Search This Blog

Sep 5, 2015

கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !

சற்று முன் பின் வரும் பதிப்பை, "eluthu.com " ல் பதிவு செய்திருக்கிறேன். உங்கள் கருத்து? பகிர்ந்து கொள்ளுங்கள்!

நன்றி 

ரமேஷ் 

கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !
கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !
அப்படி என்றால், உலகத்தில் நடக்கும் எல்லாத் தவறுகளுக்கும், கொடுமைகளுக்கும், காரணம் என்ன என்று நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்!
வேண்டாம்!
கடவுள் என்று ஒருவன் (ஒன்று) இருந்தால், அவனே (அதுவே) எல்லாவற்றிற்கும் காரணம் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம்  இல்லையா?
கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !
இல்லையென்று சொல்வீர்களானால் , உங்கள் தோல்விகளுக்கும், சோகங்களுக்கும் வேறு ஒரு காரணத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமே----குடித்துவிட்டுக் கிடப்பவன், தான் குடித்ததற்கு எதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பதைப் போல!
 கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !
அப்படிச் சொன்னால் , உங்கள் இயலாமையையும், முயலாமையையும் இறக்கி வைக்க ஒரு சுமைக்கல்  இல்லாமல் போய்விடுமே!
கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !அப்படிச் சொல்லிவிட்டால், வாரம் ஒரு முறை கோவில் சென்று வணங்கி,  உண்டியலில் காணிக்கை செலுத்தி , எல்லாம் அவன் செயல் என்று விட்டுவிட்டு, நாம் செய்யும் வக்கிரங்களின் விளைவுகளுக்கும் அவனே பொறுப்பு என்று தட்டிக் கழித்துவிட முடியாதே!
கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !
அதன் பிறகு, எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்!

 கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !

1 comment:

  1. அன்புள்ள ரமேஷ் ,
    கடவுள் இல்லை என்று சொல்லாததற்கு இதையும் சேர்துகொள்ளலமே !
    கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள்
    ஆலயங்கள் இருக்காது ,அங்கு சென்று பிரசாதம் என்ற பெயரில் விற்கப்படும் தின்பண்டகளை வாங்கித்தின்று காகிதகுப்பைகளை அங்கேயே போட்டு ஆலய சுவர்களிலும் தூண்களிலும் கையை துடைக்க முடியாது
    இராமசுவாமி

    ReplyDelete