வேகத் தடைகள்
இது நான் கண்ட ஒரு புதுவிதமான வேகத் தடை!
நடந்து செல்வோரையும் நிறுத்தி, அவர்களை கடக்க விடாமல் செய்யும் மஞ்சள் மலர்களால் ஆன வேகத் தடை.
படித்துப் பாருங்களேன்!
அன்புடன்
ரமேஷ்
வேகத் தடைகள்
தெருவின் மருங்கில் உறங்கும் மரங்கள்
இரவில் உதிர்த்த மஞ்சள் பூக்கள்
குறுக்கே தெருவில் விரித்துப் பரவி
இருக்கும் அழகிய வேகத் தடைகள்
கருத்த சாலைப் பரப்பின் மேலே
திரண்டு குவிந்த பூக்களின் கோர்வை
விறுவிறு வென்று நடக்குமென் நடையை
மறுத்து நிறுத்திய மென்மலர்ப் போர்வை
இவை
விதிக்கப் பட்ட ஆயுள் முடிந்து
முதிர்ந்து முற்றும் மரித்த பின்னாலே
உதிர்ந்து கீழே விழுந்து சாலையில்
சிதறிக் கிடைக்கும் சடல மலர்களோ?
இதயத் துடிப்பு இன்னும் கொஞ்சம்
பதுங்கி அவற்றுள் புதைந்து இருக்குமோ?
பாதம் அவைமேல் பதித்து நடந்தால்
வேதனை யுற்று வலியால் வெதிர்க்குமோ?
பதித்துக் காலை பூமேல் வைத்து
மிதித்து வதைக்க மனமோ இல்லை.
இந்த வழியே செல்வதை விடுத்து
வந்த வழியே திரும்பி நடந்தேன்!
வெதிர்த்தல் = நடுங்குதல்
இது நான் கண்ட ஒரு புதுவிதமான வேகத் தடை!
நடந்து செல்வோரையும் நிறுத்தி, அவர்களை கடக்க விடாமல் செய்யும் மஞ்சள் மலர்களால் ஆன வேகத் தடை.
படித்துப் பாருங்களேன்!
அன்புடன்
ரமேஷ்
வேகத் தடைகள்
தெருவின் மருங்கில் உறங்கும் மரங்கள்
இரவில் உதிர்த்த மஞ்சள் பூக்கள்
குறுக்கே தெருவில் விரித்துப் பரவி
இருக்கும் அழகிய வேகத் தடைகள்
கருத்த சாலைப் பரப்பின் மேலே
திரண்டு குவிந்த பூக்களின் கோர்வை
விறுவிறு வென்று நடக்குமென் நடையை
மறுத்து நிறுத்திய மென்மலர்ப் போர்வை
இவை
விதிக்கப் பட்ட ஆயுள் முடிந்து
முதிர்ந்து முற்றும் மரித்த பின்னாலே
உதிர்ந்து கீழே விழுந்து சாலையில்
சிதறிக் கிடைக்கும் சடல மலர்களோ?
இதயத் துடிப்பு இன்னும் கொஞ்சம்
பதுங்கி அவற்றுள் புதைந்து இருக்குமோ?
பாதம் அவைமேல் பதித்து நடந்தால்
வேதனை யுற்று வலியால் வெதிர்க்குமோ?
பதித்துக் காலை பூமேல் வைத்து
மிதித்து வதைக்க மனமோ இல்லை.
இந்த வழியே செல்வதை விடுத்து
வந்த வழியே திரும்பி நடந்தேன்!
வெதிர்த்தல் = நடுங்குதல்










