ஈசாவாஸ்ய உபநிஷத் - ஸ்லோகம் 4 & 5
இதுவே இந்த ஆண்டின் கடைசிப் பதிவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அனைவருக்கும் , வரும் ஆண்டு , தமிழ் மணம் கமழும் ஆண்டாகவும் ,, ஆன்மீக உணர்வு தழைக்கும் ஆண்டாகவும் , இருக்க வாழ்த்துக்கள்!
அன்புடன்
ரமேஷ்
ஈசாவாஸ்ய உபநிஷத் - ஸ்லோகம் 4 & 5
5
Translation : **
4. The Self is one. Ever still, the Self is
Swifter than thought, swifter than the senses.
Though motionless , he outruns all pursuit.
Without self, never could life exist.
5. The Self seems to move, but is ever still.
He seems far away, but is ever near.
He is within all, and he transcends all.
4. ஆன்மா அசைவற்றது; ஒன்றேயானது; மனதை விட விரைவானது; புலன்கள் அதனை அறிய இயலாது. அது நிலையாக நின்றபடியே அனைத்திற்கும் முன்னால் செல்கிறது. ஓடுகின்ற அனைத்தையும் முந்துகிறது. அது நிலையாக நின்றுகொண்டு மற்ற அனைத்தையும் இயக்குகிறது.
5. அது அசைகிறது; அது அசைவதில்லை. அது தூரத்தில் உள்ளது, மிக அருகில் உள்ளது. அது அனைத்தின் உள்ளேயும் உள்ளது; அனைத்தின் வெளியிலும் உள்ளது .
பொருள் விளக்கம் :*
4. ஆன்மா எங்கும் நிறைந்ததால் அது அசைவற்றது. ( அசைய முடியாது!).
மனம் ஒன்றை நினைக்கும்போது, மனம் ஒளியை விட வேகமாக "வெளியில் சென்று " அந்தப் பொருளின் வடிவை எடுப்பதாக நம் நூல்கள் கூறும். ஆனால் ஆன்மா எங்கும் இருப்பதால், அது மனத்தை விட விரைவானது. எல்லா இயக்கத்திற்கும் காரணமாக இருப்பது பிராணன். அந்தப் பிராணனை இயக்குவது ஆன்மா.
5. ஆன்மா பொருள்களுக்கு உள்ளதாகவும், வெளியாகவும், அசையும் பொருளாகவும், ஆசையாய் பொருளாகவும் , தூரத்திலும், அருகிலும் எங்கும் இருக்கிறது . என்பதும் , புலன்களால் அறிதற்கு முடியாததாகவும் உள்ளது என்பது இந்த எதிர்மறை pronouncements மூலம் விளக்கப்படுகிறது.
* - Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam
**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books
அசையாத் தன்மைய தான்மாவே
----------ஆயினும் அனைத்தையும் முந்துமது
அசையும் பொருள்கள் அனைத்தையுமே
----------விசையாய் இருந்து இயக்கிடுமே
மறைந்தே உறையுமவ் வான்மாவை
----------மறைகள் காட்டும் மெய்ப்பொருளை
புறமே காணும் புலன்மூலம்
----------புரிந்து கொள்ள முடியாதே.
ஆன்மா அசையும் தன்மையதாம்
----------அசையாப் பொருளும் அதுவேதான்.
அண்மையில் உள்ளதும் அதுவேதான்
----------தொலைவில் தெரிவதும் அதுவேதான்
அனைத்தின் உள்ளும் ஆன்மாவே
----------அனைத்தின் வெளியிலும் ஆன்மாவே !
நினைத்துப் பார்க்கும் எதனுள்ளும்
----------நிறைந்திருப்பது ஆன்மாவே !
The 4th and 5th stanzas of eesaavasya Upanishad are covered in this blog.
ReplyDeleteThis is likely my last blog in 2016 and I thank all those who chose to read / comment/ share my poems in the blog and encourage me.