Search This Blog

Jan 14, 2020

பொங்கல் வாழ்த்து !



பொங்கல் வாழ்த்து !


திங்கள்  தையின் மங்கள முதல்நாள் 
பொங்கல் பானை பொங்கிய பின்னே
கங்குல்  மறைந்தால்  கங்கென உதித்து 
செங்கதிர் பரப்பும் ஞாயிறை நோக்கி  
பொங்கல் சோறை  படைத்து வணங்கி 
மங்களப்  பொங்கலை மகிழ்வுடன் போற்றும் 
இனிய இந்நாளில் உங்கட் கெல்லாம்  
மனம்நிறை பொங்கல் வாழ்த்துக்கள் அளிப்பேன்.

மனிதர், மாடுகள், நெற்கதிர் வயல்கள் 
இனிதே இவைகள் நலம்பெற வாழ்த்து. 
கருநாடகத்தில் கனமழை பொழிந்து 
காவிரி நிரம்பி ஓடிட வாழ்த்து.
திராவிட மக்கள் தடியடி இன்றி 
நீரைப் பகிர்ந்து வாழ்ந்திட வாழ்த்து.
ஏரைப் பிடிக்கும் உழவர் எல்லாம் 
டிராக்டர்* களுக்கு மாறிட வாழ்த்து                                       * Tractor 
"ஸ்மார்ட்போன்*    ஆப்"பால்  சந்தையில் நெல்லை       * smartphone app 
தாமே நேராய்  விற்றிட வாழ்த்து.

பொங்குக பொங்கல் ! பொங்குக பொங்கல் !
தங்குக எங்கும் பொங்கும் மங்களம்! 

1 comment:

  1. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் , இனிய நண்பனே

    ReplyDelete