கல்லூரி ஐம்பதாம் ஆண்டு நிகழ்வுக்காக எழுதியது. முன்னர் எழுதிய எல்லைகள் என்ற பாட்டை சற்று மாற்றி, கடைசி இரண்டு பத்திகளை சேர்த்து எழுதப்பட்டது.
நட்பின் எல்லை
கனவின் எல்லை எது வரை ?
காலையில் விழித்து எழும்வரை.
நினைவின் எல்லை எது வரை?
நித்திரை நம்மைத் தொடும்வரை.
ஒளியின் எல்லை எது வரை?
கண்கள் மூடும் அதுவரை
நட்பின் எல்லை எது வரை? - யாரும்
கண்டது இல்லை இதுவரை.
வானின் எல்லை எது வரை?
கடலை வானம் தொடும்வரை?
கடலின் எல்லை எது வரை ?
அலைகள் தொடும் கரை அதுவரை.
உடலின் எல்லை எதுவரை?
சுடலையில் எரிந்தழி யும்வரை.
நட்பின் எல்லை எது வரை?- யாரும்
கண்டது இல்லை இதுவரை.
பொய்யின் எல்லை எது வரை?
உண்மை வெளியில் வரும்வரை
வெய்யிலின் எல்லை எது வரை?
நிழல் தரும் தருவின் அடிவரை.
மையலின் எல்லை எது வரை?
முப்பது நாள்முடி யும்வரை
நட்பின் எல்லை எது வரை? - யாரும்
கண்டது இல்லை இதுவரை.
வித்தையின் எல்லை எது வரை - அதன்
உத்திகள் வெளியில் வரும் வரை
கத்தியின் எல்லை எது வரை? அதன்
கூர்முனை கேடயம் தொடும்வரை
புத்தியின் எல்லை எது வரை ? இறுதி
புத்தகப் பக்கம் அதுவரை
நட்பின் எல்லை எது வரை?- யாரும்
கண்டது இல்லை இதுவரை.
ஆண்டுகள் ஐம்பது முடிந்தபின்னே நாம்
மீண்டும் கூடுமின் னாளினில்
காளைப் பருவ நினைவுகளை நம்
மூளையி லிருந்து மீட்டுவோம் .
சுகந்த மணத்தை பரப்பும் நிகழ்வுகளை
பகிர்ந்து பேசியே நெகிழுவோம் .
பொன் புகழ் பதவி பொருளைத் தேடி
ஓடி ஓய்ந்தவிவ் வேளையில்
கற்ற நாட்களில் பெற்ற நட்புகள்
உறுதுணை என்ற உணர்வுடன்
உறங்கிக் கிடக்கும் நட்பு இழைகளை
சேர்த்துக் கோர்த்துப் பின்னியே
உறவுப் பாலம் ஒன்றை அமைத்து
பிறவிப் பயனை எய்துவோம்
நட்பின் எல்லை
கனவின் எல்லை எது வரை ?
காலையில் விழித்து எழும்வரை.
நினைவின் எல்லை எது வரை?
நித்திரை நம்மைத் தொடும்வரை.
ஒளியின் எல்லை எது வரை?
கண்கள் மூடும் அதுவரை
நட்பின் எல்லை எது வரை? - யாரும்
கண்டது இல்லை இதுவரை.
வானின் எல்லை எது வரை?
கடலை வானம் தொடும்வரை?
கடலின் எல்லை எது வரை ?
அலைகள் தொடும் கரை அதுவரை.
உடலின் எல்லை எதுவரை?
சுடலையில் எரிந்தழி யும்வரை.
நட்பின் எல்லை எது வரை?- யாரும்
கண்டது இல்லை இதுவரை.
பொய்யின் எல்லை எது வரை?
உண்மை வெளியில் வரும்வரை
வெய்யிலின் எல்லை எது வரை?
நிழல் தரும் தருவின் அடிவரை.
மையலின் எல்லை எது வரை?
முப்பது நாள்முடி யும்வரை
நட்பின் எல்லை எது வரை? - யாரும்
கண்டது இல்லை இதுவரை.
வித்தையின் எல்லை எது வரை - அதன்
உத்திகள் வெளியில் வரும் வரை
கத்தியின் எல்லை எது வரை? அதன்
கூர்முனை கேடயம் தொடும்வரை
புத்தியின் எல்லை எது வரை ? இறுதி
புத்தகப் பக்கம் அதுவரை
நட்பின் எல்லை எது வரை?- யாரும்
கண்டது இல்லை இதுவரை.
ஆண்டுகள் ஐம்பது முடிந்தபின்னே நாம்
மீண்டும் கூடுமின் னாளினில்
காளைப் பருவ நினைவுகளை நம்
மூளையி லிருந்து மீட்டுவோம் .
சுகந்த மணத்தை பரப்பும் நிகழ்வுகளை
பகிர்ந்து பேசியே நெகிழுவோம் .
பொன் புகழ் பதவி பொருளைத் தேடி
ஓடி ஓய்ந்தவிவ் வேளையில்
கற்ற நாட்களில் பெற்ற நட்புகள்
உறுதுணை என்ற உணர்வுடன்
உறங்கிக் கிடக்கும் நட்பு இழைகளை
சேர்த்துக் கோர்த்துப் பின்னியே
உறவுப் பாலம் ஒன்றை அமைத்து
பிறவிப் பயனை எய்துவோம்
No comments:
Post a Comment