கோயம்பத்தூர் வடிவேலம்பாளையம் கிராமத்தில் , தனது கையாலலேயே அரைத்த மாவால், விறகு அடுப்பில் தினமும் ஆயிரம் இட்டலிகள் சுட்டு , அவற்றை ஒரு இட்டலிக்கு ரூபாய் ஒன்றுக்கு மட்டுமே விற்று , அப்பகுதி மக்களுக்கு சேவை செய்து வரும் எண்பது வயதான " இட்டலிப் பாட்டி"கமலாத்தா அனைவருக்கும் ஒரு வழிகாட்டி!
அவர் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்!
அவரது சேவை பற்றி ஒரு பாடல் !
அன்புடன்
ரமேஷ்.
இட்டலி கள்இட்டு ரூபாய்க்கு ஒன்றென்று
சுட்டு வழங்கும் கமலாத்தா - தொட்டுக்க
சட்டினி சாம்பாரை மட்டும் தராமல்
தருகிறாள் தாயன்பும் சேர்த்து
(இருவிகற்ப இன்னிசை வெண்பா )
No comments:
Post a Comment