புத்தாண்டு விளம்பி வருட வாழ்த்துக்கள்
ஹேவிளம்பி ஆண்டு முடிந்து , இன்று விளம்பி ஆண்டு ஆரம்பம்.
இது அறுபது வருடங்கள் கொண்ட தமிழ் ஆண்டுகளின் சுழற்சியில், முப்பத்தி இரண்டாம் ஆண்டு!
இந்த நாளன்று அனைவரும் இன்புற்று இருக்க இறைவனை வணங்கி ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
ஹேவிளம்பி ஆண்டு நிறைந்து
-----விளம்பியும் கிளம்பும் இந்நாள்
தீவினை அனைத்து மகன்று
-----நல்வினை நாளும் நிறைய
காவிரியில் நீரும் பெருகி
------ஆவரித் தந்நதி* ஓடி
மூவகை போகம் பயிர்கள்
-----விதைத்துநல் அறுவடை செய்ய
ஆவினம் ஆடவர் பெண்டிர்
-----யாவர்க்கும் இன்பம் சிறக்க
துயர்களும் துன்பமும் நம்மை
------தீண்டாது தூரம் ஓட
கூவிளத் தருவடி அமர்வோன்* *
-----சேவடி போற்றி நானோர்
பாவினை விளம்பிப் பணிந்து
----- போற்றியே வேண்டு கின்றேனே !
* ஆவரித் தந்நதி -= ஆவரித்து அந்நதி
ஆவரித்து = ஆரவார ஒலியுடன்
** கூவிளத்தரு= வில்வ மரம்
கூவிளத் தருவடி அமர்வோன் --= வில்வ மரத்தடியில் வீற்றிருக்கும் சிவபெருமான்
ஹேவிளம்பி ஆண்டு முடிந்து , இன்று விளம்பி ஆண்டு ஆரம்பம்.
இது அறுபது வருடங்கள் கொண்ட தமிழ் ஆண்டுகளின் சுழற்சியில், முப்பத்தி இரண்டாம் ஆண்டு!
இந்த நாளன்று அனைவரும் இன்புற்று இருக்க இறைவனை வணங்கி ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
ஹேவிளம்பி ஆண்டு நிறைந்து
-----விளம்பியும் கிளம்பும் இந்நாள்
தீவினை அனைத்து மகன்று
-----நல்வினை நாளும் நிறைய
காவிரியில் நீரும் பெருகி
------ஆவரித் தந்நதி* ஓடி
மூவகை போகம் பயிர்கள்
-----விதைத்துநல் அறுவடை செய்ய
ஆவினம் ஆடவர் பெண்டிர்
-----யாவர்க்கும் இன்பம் சிறக்க
துயர்களும் துன்பமும் நம்மை
------தீண்டாது தூரம் ஓட
கூவிளத் தருவடி அமர்வோன்* *
-----சேவடி போற்றி நானோர்
பாவினை விளம்பிப் பணிந்து
----- போற்றியே வேண்டு கின்றேனே !
* ஆவரித் தந்நதி -= ஆவரித்து அந்நதி
ஆவரித்து = ஆரவார ஒலியுடன்
** கூவிளத்தரு= வில்வ மரம்
கூவிளத் தருவடி அமர்வோன் --= வில்வ மரத்தடியில் வீற்றிருக்கும் சிவபெருமான்
விளம்பிக்குக் கவி பாடிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்.தங்கள் மனம் போல் காவிரி பாய்ந்து மூன்று போகம் விளைய இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteநன்றி புலவரே
ReplyDeleteவரும் ஆண்டில் நல்லது நடக்கட்டும்