Search This Blog

Mar 7, 2020

பிரதோஷப் பாடல் - 33

பிரதோஷப்  பாடல் - 33

என் முந்தைய பதிவுகளில் கூறியிருந்த படி, திருக்கருகாவூர் முல்லைவனநாதர் மூலவர் உருவம் கல்லால் ஆனதல்ல - புற்று மணலால் ஆனது. அதனால் , அந்த மூலவருக்கு பால், நீர் முதலிய திரவப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. புனுகுச் சாந்தைச் சாத்தி   மட்டும் அபிஷேகம் செய்யப்படும். இவ்வாறு செய்து வேண்டிக்கொள்பவர்களின் சரும நோய் அகலும் என்பது ஐதீகம்
இந்தக் கோவிலை கட்டிய கிள்ளிவளவனும் அவனைப் பிடித்திருந்த சரும நோய் முற்றும் விலகப் பெற்றான் என்பது வரலாறு.
இந்தப் பிரதோஷ தினத்தன்று இந்தத் தல வரலாறைப் பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ்

தோல் மருத்துவர் முல்லைவன நாதர்  

ஈசனார் உறையும் முல்லைத் 
-----திருத்தலக் கோயில் சென்று 
பூசனை பலவும் செய்து 
-----பக்தியுடன் அவனைத் துதித்து 
வாசனைப் புனுகுச் சட்டம் 
-----பூசியபி ஷேகம் செய்தால் 
மாசுற்ற தோற்குறை நீங்கி 
-----தேசுற்றுப் பொலியும் தேகம் .

                                                                                     (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)

10 comments:

  1. பாடல் மிக நன்றாக இருக்கிறது . மேலும் மேலும் சிறப்பாக கவிதை எழுத
    எங்கள் வாழ்த்துக்கள் .
    நண்பன் ராம்மோகன்

    ReplyDelete
  2. மிக மிக அருமை. சிறிய ஆனால் கருத்து நிறைந்தது.👏👏

    ReplyDelete
  3. மிக மிக அருமை. சிறிய ஆனால் கருத்து நிறைந்தது.����
    மணியன்

    ReplyDelete
  4. Excellent . Easy to read . Please keep posting . Our Wishes. Because of you We will also be blessed by Lord Mullaivana nather

    ReplyDelete
  5. Replies
    1. Thanks for the encouragemnt. Your comments keep me going!

      Delete
  6. மிக மிக அருமை. தெய்வம் அருள் பாலிக்கட்டும்

    ReplyDelete