Search This Blog

Dec 8, 2016

Cho

சோ ராமசாமி 

"சோ" என்று பெய்து கொண்டிருந்த  மழை நின்று விட்டது .

இந்த மழை --
வாரம் தோறும் நம்மை நனைத்து வந்த
கருத்து மழை !
மேடையிலும், வெள்ளித் திரையிலும் பொழிந்து வந்த
சிரிப்பு மழை.
நம் மனக் குளங்களை நிரப்பி வழிந்து வந்த
மகிழ்ச்சி மழை.
குடையின்றி, தடையின்றி வேண்டியே நாம்
நனைந்த மழை.

மழை நின்றால் வானம் வெளுக்கும்!
ஆனால்
இந்த மழை நின்றதால் , மனம் இருண்டதே!

அரசு கட்டிலில் யார் அமர்ந்த போதும் -
ஏமரா மன்னர்களை இடித்துரைத்து , அவ்வுரையை
பாமர மக்களையும் படிக்க வைத்து - அவர்கள்
ஏமாறா  திருக்கச் செய்த
எழுத்தாளன் .

அங்கதத்தில் அரசன் !
அதையும்
இங்கிதமாய்ச் சொல்லி
எவரையும் ரசிக்க வைத்த
நடிகன் .

மறைந்த முதல்வரின் அரசியல் ஆலோசகன் -
அவரைப் பின்தொடர்ந்து
அங்கும் ஆலோசனை சொல்லச் சென்றானோ?

அச்சமின்றி நினைத்ததை எழுதியவன் -, உயிர்
துச்சமென்று ஈழத்து தீவிர வாதத்தை எதிர்த்தவன் - துக்ளக்
அச்சகத்திலே இறுதி நாட்களைக் கழித்தவன் - இன்று
"அச்சச்சோ" என்று ரசிகர்கள் புலம்பிடவே
இச்சகத்தை விடுத்து மேலுலகம் சென்றானே!--

IS GOD DEAD - என்ற  கேள்வி எழுந்தாலும்
இந்த "சரஸ்வதியின் செல்வன் "
மீண்டுமிவ் யுகத்தில்  சம்பவித்து வருவானென
நம்பிடுவோம் , நாம் இன்று --

WHY NOT?
பொறுத்திருந்து பார்ப்போம் !
Let us WAIT AND SEE !

அதுவரை 

அன்னாரின் ஆன்மா சாந்தியுடன் இருக்க இறைவனை வேண்டுகிறோம்


ரமேஷ்
கனித்தோட்டம்
www .kanithottam .blogspot .in


















9 comments:

  1. சோவின் மறைவிற்கு பிறகு அரசியல் மேடையே "வெறிச்சோ "என்று அல்லவா இருக்கிறது !

    ReplyDelete
  2. good one......அங்கதத்தில் அரசன்- unable to get this....please explain

    ReplyDelete
    Replies
    1. MNR,
      அங்கதம் - It is Satire in tamil

      PRN

      Delete
  3. Thanks forsll those who have conveyed their appreciation!

    ReplyDelete
  4. அருமை இரமேஷ்.

    வாரம் தோறும் பத்திரிகைக்குக் காத்திருப்போம், ஆண்டு தோறும் மெரினாவில் ஆண்டு விழா கூட்டத்துக்குக் காத்திருப்போம்!

    ReplyDelete