ஆப் தி கண்ட்ரி ".
ஒரே டென்ஷன்.
 
பல தடவை தொலைபேசியிலும் ஸ்கைப் பிலும்
அம்மாவிடமும் , மாமியாரிடமும் பேசி
என்னன்ன செய்யவேண்டும் என்றும்
 'எது நம்ம ஆத்துப் பத்ததி ' என்றும் விசாரித்து
செக் லிஸ்ட் செய்து  கொண்டாகிவிட்டது. 
 
வேண்டிய  சாமானெல்லாம்  வாங்கி  வைத்துவிட்டாள்.
அலுவலகத்துக்கும் வெள்ளிக்கிழமை விடுப்பு சொல்லிவிட்டாள்.
பூஜை செய்ய வாத்தியாருக்கும், சமையல் மாமிக்கும்  சொல்லியாகிவிட்டது.  ( அன்று சாயங்காலம்
சுமங்கலிகளை அழைத்து வெற்றிலை பாக்குடன் ஹை டீ யும் கொடுப்பதாக ஏற்பாடு.)
 
 நாளை வெள்ளிக்கிழமை !
 வியாழன் அன்று மாலையே வெள்ளிக் கலசத்தில் தேங்காய் வைத்து ,
அம்மன் முகத்தைப் பொருத்தி 
மஞ்சள் கொத்து , மாவிலைத் தோரணங்களுடன்  அலங்காரம் செய்தாகிவிட்டது.
 
இரவு முழுதும் எக்சைட் மென்ட் டில் தூக்கம் வராமல் விடிகாலையிலேயே எழுந்துவிட்டாள்.
குளித்து முடித்து ரெடிமேட் பட்டு மடிசார் கட்டிக்கொண்டாள்.
கை , காது , கழுத்து நிறைய நகை அணிந்துகொண்டாள்.
பூஜை  சாமான் எல்லாம் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள்.
எல்லாம் ரெடி,. வாத்தியாரவரவேண்டியது தான் பாக்கி.
 
நேரம் இருப்பதால் ,அம்மனுடன் சேர்ந்து ஒரு செல்பி எடுத்து
அம்மாவுக்கு அனுப்பிவிட்டு வாத்தியாருக்காகக்  காத்துக் கொண்டிருக்கையில்   ---------
 
அம்மாவிடமிருந்து போன்.!
 
எடுத்துப் பேசுகிறாள் பவித்ரா.
 
' ஏண்டி, இவளே  , கழுத்திலே மாங்கல்யம் எங்கேடி ??"
 
 பவித்ராவுக்கு ஷாக்.!
 ஓடுகிறாள் மாடிக்கு -
 எப்போதோ கழட்டி , எங்கேயோ மாட்டி வைத்த ,
மாங்கல்யச் சங்கிலியைத்
தேடி எடுத்து சூடிக் கொள்ள!  
 

 அன்புடன் 

ரமேஷ் 

 

4 comments:

  1. 'பவித்ரா வரலக்ஷ்மி விரதம் கொண்டாடுகிறாள்'அருமையான பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பவித்ரா வரலக்ஷ்மி விரதம் கொண்டாடுகிறாள்
      அருமையானதொரு அங்கதம்..

      இது எனக்கு பாரதியாரின் அங்கதத்தை நினைவு படுத்துகிறது.

      வாழ்க வளமுடன்.
      வெல்க சிறப்புடன்.

      அன்புடன்,
      எஸ் வெங்கடேசன்..

      Delete
  2. Good punch at the end

    ReplyDelete
  3. அன்புள்ள நண்பரே, , தங்கள் பகிர்வுக்கும் பாராட்டுக்கும் நன்றி.
    என்னுள் எழும் எண்ணங்கள் என்பது உங்கள் பதிவின் பெயரா? உங்கள் பதிவிகுலை படிக்க ஆவல். எப்படி உங்கள் பதவி அணுகுவது?
    ரமேஷ்.

    ReplyDelete