இயந்திர கதியில் செல்லும் இன்றைய வாழ்க்கையில் உடலும், உள்ளமும் இயற்கையை விடுத்து செயற்கைக்கு அடிமை ஆகி விட்டன!
இது பற்றி ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
செயற்கை
சரிசெய்ய அதையே விழிவில்லை* அணிந்தோம்.. * artificial lens
கேட்கின்ற ஆற்றலை காதுகள் இழக்க
மீட்க அப்புலனை செவித்துணை* அணிந்தோம் * hearing aid
மைய்யெனக் கருத்த முடிகொட்டிப் போக
பொய் மயிர்த் தோகை* போட்டதை மறைத்தோம். * wig
பல்லெலாம் உதிர்ந்து சொல்குளறும் பொது
கட்டுப்பல் வரிசை* கட்டிச்சரி செய்தோம். *artificial dentures
கால்சியம் சத்து குறைவான தாலே
கால்கை எலும்புகள் பலவீன மாக
கீழே விழுந்துடைந்த காலெலும்பைக் சேர்க்க
டைட்டானி* யத்தில் தகடுகள் புதைத்தோம் . * titanium
துடிக்கும் இதயத்தின் ஆற்றலைத் தூண்டி
முடுக்கும் கருவியை* மேல்வைத்துத் தைத்தோம் . * pace maker
மூட்டுகள் தேய்ந்து வலிவந்த தாலே
முட்டிகளை மாற்றி புதிதாக வைத்தோம் .
பாதிப்புக் குள்ளாகி செயற்கையாய்ப் போச்சு
இதனால் தானோ இன்றுநம் முகத்தின்
உதட்டுச் சிரிப்பும் உயிரற்ற பூச்சு!
சந்தனமும் நீறும் நெற்றியில் பூசி
வந்தனம் இறைவனை செய்திடும் வேளை
சிந்தனைகள் சிதறி எங்கெங்கோ செல்ல
செய்யும் தொழுகைச் செயல்களும் செயற்கை.
வண்ணங்கள் மட்டும் உடல்மேலே ஏற்றி
வாசனை விடுத்த காகிதப் பூப்போல்
எண்ணிச் செய்கின்ற ஈடுபா டின்றிநாம்
செய்யும் செயல்கள் அனைத்துமே செயற்கை
இயற்கையோ டுறவுகள் முற்றும் முறிந்து
செயல்களும் சிந்தனையும் செயற்கையாய்ப் போச்சே!
இந்நிலைமை மாறி உடலோடு மனமும்
நன்னிலைமை அடையும் நாளென்று வருமோ?
A natural worry beautifully expressed with humour entwined
ReplyDeleteSUNDER
Thanks for the nice response - with accent on the "natural"!
Deleteஅன்புள்ள ரமேஷ்
ReplyDeleteஉன்னிடமிருந்து இயற்கையாக வெளிவந்த
செயற்கை பற்றிய கவிதை அற்புதம் அற்புதம் அற்புதம்
உன் இயற்கையான நண்பன் ராம்மோகன்
மோகன் , நன்றிகள உங்கள் கருத்துப்பதிவுக்கு!
Delete'
One of your best VR - really top class
ReplyDeleteNK
Glad you liked this ! Thanks.
DeleteRamesh,this is a wonderful post with your language and poetry skills in full bloom.
ReplyDeleteஎவ்வுறுப்புப் போனாலும் அதற்கென வேறு வந்தாலும்
ReplyDeleteஇவ்வுறுப்பு எனதில்லை எனும் கருத்து எனதா? அல்லது
அந்த உறுப்புடையதா? ஒவ்வொருமுறையும் கேட்கும்
அந்த நானைப் பிடிப்பதே நம் வாழ்வின் இலக்கு.
நன்றிகள் பல, உங்கள் கருத்துப்பதிவுக்கு!
Delete'அந்த நானைப் பிடிப்பது " வாழ்வின் இழக்க, அல்லது "அந்த நானை
விடுப்பது" வாழ்வின் இலக்கா ?
இவ்விதம் செயற்கை உறுப்புகள் பல சேர்த்தாலும் உண்மையான என்னை நான் அறிய, எந்த செயற்கை
ReplyDeleteஉறுப்பு எனக்கு துணை வருமோ அதையாவது எனக்கு கொடுத்து அருள்வாயே எனது ஈசனே !
செயற்கை மனிதனையே உருவாக்க அறிந்திருக்கும் நமக்கு இன்னும் இயற்கையை உணரும் மனமும் மிஞ்சி இருக்குமா?. கவிதை மிக அருமை
ReplyDelete