திருவிளையாடல் பாடல் 11 - உக்கிர பாண்டியன் திருவவதாரப் படலம்
பாடல் :
சுந்தரர் செங்கோல் ஆட்சியின் பின்னரும் சந்ததி தொடர்ந்து தழைக்க
கந்தனே தடாதகை அன்னையின் கருவிலே மகனாய் உருவ மெடுத்து
வந்து பிறந்து உக்கிர வர்மன் என்றதோர் பெயரை ஏற்று
தந்தைதாய் மகிழ்ந்திட தரணியோர் வியந்திட பலகலை கற்றுத் தேர்ந்தான்
பாடல் பொருள் :
சோமசுந்தரனாருடைய நெறிதவறாத செங்கோல் ஆட்சிக்ருட்டு, தடாதகைப் பிராட்டியார் திருவயிற்றில், கந்தப்பெருமானே மகனாய் உருவெடுத்தார். அவ்வாறு பிறந்த குழந்தைக்கு, உக்கிரவர்மன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். உக்கிரவர்மனும் சிறுவயதிலேயே, பெற்றோர் மகிழவும், மற்றோர் வியக்கவும் , பல்வேறு கலைகளும் பயின்று தேர்ச்சி பெற்றான்.
The story in Tamil :
சோமசுந்தர பாண்டியனாகவும் , அன்னை தடாதகைப் பிராட்டியாகவும் உருவெடுத்த சிவபெருமானும், அன்னை மீனாட்சியும், மக்கள் மகிழ்வுறும் விதமாக செங்கோலோச்சி அருள் புரிந்து வந்தனர். இப்பாண்டிய குலம் தழைத்தோங்கவும், மக்கள் தொடர்ந்து நல்லாட்சி பெறவும் விழைந்த சிவபெருமானின் திருவுளப்படி , கந்தபிரானே தடாதகைப் பிராட்டியின் கருவில் மகனாக உருவெடுத்து அவதரித்தார். முருகப்பெருமானே அவதாரம் செய்ததால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இச்சிறுவன் பிற்காலத்தில், வருணன், இந்திரன், மேரு என்ற மலையரசன் என்ற மூவரையும் கூட கண்டவுடன் நடுங்கச் செய்யும் வீரனாக விளங்குவான் என்பதால், அவனுக்கு உக்கிர வர்மன் என்று பெயர் சூட்டினர். வேதநெறிப்படி செய்யவேண்டிய கிரியைகளை முடித்து, வியாழ பகவானையே குருவாகப் பெற்று வேதங்களிலும் , பல்வேறு கலைகளிலும் தேர்ச்சி பெற்றான் உக்கிர சிம்மன். விற்போர், மற்போர், வாள்போர், யானையேற்றம், குதிரை ஏற்றம், தேரோட்டுதல் என்ற பல கலைகளிலும் வல்லுனன் ஆனான்.
The Story in Eglish :
Lord Shiva and Goddess Meenakshi , in the form of King Somasundara Pandiyan and Queen Thadaathagai were ruling the Pandya Kingdom and were showering their blessings on the subjects of the Kingdom. In order that this Pandya dynasty continuous to provide good governance to the subjects of the kingdom, Lord Siva willed for Lord Muruga to take birth as their son. As willed, Queen Thadaathagai gave birth to a male child , who was none other than Lord Muruga himself. This event gave great joy to the subjects of the Pandya Kingdom. The child , who with his prowess, was destined to earn the respects of Varuna, ( King of Rains) , Indira ( King of Devas) and Meru ( King of mountains) was named Ukkaira Varman. Ukkirvarman learnt the Vedas and various other scriptures under the direct tutelage of Vyaazha Bhagavaan. He also became expert in various martial arts like archery, sword fighting, wrestling and skills like horse riding, elephant riding and riding of chariots .
👌👌👌
ReplyDeleteThank You.
ReplyDelete