Search This Blog

Apr 18, 2018

உண்ணா விரதங்கள்


உண்ணா விரதங்கள் 

சமீப காலத்தில் எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம் இருப்பது என்பது அரசியல்வாதிகளுக்குப் பழக்கமாகிவிட்டது. மக்களுக்காக தாங்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற, பெருந்தலைவர்கள் சென்ற காலங்களில் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது போய், இப்போது  காலையில் ஆரம்பித்து மாலை வரையில், ஏன், மதியம் வரையும் கூட உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இம்மாதிரியான போன்சாய் உண்ணாவிரதம் கூட இருக்க முடியாமல் , ஆரம்பத்திலும்,  நடு நடுவேயும், இவர்கள் சாப்பிடுவது அமபலத்துக்கு வந்து சந்தி சிரிக்கிறது. சமீபத்தில் நடந்த சில உண்ணாவிரதக் கூத்துகள் பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ்.

உண்ணா விரதங்கள் 








ராஜ கட்டின்* முன்னாலே                 * RajGhat in Delhi
-----சாதிப்  பிரிவைக் கண்டித்து
போஜனம் துறந்து சிலமணிகள்
-----போராட் டங்கள் செய்யுமுன்னே

காலை ஒன்பது மணியளவில்
-----சாலை யோரக்  கடையொன்றில்
சோலா பதுரா* சாப்பிட்டு              * Chole Bathura
-----மாலை வரையில் உண்ணா விரதம்

காவிரி நதிநீர் இல்லாமல்
-----பயிர்களும் உயிர்களும் வாடுவதால்
சாவினை நோக்கிடும் உழவர்க்காய்
-----வாரியம் அமைக்கக் கோரியிவர் 

வள்ளுவர் கோட்ட வளாகத்தில்
-----பட்டினிப்  போரை நடத்துகையில்
கள்ளத் தனமாய் திரைக்குப் பின்
-----பிரிப்பார் பிரியாணி பொட்டலத்தை .

உண்ணா விரதம் இருக்குமிவர்
-----மக்கள் நலன்பற்றி எப்போதும்
எண்ணா விரதம் எடுத்தவராம்
-----இவர்களை நம்பி ஏது பயன் ?

கடைகளை அடையெனக் கோஷமிட்டு
-----கல்லெறி வல்லவ ரானஇவர்  - தன்
வயிறை அடக்க முடியலையே - அவர்
-----வாயைநாம் அடைப்பது எப்போது?

10 comments:

  1. Replies
    1. Thank you for your continuous encouragement!

      Delete
  2. Good one. Face bookla podalamey. Will have more reach

    ReplyDelete
    Replies
    1. Thanks. I have already posted it on my facebook page!

      Delete
  3. You had mentioned it as Superfast. Thought that you wanted to say Supperfast, but misspelt.

    ReplyDelete
  4. Replies
    1. Thanks, Raman, for your continuing encouragement.

      Delete
  5. ஐந்து நாள் test cricket , மூன்று நாள் ranji trophy , oneday cricket எல்லாம் மாறி 20-20 கிரிக்கெட் ஆனது போல் இனி ஒருமணி நேர அடையாள உண்ணாவிரதம் வரலாம் , கைதட்ட மக்களும் அதை primetime செய்தியாக ஒளிபரப்ப tv channel களும் இருந்தால் போதும் .

    ReplyDelete