இன்று மார்கழியின் கடைசி நாள்!
என் இள வயது மார்கழி மாத நினைவுகள் இவை -
1. பசுஞ்சாணியில் பூசணிப் பூ செருகி வைத்து வாசலில் இடப்பட்டும் கோலம்.
2. அதிகாலையில் தெருவில் திருப்பாவை பாடிச் செல்லும் பஜனை குழுக்கள்;
3. காலை ஐந்து மணிக்கே கோயில் விஜயம் .
4. இறைவனை வணங்கியபின் ஓடிச் சென்று வாங்கிச் சாப்பிடும் நெய்ப்பொங்கல் பிரசாதம்!
சிறுவயதில், தீபாராதனை முடிந்தவுடன், முட்டி மோதி முன்னாலே போய் நின்று , பொங்கல் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கும் உண்டா?
இந்த பொங்கல் பிரசாதத்தைப் பற்றி, மார்கழியின் கடைசி நாளன்று ஒரு லிமெரிக் கவிதை !
அன்புடன்
ரமேஷ்
( ஒரு ஹிந்தி மொழிச் சொல்லோடு)
பனிவழியும் மார்கழித் திங்கள்
நெய்வழியும் பிரசாதப் பொங்கல்
-------வரிசை முறைகள் மீறி
-------மற்றவர் முதுகில் ஏறி
வாங்குவதோ மிகப்பெரிய "டங்கல் " *
"டங்கல் " =*डंगल ;(Dangal ) ; ஹிந்திச் சொல் ; பொருள் = குஸ்திச் சண்டை
(வேற்று மொழிச் சொல் இல்லாமல்)
பனிவழியும் மார்கழித் திங்கள்
நெய்வழியும் பிரசாதப் பொங்கல்
-------வரிசை முறைகள் மீறி
-------மற்றவர் முதுகில் ஏறி
வாங்குவதி லென்னத டங்கல்?

மயிலையில் வாழ்ந்த காலம் , மார்கழி திங்களில் விடிகாலை பொழுதில் துடங்கும் மார்கழி பஜனை , கூடவே சென்றால் முடிவில் கிடைக்கும் சுடச்சுட பொங்கல்.வாழை இலையில் தருவார்கள். வாங்கி தின்ற நாட்கள் நினைவு உண்டு.அந்தமாதிரியான பாலகால அனுபவங்கள் மனத்துக்கு இனிமைதருபவை
ReplyDelete