கப்பலா கவிழ்ந்து போச்சு?
ஒருவர் கவலையுடன் இருக்கும்போது அவரை நோக்கி கேட்கப்படும் கேள்வி - ' ஏன் இப்படி இருக்கே? கப்பலா கவிழ்ந்து போச்சு?".
கடலில் செல்லும் கப்பல், புயல் அடித்தாலும், கடல் கொந்தளித்தாலும்
கவிழுவதில்லை - அதனுள் தண்ணீர் புகும் வரை.
அமைதியான கடலானாலும் , ஒரு சிறு ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே வந்தால் கவிழுவது நிச்சயம்!
அதுபோலவே, கவலைகளை உள்ளே விடாத வரையில், மனதும் செயலும் தெளிவாக இருக்கும்!
கவலைகளை உள்ளே விட்டால் --- கவிழ்ந்த கப்பல் கதைதான்!
அன்புடன்
ரமேஷ்
கப்பல்
அகண்டு விரிந்த ஆழிக் கடல்மேல்
---------அனைத்து திசையிலும் அலைகள் அணைக்க
சுகமாய் மிதந்து செல்லும் கப்பல்---
----------வெளியுள உவர்நீர் உட்புகும் வரையில் !
நீருட் புகும் வரை நேராய்ச் செல்லும்
------------கப்பலின் சுவரில் தப்பெதும் நேர்ந்து
தவறியும் உவர்நீர் உட்புக நேரின்
------------கப்பலும் கவிழும்; கடலுள் முழுகும்
அதுபோல்
சுழலும் உலகில் உழலும்நம் வாழ்க்கைக்
------------கப்பலின் வெளியே கவலை அலைகள்
சூழ்ந்து அடிக்கையில் திடமாய் நின்று
------------மனத்துள் கவலையின் திவலைகள் கூட
உட்புகு தலையே தடுத்தோ மாயின்
------------தெளிவாய்ச் செயல்படும் மூளையும் மனமும்.
செய்திறம் சிறக்கும்; சிந்தனை செழிக்கும்.
------------வாழ்க்கைக் கப்பல் வளமாய் விரையும்.