Search This Blog

Apr 10, 2018

சிலையுதிர் காலம்










பல்வேறு தலைவர்களின் சிலைகள் இன்று தாக்கப்பட்டும், பீடங்களிருந்து நீக்கப்பட்டும் வருகின்றன. இந்த " சிலையுதிர்காலம்" பற்றி ஒரு பாடல்.!


அன்புடன் 

ரமேஷ் 


சிலையுதிர் காலம்

கோடைக் காலம் போயதன்   பின்னே 
வாடைக்  காலம்  வருவதன்  முன்னே
இலையா டைகளை உடுத்த மரங்கள் 
களையும்   காலம் இலையுதிர் காலம்.

வடகிழக் கினிலே முதலில் தொடங்கி 
வங்கா ளம்முதல்  பற்பல ஊரில் 
சடசட  வென்று சிலைகள் சரிந்து
இன்று நம்நாட்டில்  சிலையுதிர் காலம் .

திரிபுரா மாநிலத்   தேர்தல் முடிவில்  
-----முதலில் உதிர்ந்தது லெனினின்   சிலையே!
வரிசை வரிசையாய் பின்னர்ப் பலவும்   
-----அதன்பின் அடைந்தன  பரிதாப நிலையே.

புதிய கோட்டையில்  பெரியார்   சிலையும்
-----கேரளக் கண்ணூர்   காந்தியின்  சிலையும்
மதியப் பிரதேச மாநிலந் தனிலே
-----நேதாஜி சந்திர  போஸின் சிலையும்

உத்தரப் பிரதேச  மீரட்  நகரில்
-----அம்பேத் காரின் சிலையும் அதன்பின் 
(கொல்)கத் தாவில் சியாமப்  பிரசாதும்  
-----ஒன்றன்பின் ஒன்றாய்   சிதறின சிலைகள்

இவர்தான்  செய்தார் முதலில் என்றவரும்  
-----இல்லை அவர்தான் என்றே இவரும் 
தவறை மற்றவர்  மேலே சுமத்தி 
-----தன்  செயலுக்கே நீதிகற் பிப்பார்  

மேலும் மேலும் இப்போர் தொடர
-----நாளும் புதிதாய் விதைகள்  விதைப்பார் 
நல்லோர் எல்லாம்  இதனைக் கண்டு  
-----உள்ளம் வருந்தி  மனம்பத  பதைப்பார் 

இன்றிங்கு தொடங்கும்   சிலையுதிர் காலம் 
-----நாட்டுக் கேதினி*  நல்லெதிர் காலம்                        * ஏது +இனி 

9 comments:

  1. Excellent! First time I am hearing "Silaiyudir kaalam".

    Fantastic thought process. Bala

    ReplyDelete
  2. என்னன்னவோ எழுத வேண்டும் என்று தோன்றுகின்றது. கற்றறிந்த பண்பாடு தடுக்கிறது. வருத்தப்படக்கூட தகுதி இல்லையோ என்று தோன்றுகிறது. சிலையுதிர்காலம் ஒரு ஆழ் மனதின் வெளிப்பாடு . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Though a bit late, let me record this. On seeing your title, I am reminded of the poet Shelly's sonnet, titled Ozymandias. Below I am giving a link reference for you to appreciate that sonnet. More recently, (you may see it on Netflix) a serial titled Breaking Bad, in which one of the last few episodes is titled the same Ozymandias. You will find the link a good read, and the episode a nice watch:

    https://englicist.com/summary-analysis/ozymandias-shelley-summary

    ReplyDelete
    Replies
    1. Thank you for your comments. Immeduately i read the poem by Shelly. Nice one. Reminds one about the transitory nature of power and position and How the mighty fall. Thanks for guiding me to this nice poem.

      Delete
    2. I have record of that episode of Breaking Bad, if you wish to see on our Tata Sky. Will get erased in month's time, when we go out of town.

      Delete
  4. நாட்டுக்கேதினி நல்லெதிர் காலம் என்றேன் முடித்தீர்?
    நாட்டுக்கினிதான் நல்லெதிர் காலம் என்பேன் நான்;
    நாடு பார்க்காததா சிலை உடைப்பை - கணேசன் முதல்
    நாட்டையாண்ட கலைஞனின் சிலை வரை.

    ReplyDelete