ஈசாவாஸ்ய உபநிஷத் செய்யுள் - 6 & 7
இந்த இரண்டு செய்யுள்களும் , தன்னிலும் , பிற எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கும் ஆன்மா ஒன்றேதான் என்பதை உணர்ந்தவனின் மனோபாவத்தையும், அவன் வாழ்க்கையை எவ்வாறு எதிர் கொள்ளுகிறான் என்பதையும் விளக்குகின்றன.
இந்த இரண்டு ஸ்லோகங்களும் , மொழிபெயர்ப்புடனும், தமிழக கவிதை வடிவிலும் !
அன்புடன்
ரமேஷ்
யஸ்து ஸர்வாணி பூதான்-யாத்மன்-யேவானு பச்யதி
ஸர்வபூதேஷு சாத்மானம் , ததோ ந விஜுகுப்ஸதே . 6
யஸ்மின் ஸர்வாணி பூதான்- யாத்மைவாபூத் விஜானத :
தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்வ-மனுபச்யத: 7
Translation**
Those who see all creatures in themselves
And themselves in all creatures know no fear.
மொழிபெயர்ப்பு *
Those who see all creatures in themselves
And themselves in all creatures know no grief.
How can the multiplicity of life
Delude the one who sees its unity?
யார் எல்லா உயிர் இனங்களையும் ஆன்மாவிலும் ( தன்னிலும்), ஆன்மாவை ( தன்னை) எல்லா உயிரினங்களிலும் காண்கிறானோ , அவன் யாரையும் வெறுப்பதில்லை.
ஆன்மாவே எல்லா உயிரினங்களாகவும் ஆகி இருக்கின்றது என்ற ஒருமையுணர்வைப் பெறுகின்ற ஒருவனுக்கு மனமயக்கங்களும் , கவலைகளும் இல்லை.
பாடல் 6 & 7
அனைத்து உயிரிலும் ஆன்மாவே .
----------ஆன்மா அனைத்தின் உயிர்வடிவம்.
நினைத்து இதனை உணர்பவர்கள்
----------எதையும் எவரையும் வெறுப்பாரோ?
எல்லா உயிரும் ஒன்றென்ற
----------ஒருமை உணர்வைப் பெற்றாயின்
பொல்லா மயக்கம், மனக்கவலை
----------இல்லாதோடும், இது உண்மை.
பொருள் விளக்கம் :
தன்னிலிருந்து மாறுபட்ட ஒன்றைத்தான் ஒருவன் தீயது என்று எண்ணி வெறுப்பான். அனைத்தும் ஒன்றேதான் என்று உணர்ந்தவனுக்கு , மற்றவற்றைப் பற்றிய வெறுப்போ , திரிபுணர்வோ (பொல்லா மயக்கம்), கவலையோ தோன்றுவதற்கு ஏது இடம்?
No comments:
Post a Comment