Search This Blog

Jun 30, 2017

வெற்றியும் தோல்வியும்

வெற்றியும் தோல்வியும் மனித வாழ்வில் மாறி மாறி வரும். வெற்றியால் மிக்க மகிழ்ச்சி அடையவும் வேண்டாம்! தோல்வியால் துவளவும் வேண்டாம்.
இது பற்றி ---

அன்புடன் 
ரமேஷ் 



சரணம்

பகலவன்  உதிக்கையில்  இரவுகள் சரணம்.
மேகம் மறைத்தால் பகலவன் சரணம்.
காற்றில் மிதந்து மலையில் முட்டும்
மேகங்கள் எல்லாம் மழையில் சரணம்.
பொழியும்  மழைநீர்  நதியில்  சரணம்.
ஓடும் நதியோ  கடலில் சரணம்.
கடலின் அலைகள் கரையில் சரணம்
கரையில் வசிக்கும் உயிரின மனைத்தும்
உறங்கையில்* இரவின் மடியில் சரணம்                ( * உறங்குகையில் )
சுகமாய் உறங்கித் துயிலெழும் காலையில்
பகலவன்  உதிக்கையில்  இரவுகள் சரணம்.
பகலவன்  உதிக்கையில்  இரவுகள் சரணம்.
மேகம் மறைத்தால் பகலவன் சரணம்.
---------------------------------------------
---------------------------------------------
சுகமாய் உறங்கித் துயிலெழும் காலையில்
பகலவன்  உதிக்கையில்  இரவுகள் சரணம்.


உன்னிடம்  தோற்றவர் உனை வென்றவரை
வென்றார்  என்றால் யாரே வலியவர்?
ஒன்றை வென்றால் ஒன்றிடம் தோற்போம்.
இன்னாள்  வெற்றி; மறுநாள் தோல்வி ;
வண்டி ஒருநாள் ஓடத்தில் ஏறும்.
வண்டியில் ஒருநாள் ஓடமும் ஏறும்
வெற்றியும் தோல்வியும் நிலையில் லனவே !
சற்றும் அவற்றால் கலங்குதல்*  என்னே !      (*பாதிக்கப்படுதல் - to get affected)






4 comments:

  1. the beginning of your mail about satisfied and balanced life is the same
    Arjuna was advised by lord Krishna in Bhagavath Gita under the title who is sthitha pragnan.
    "equanimity in pleasure and pain. prosperity and adversity. absence of attachment and aversion"
    This essence is beautifully brought out in your kavithai. Very nice. Keep it up.
    Dr.Alarmelu Rishi

    ReplyDelete
    Replies
    1. Thank yo for bringing out the parallal and for your appreciation which I value immensely.

      Delete
  2. Excellent Ramesh. Truth of life is presented into a beautiful kavidhai.I wish you write more and more

    ReplyDelete
    Replies
    1. Thanks, friend ! ( though I am not able to find out who from your Punaip peyR!). I hope with the encouragement of friends and the blessings of Almighty, I will be able to write more poems and better poems!

      Delete