இட்லி - சாம்பார்
இட்லி - இது தமிழர்கள் உலகுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம்!
இட்லி - இது தமிழர்கள் உலகுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம்!
பட்டி தொட்டிகளின் தெருவோரக் கடைகளில் தொடங்கி, நட்சத்திர உணவகங்களில் முடிய எங்கும் கிடைக்கும் ஒரு சுவையான சிற்றுண்டி.
இவைகளில் எனக்கு மிகப் பிடித்தது சென்னை ரத்தினா கபே யின் இட்லி - சாம்பார் combination ( இணைப்பு?) .
இது பற்றி ஒரு பாடல்.
சுவையுங்கள்!
அன்புடன்
ரமேஷ்
வெள்ளை வெளேரென்ற மல்லிப்பூ இட்டலியை
-----வாழையிலை மேலேவைத்து
அள்ளி யதன் மீதினிலே அறுசுவையை* அரைத்துவிட்ட
-----செந்நிறச் சாம்பாரூற்றி
மேம்பக்க மாகவே** இலையினோர் மூலையில்
------தேங்காயின் சட்னியிட்டு
சாம்பாரும் சட்டினியும் சங்கமிக்கும் இடத்திலே
-----இட்டலித் துண்டைத் தோய்த்து
மடமட வென்றதை மென்று முழுங்கிடும்
-----மகிழ்ச்சிக்கு இணையும் ஏது ?
* அறுசுவையை - condiments
** மேம்பக்கம் = மேல்பக்கம்
Besh Besh : Romba nalla irukku. Ethai than naan ethirpathen.
ReplyDeleteApt comment! Thanks.
DeleteMy mouth is watering!!
ReplyDeleteWe will go there next time you come to chennai! Now it is there in Adyar also.
Deleteரசித்து எழுதியுள்ள கவிதை.திருமணத்திற்கு முன் திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த போது ரத்னா கஃபேயில் சாப்பிட்ட ஞாபகம் வருகின்றது.தொடரட்டும் கவிதைப்பணி.
ReplyDeleteThanks, SNS!
ReplyDeleteஅன்புள்ள ரமேஷ்
ReplyDeleteபடித்தவுடன் இட்லி சாம்பார் சட்னி மூன்றையும் கண்ணெதிரே காண்பது போல் தெரிகிறது.
ராம்மோகன்