Search This Blog

Jun 24, 2017

எனக்கென்ன ? நான் போறேன் பாகு பலி.

எனக்கென்ன ?  நான் போறேன் பாகு பலி.


'பட்டப்பகலில் வாலிபர்  கொலை'
' தனியாகச் சென்ற  பெண்ணை வாலிபர்கள் கற்பழிப்பு"
இது போன்ற தலைப்புச் செய்திகளைத்  தாங்கி வரும் நாளேடுகள், கூடவே "இச்செயல்கள்  நடக்கையில் சுற்றி நின்று ஒரு கூட்டம் வேடிக்கை பார்த்தது" என்ற செய்தியைப்  பதிவு செய்வதையும்   தினம் தோறும் பார்த்துப் பார்த்து மரத்துப் போய்விட்டோம்..
தெருவிபத்தில் அடிபட்டு ரத்தம் வழியாக கிடப்பவரைச் சுற்றி ஒரு கூட்டமே நிற்கும். ஆனால் முன்வந்து உதவி செய்ய வருபவர் எத்தனை பேர்? ""நமக்கெதுக்கு வம்பு? பாகு பலி ( அல்லது வேறு ஏதாவது) மேட்னி ஷோவுக்கு நேரம் ஆச்சு " என்று அந்த இடத்தை விட்டு வேகம் வேகமாக நகருபவர்களே அதிகம்.
"நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன, நம்மைக் கடிக்காமல் விட்டால் சரி" என்கிற மனப்பான்மை  எல்லோரிடமும்  காணப்படுகிறது. இதுவே  சமூகத்தில் நாம் காணும் பல அவலங்களுக்கும்   காரணமாகிறது.

இதைப்  பற்றி  ஒரு ஆதங்கப் பாடல்.

அன்புடன்

ரமேஷ்


பாகுபலி

இருக்கவிடம் இல்லாத நடைபாதைக்  குடும்பங்கள்
குடித்துக்கார் ஓட்டுவோர்க்கு வேகப்  பலி.
பருவமழை தவறிப்போய் ஏரிகுளம் வற்றிப்போய்
நீரில்லா கிராம மக்கள் தாகப் பலி
இரவென்ன பகலென்ன எந்நேரம் ஆனாலும்
தனிச்செல்லும்  பருவப்பெண்  மோகப் பலி
யாரிங்கு  ஆண்டாலும் எதுவென்ன ஆனாலும்
எனக்கென்ன ?  நான்போறேன்  பாகு பலி.

சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி வரிஏய்க்கும்
பட்டாயக்  கணக்கருக்கு* விதிகள்  பலி .      (*chartered accountant)
துட்டுக்குத்  ஓட்டுகளை விலைபேசி வாங்குகின்ற
வேட்பாளர்  முன்னாலே நேர்மை பலி
சத்தமிட்டு எதிர்க்கட்சி சட்டசபை நடக்காமல்
ஒத்திவைக்கும் உத்திமுன்ஜன  நாயகம் பலி.
யாரிங்கு  ஆண்டாலும் எதுவென்ன ஆனாலும்
எனக்கென்ன ?  நான்போறேன்  பாகு பலி.

 நாடிங்கே நாள்தோறும் போகின்ற போக்கினையே
நோக்குங்கால் வருகிறதே நெஞ்சில் வலி.
முகநூலில் ,வாட்ஸ்அப்பில் ட்விட்டர் எக்செட்ராவில்
இவைகளையே  எதிர்ப்பதில்நான் பாயும் புலி
நேராகப் போராடும் நிலையொன்றை எதிர்கொண்டால்
அப்போநான் வளைக்குள்ளே  பதுங்கும் எலி!
யாரிங்கு  ஆண்டாலும் எதுவென்ன ஆனாலும்
எனக்கென்ன ?  நான்போறேன்  பாகு பலி.








4 comments:

  1. A nice. interesting, poetic description of peoples mentality, unfortunately very true.
    SUNDER

    ReplyDelete
  2. எனக்குஎன்ன என்பதைவிட என்னால் முடியவில்லையே என்ற உன் /என் மற்றும் பலரின் ஆதங்கம் தெரிகிறது. நேரிடையாக இல்லாவிட்டாலும் எந்த விதத்திலாவது ஏதாவது செய்யமுடியுமா , யாராவது அனுபவஸ்தர்கள் சொல்லுங்களேன்

    ReplyDelete
  3. Weekly Knowledge #1⃣7⃣6⃣
    Quebec Ashram
    21 Oct 1998
    Canada

    THE CAUSE OF RETURN

    Most of us come into this world with the seed in us, "It's not OK". And all our life we try to correct events, people and situations. How much can you correct? It's like trying to rearrange the clouds in the sky. This seed does not allow you to be happy, to smile from your heart, to be loving and loveable. It's there all the time like a thorn - irritating, irritating.

    This seed, "It's not OK," brings you back into this world again and again. How do you burn this seed?

    First recognize that it is there. This can happen in deep introspection and meditation.

    Sometimes you feel your body, mind, intellect, memory and ego are also not OK. You justify them or find fault with them. These are also part of the world. Acknowledge what you see as an imperfection and offer it to the Divine.

    Have faith in the infinite organizing power of the Supreme Intelligence and have the sincere feeling, "Let thy will be done." Then the seed, "It's not OK," gets burned. "Thy will be done" is a state of total contentment, a state of just love.

    We need not even make it a statement about the future. "Thy will alone is happening now."

    Question:-So everything happening is God's will?

    Guruji:-Yes, including the thought, "This shouldn't be happening."

    🌼Jai Guru Dev🌼

    ReplyDelete
  4. It is a wonderful description Ramesh. I am feeling the pain and this question remains with me. Above knowledge from SriSri was sent in one of our what's up groups. Perhaps some answer. But we should not stop here. We have to mobilise the positive forces to overcome the negative forces in the society. Darkness in a closed room can not be removed by collecting and throwing out of window. Just opening the window is sufficient to let the sun light inside. Let us make people aware of what is happening and involve them so that positivity grow in our society.

    ReplyDelete