ஜே என் யூ போராட்டம்
ஜே என் யூ போராட்டம்
கடந்த இரண்டு வாரங்களாக எல்லா தொலைக்காட்சிகளிலும் அல்லோல கல்லோலப் படுவது
ஜே என் யு பற்றிய செய்திகளே !
முகமூடி அணிந்துகொண்டு இரண்டு கோஷ்டிகள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட
கண்கொள்ளாக் காட்சியைக் கண்டோம்.
முதலில் இது ஏதோ CAA பற்றி மாணவர்களின் எதிர்ப்பு பற்றியது என்று நினைத்தேன்.
பின்புதான் தெரிந்தது இது விடுதிக் கட்டணங்களையும் படிப்புக்கான வருடாந்திரக்
கட்டணங்களையும் ஜே என் யூ நிர்வாகம் உயர்த்தியதை எதிர்த்து நடந்த்தப்படும் போராட்டம்
என்று!
இதைத் தவிர , தங்கிப் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான சில கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டதை எதிர்ப்பதும் ஒரு நோக்கம்.
இது பற்றி சில விவரங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கையில் கட்டண உயர்வு பற்றிக்
கிடைத்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. சில பத்திரிகைகள் இந்த உயர்வு
அமலுக்கு வந்தால் ஜே என் யூ கட்டணங்கள் மற்றவைகளை விட மிக அதிமாகும் என்றும் , மற்ற
பத்திரிகைகள் இதற்குப் பிறகும் ஜே என் யூ கட்டணம் குறைவாகவே இருக்கும் என்றும்
( அவரவர்களுடைய அரசியல் நோக்கைப் பொறுத்து) எழுதின . எது உண்மை என்று நான்
இப்போது ஆராய விரும்பவில்லை. ஆனால் தற்போதைய விடுதிக் கட்டணங்கள் எவ்வளவு
என்று ஆராய்ந்தபோது தெரிந்த தகவல் படி ஒரு நாள் வாடகை 10 ரூபாய்க்கும் குறைவு ,
ஒரு நாள் சப்பாட்டுச் செலவு சராசரி ரூபாய் ஐம்பது என்றும் தெரிய வந்தது!
படிப்பவர்கள் பெரும்பான்மையினருக்கு ஊக்கப் பணம் கிடைக்கிறது என்றும் அறிந்தேன்!
அடடா! ஜே என் யூ வில் படிக்கும் சாக்கில் நாமும் டெல்லியில் தங்கி சுற்றி பார்க்கலாமே
என்று தோன்றியது!
இது பற்றி ஒரு அங்கதக் கவிதை - எந்த அரசியல் கலப்பும் இல்லாமல்!
அன்புடன்
ரமேஷ்
ஜே என் யூ
இந்திய நாட்டின் தலைநகரில்
தங்கி வசிக்கச் சிலவருடம் வந்தது எனக்கோர் ஆசையுமே வழியிதற் கெதுவென ஆராய்ந்தேன் சொந்தங்கள் யாரும் அங்கில்லை பெரிதாய்ப் பையில் காசில்லை இந்த நிலையில்நான் இருக்கையிலே நண்பன் ஒருவன் நயந்துரைத்தான். "ஒருநாள் தங்கிட வாடகையே ரூபாய் ஐந்து மட்டும்தான் மூன்று வேளை சாப்பாடோ முப்பது ரூபாய் மட்டும்தான் ஐந்து ரூபாய்க்கு டீகாபி ஆலு பரோட்டா சமோசாவும் எந்த நேரமும் எளிதாக கிடைக்கும் வுண்டிச் சாலையிலே!. இந்த இடத்தில் நீ தங்கி இரண்டு வருடம் இருப்பாயேல் முது கலைப் படிப்பும் முடித்திடலாம் படிக்கப் பணமும் பெற்றிடலாம். இதுபோ தாதெனெ நீநினைத்தால் முனைவ ராகிடவும் முனைந்திடலாம்.
பதறிடாமல் பல வருடம்
பாரதத் தலைநகர் பார்த்திடலாம்!
எந்த இடமிது வெனக் கேட்டேன் வந்த பதில்கேட்டு வியப்புற்றேன் வாவென அழைத்து வரவேற்கும்
ஜேஎன்யூவென அவன் உரைத்தான் !
|
Super poem Ramesh.
ReplyDeleteGreat pity it is not understood by many.