பிரதோஷப் பாடல் - 29
இன்றைய பிரதோஷப் பாடல், பிட்டுக்கு மண்சுமந்த பெருமானின் திருவிளையாடல் பற்றி!
சிவபெருமானின் திருப்பாதங்களில் சமர்ப்பணம்/
அன்புடன்
ரமேஷ்
கரைமீறி பெருகிவரும் வைகை நதியின்
வேகத்தைத் வென்றேயோர் அணை கட்டிட
நரைக்கூந்தல் கிழவியின் கூலி யாளாய்
அரன்வந்து அவள்சுட்ட புட்டை யுண்டு
தரைமண்ணை தோண்டியணை கட்டும் வேலை
குறையாக முடிக்காமல் உறங்கும் வேளை
பிரம்பாலே பட்டவடி அனைவர் மேலும்
விழுந்தே தழும்பான மாயம் என்னே !
Mayam enna??
ReplyDelete