Search This Blog

Jun 21, 2017

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் - 15, 16

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் - 15,16


நீண்ட இடைவேளைக்குப் பிறகு  , 18 ஸ்லோகங்களுடன் அமைந்த ஈசாவாஸ்ய உபநிஷத்தின் 15, 16 வது ஸ்லோகங்களை அவற்றின் பொருள் மற்றும் விளக்கங்களோடும், ஆங்கில  மொழிபெயர்ப்போடும் , என்னுடைய பாடலோடும் பதிப்பிக்கிறேன். நீண்ட இடைவேளைக்குப் பின்  என்பதால் , முந்தைய பதிப்புகளையும் படித்தால் உதவும். அப்பதிப்புகளின் இணைப்பு பற்றிய தகவல்களையும் கீழே தந்திருக்கிறேன்.

அன்புடன் 
ரமேஷ் 
http://kanithottam.blogspot.in/2015/10/blog-post_22.html
http://kanithottam.blogspot.in/2016/12/1-2.html
http://kanithottam.blogspot.in/2016/12/3_17.html
http://kanithottam.blogspot.in/2016/12/4-5.html
http://kanithottam.blogspot.in/2017/01/6-7_6.html
http://kanithottam.blogspot.in/2017/01/8.html
http://kanithottam.blogspot.in/2017/02/9_3.html
http://kanithottam.blogspot.in/2017/02/11.html
http://kanithottam.blogspot.in/2017/02/12-13-14.html


ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் - 15,16 






மொழிபெயர்ப்பு: *

உண்மையின் முகம் உன் ஒளித்திரையின் பின் மறைக்கப் பட்டுள்ளது. சற்றே அதை விலக்கி சத்திய நெறி பேணும் முனிவன் எனக்கு உண்மையைக் காண உதவுவாய்.

வானவெளியில் தனியாகப் பயணம் செய்யும் சூரியதேவனே! உலகத்து ஜீவராசிகள் அனைத்தையும் பேணிக் காப்பவனே!
உனது கிரணங்களை விளக்கி, ஒளியைச் சுருக்கிக் கொள்.
உனது வடிவை நான் காண வேண்டுகிறேன்!

என்ன ஆச்சரியம்! உனதருளால் உன்னுருவைக் காணுகையில், அது நானே என்று உணர்கின்றேன்! ( ஸோ அஹம் அஸ்மி )

Translation : **

The face of truth is hidden by your orb
Of Gold, O Sun! May you remove your orb
So that I, who adore the true, may see
The glory of truth. O nourishing sun,
Solitary traveller, controller,
Source of life for all creatures, spread your light
And subdue your dazzling splendor
So that I may see your blessed self.

Even that very Self am I !
(
விளக்கம் : *

"அறியாமை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல் " என்பது ஒருவனுடைய முதல் நிலைப் பிரார்த்தனை. இதன் மூலமும், தபம் , ஜபம் போன்ற சாதனைகளின் மூலமும், ஒளியை காண்கிறான். அந்த ஒளியின் வசீகரத்தில் தன்னை மறந்து அங்கேயே நிற்கிறான். ஆனால் அவன் காண விரும்பும் உண்மை, அந்த ஒளிக்கும் பின்னாலே இருக்கிறது. அந்த உண்மையைக் காண பிரார்த்திக்கும் ஒருவன், ஒளிக்குப் பின்னால் இருக்கும் உண்மையைக் காண்கையில் , "அந்த உண்மையும் தானும் ஒன்றே" ( ஸோ அஹம் அஸ்மி )  என்று உணர்கிறான்!

பாடல் :

ஒளியின் பிழம்பாய்ச் சுடர்விட்டு
----------மிளிரும் சூரிய நாயகனே
வெளியில் தெரியுமுன் பேரொளியை
----------சற்றே விலக்கி அருள்புரிவாய்.
பொன்மயமான அவ்வொளித் திரையின்
----------பின்னே மறைந்துள உட்பொருளை  
உண்மை நெறியுடை முனிவன்நான்
----------கண்டே அறிந்திட விழைகின்றேன்.


உலகைப் பேணிக் காப்பதற்கு
----------தனியாய் வானில் பயணிப்போய்!
அலகில்    ஒளியா!   அருணாஉன் 
----------ஒளிக் கரங்களை ஒளித்திடுவாய்.
விலகிய அந்தத் திரையின்பின்
----------மகிமை வாய்ந்த உன்னுருவை
நலமாய் நானும் காணுகையில்
----------நானே அங்கெனைக் கண்டேனே


*- Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam, Chennai-4 

**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books



No comments:

Post a Comment