வடை சுடும் பெண்
கீழே உள்ள வடை சுடும் பெண்ணின் படத்தைப் பார்த்து எழுதிய பாடல், இங்கு.
ஏன் அவளுக்கு இந்த வடை சுட்டு வாழும் வாழ்க்கை?
அதன் பின்னணி என்ன ?
இந்தக் கேள்விகளுடன் எழுந்த பாடல் இது!
படம் தந்த "யாணர் " தமிழ்க் கவிதை தளத்திற்கு நன்றி
அன்புடன்
ரமேஷ்
பி.கு;
சில மாதங்களுக்கு முன்னாள் இட்லி விற்கும் கண்ணாத்தா என்ற மூதாட்டியை பற்றி ஒரு பாடல்
எழுதினேன் . அதை இந்த இணைப்பில் காணலாம்.
இட்டலி என்றதும் நினைவுக்கு வருவது சென்னை ரத்னா கபே இட்லி சாம்பார்.
அது பற்றிய பாடல் இங்கே :
https://kanithottam.blogspot.com/2019/11/blog-post_18.html
இட்லியையும், வடையையும் பற்றிக் கூறிவிட்டு, பொங்கலை மட்டும் விட்டு விடுவதா?
இந்தப் பெண்களானாலும், கோவிலில் கிடைக்கும் ப்ரசாதத் பொங்கலுக்கு ஈடாகாது!
அது பற்றிய பாடல் இந்த இணைப்பில் :
https://kanithottam.blogspot.com/2020/01/1.html

வயற்காட்டு வரப்பினிலே விறகடுப்பு வெக்கையிலே
வியர்வை வழிகையிலும் அயராமல் பதறாமல்
சுயமாகத் தொழில் செய்து குடும்பத்தைக் காக்கின்ற
உயர்வான உத்தமியே உன்பின்னால் கதையென்ன?
உயிரென்று நீநினைத்த உன்கணவன் உனைவிட்டு
அயலாள் ஒருத்தியோடு ஓடித்தான் போனானோ?
காலநேரம் பார்க்காமல் வேலைவெட்டி இல்லாமல்
கள்ளுக்கடையொன்றே கதியென்று கிடக்கானோ?
வயதான பெற்றோரை பெற்றெடுத்த பிள்ளைகளை
அயல்நாட்டில் வேலைசெய்து வாழவைக்க சென்றானோ?
உன்னுடைய பின்னணியில் உள்ளகதை எதுவெனினும்
தன்மானம் காத்திடவே தனியாய்நீ உழைக்கின்றாய்.
வடைசுட்டு வாழ்கின்ற உன்வாழ்வின் கேள்விக்கு
விடைவிரைவில் கிடைத்திடவே வேண்டுகிறேன் ஆண்டவனை.
வடைசுட்டு வாழ்கின்ற உன்வாழ்வின் கேள்விக்கு
விடைவிரைவில் கிடைத்திடவே வேண்டுகிறேன் ஆண்டவனை.