Search This Blog

Dec 26, 2016

பால்

பால்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு குறித்த  நிகழ்வுகளில் மக்கள்  அனைவரும் பொறுமையாய் ஒழுங்கு காத்த முறை ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்.

அதிமுக வுக்கும் திமுக வுக்கும் இருக்கும் ஜன்மப் பகையால் ,  நிச்சயமாக பல அசம்பாவிதச் சம்பவங்கள் நடுக்கும் என்று பயந்திருந்த எனக்கும்   ( எம்.ஜீ.ஆர் காலமடைந்தபோது நான் நேரில் பார்த்து , ,அனுபவித்ததின் விளைவு  ) என் போன்றவர்களுக்கும்  , மக்கள் கற்பித்த ஒரு பாடம் இது. 

சாதாரணமாக ஒரு பெருந்தலைவர் காலமானால் கடை அடைப்பு , வாகனப் போக்குவரத்து நிறுத்தம்  போன்றவை இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடர்வதே தமிழக மரபு. 
பலரும் இதையே எதிர்பார்த்தனர். 

முதல் நாள்  மாலையில் மளிகை , காய்கறிக் கடைகளில் கூட்டம் பிய்த்துக்கொண்டு போயிற்று!
அடுத்த நாள் காலை பால் விலை - அரை லிட்டர் பாக்கெட் நாற்பது ரூபாய். 

நல்ல வேளை! இயல்பு நிலை உடனே திரும்பியது மக்களின் பக்குவத்தைக் காட்டியது.

ஒரு வேளை , இப்படி இல்லாமல், ஒரு மூன்று நான்கு நாட்களுக்கு கடை அடைப்பு போன்றவை நீடித்து இருக்குமானால் --



 இது  பற்றி --------

அன்புடன்
ரமேஷ்


தன்னிகரற்ற தலைவர் -
திடீர் மரணம் !
சோக வெள்ளத்தில்  மக்கள் .

கடைகள் எல்லாம் முழு அடைப்பு
இயல்பு  வாழ்க்கை ஸ்தம்பிப்பு!

நாளை தலைவருக்குப்  பால் .


அதுவரை

கடைகள் அடைப்  பால் --

வீட்டில் குழந்தைக்குக்
குடிக்க இல்லை -

பால்























No comments:

Post a Comment