மாங்காய் மஹாத்மியம்
நேற்று இரவு, நான் இணைந்திருக்கும் யாணர் கவிஞர்கள் வாட்ஸ்-அப் குழுவில் , மாங்காய்த் துண்டுகளோடு ஒரு கிண்ணத்தில் உப்பு- மிளகாய்ப்பொடி வைத்து ஒரு படத்தைப் போட்டு, அது பற்றி கவிதைகள் எழுதுமாறு ஒரு அழைப்பு வந்தது.
அதைக் கண்டதும் பள்ளிப் பருவ நினைவுகள் நினைவில் கொப்பளித்தன!
வீட்டில் மாமரம் இருந்தாலும், மற்ற வீடு மாமரங்களிலிருந்து கல்லெறிந்து கீழே விழும் காய்களைக் கைப்பற்றி கடித்துண்ண நினைவுகள்--
வீட்டில் கூட்டமாய் அமர்ந்து கட்டித் தயிர் சோறோடு வெட்டிய மாங்காயை சேர்த்து சாப்பிட்ட நினைவுகள்---
பள்ளி வாசலிலும், கடற்கரையிலும் தள்ளு வண்டியில் வைத்து , மிளகாய்ப் பொடியும் உப்பும் தூவி விற்கப்படும் நீளமான மாங்காய் வில்லைகளை ( ஒன்று மூன்று பைசா) வாங்கித் தின்ற நினைவுகள் ---
இப்படிப் பல நினைவுகள்.
அவற்றை பாடல்களாக வடித்திருக்கிறேன் .
பகிர்ந்துகொள்ளுவதில் மகிழ்ச்சி!
அன்புடன்
ரமேஷ்
வெட்டிவைத்த மாங்காயின் துண்டோடு வக்கணையாய்
தொட்டுண்ண உப்புமிள காய்ப்பொடி - பட்டவுடன்
அண்ணத்தில் ஊருமே எச்சில் அதனோடென்
எண்ணத்தில் ஊறும் நினைவு .
இரு விகற்ப நேரிசை வெண்பா
கட்டித் தயிரெடுத்து பச்சரிசிச் சோறினிலே
விட்டுப் பிசைந்து அதனோடு தொட்டுக்க
மாங்காய் மிளகுப் புடனுண்ணும் பேற்றினையே
வாங்கவும் உண்டோ விலை?
பல விகற்ப இன்னிசை வெண்பா
கல்லெறிந்து கீழ்விழுந்த மாங்கா
துண்டுதுண்டாய் அதைவெட்டி பாங்கா
-----மிளகாய்ப் பொடி தூவி
------உப்புத் தூள் பாவி
வாயிலிட்டால் சுவையென்றும் நீங்கா!
(லிமெரிக் )
My mouth is watering Ramesh!!!!
ReplyDeleteGood.! Have curd rice and Mangaai oorugaai tonight!
DeleteThanks, NKM.
ReplyDeleteSince the mango season is round the corner you should include vadu mangai as well. Timely,tasty,tangy..
ReplyDeleteThanks for the idea! Will write something on Vadu Maanga and also on mango fruits in the days to come!
ReplyDelete