Search This Blog

Dec 31, 2016

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் 




இருபத்து ஒராம் நூற்றாண்டு நங்கை 
பருவம் பதினாறைப்* பொலிவுடன் கடந்து                            *2016
அகவை பதினேழை* அடைகின்ற நேரம்                                 *2017
மகிழ்வுடன் உங்கட்கு வாழ்த்துபல சொல்வேன்.

சென்றபல ஆண்டுகளின் தொடக்கத்தில்  நீங்கள்
செய்துபின் கைவிட்ட   தீர்மானங் களிலே
ஒன்றிரண் டையேனும் உருப்படி யாக
இன்றுமுதல் நிறைவேற்ற என்னுடைய  வாழ்த்து.

பண நோட்டு மதிப்புக் குறைத்திட்ட திட்டம் -( மனித) 
குணங்களின் குறைகளை சிறிதேனும் மாற்றி 
கறுப்புப்பணம்  சேர்த்தல் வரியேய்ப்பு போன்ற 
சிறுமைச் செயல்கள் செத்தொழிய வாழ்த்து .

வங்கியில் போட்டுள்ள உங்கள் பணத்தை 
தங்கு தடையின்றி எடுத்திடவே  வாழ்த்து.
ஏடிஎம்* முன்னால்  கால் கடுக்க நின்று                         *ATM
வாடாமல் இனியேனும் பணமெடுக்க வாழ்த்து. 


சிந்து , சக்ஷி , கர்மார்கர் *  போன்ற                                   * P.VSindhu, Sakshi Malik, Deepa Karmarkar,
இந்தியப் பெண்களின் இணையற்ற ஆற்றல்  
பிந்தி இருக்கும்நம் ஆண்களை உசுப்பி 
முந்தி அவர்சென்று மெடல்* வாங்க வாழ்த்து.          * medal


கிரிக்கட்டு*,  ஐஓஏ^  , இதுபோன்று இன்னும்                * cricket ^ IOA
தறிகெட்டு நடக்கின்ற விளையாட்டு குழுமம் 
நெறிகெட்டு போகாமல் நேர்வழியில் நின்று 
சரியான முறையில் செயலாற்ற வாழ்த்து. 

தாணே* புயலுடன்  தொடங்கிய துயரம்                         * Thane 
வார்தா* வரவுடன் தொடர்கதை ஆக                                * Vardha
வீணாய்ப்   போனவர் வாழ்க்கைகள் எல்லாம் 
மீண்டும்  இவ்வாண்டு மலர்ந்திட என்   வாழ்த்து.

செயற்கைக் கோளொன்றை செவ்வாய்க் கனுப்பி
 நிச்சயம்  உண்டங்கு "எச்டூஓ" * என்ற                                 * H2O
வியப்புறு உண்மையைக் கண்ட பின்இன்று   
சென்னையில் தண்ணீரைக் கண்டெடுக்க வாழ்த்து.

இவ்வாண்டு முழுதும் இனிதாய் இருக்க 
செய்காரி யங்கள் செவ்வனே சிறக்க  
வெவ்வினைகள்  என்றும்நமை  கவ்வா திருக்க 
செவ்வேளின் கருணை கிட்டிட என்  வாழ்த்து.





2 comments: