Search This Blog

Jul 14, 2017

கப்பலா கவிழ்ந்து போச்சு?

கப்பலா கவிழ்ந்து போச்சு?

ஒருவர் கவலையுடன் இருக்கும்போது அவரை நோக்கி கேட்கப்படும் கேள்வி - ' ஏன் இப்படி இருக்கே? கப்பலா கவிழ்ந்து போச்சு?".
கடலில் செல்லும் கப்பல், புயல் அடித்தாலும், கடல் கொந்தளித்தாலும்
கவிழுவதில்லை - அதனுள்  தண்ணீர்  புகும் வரை.
அமைதியான கடலானாலும் , ஒரு சிறு ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே வந்தால் கவிழுவது நிச்சயம்!
அதுபோலவே, கவலைகளை உள்ளே விடாத வரையில், மனதும் செயலும் தெளிவாக இருக்கும்!
கவலைகளை உள்ளே விட்டால் --- கவிழ்ந்த கப்பல் கதைதான்!

அன்புடன்

ரமேஷ்

கப்பல்

அகண்டு விரிந்த ஆழிக் கடல்மேல்
---------அனைத்து திசையிலும் அலைகள் அணைக்க
சுகமாய் மிதந்து செல்லும் கப்பல்---
----------வெளியுள உவர்நீர் உட்புகும் வரையில் !

நீருட் புகும்  வரை நேராய்ச் செல்லும் 

------------கப்பலின்  சுவரில் தப்பெதும்  நேர்ந்து 
தவறியும் உவர்நீர் உட்புக நேரின் 
------------கப்பலும் கவிழும்; கடலுள் முழுகும் 

அதுபோல்

சுழலும் உலகில் உழலும்நம் வாழ்க்கைக் 

------------கப்பலின் வெளியே கவலை அலைகள் 
சூழ்ந்து அடிக்கையில் திடமாய் நின்று 
------------மனத்துள் கவலையின் திவலைகள் கூட 

உட்புகு தலையே தடுத்தோ மாயின் 

------------தெளிவாய்ச் செயல்படும் மூளையும் மனமும்.
செய்திறம் சிறக்கும்; சிந்தனை செழிக்கும்.   
------------வாழ்க்கைக் கப்பல்  வளமாய் விரையும்.







10 comments:

  1. Excellent philosophy difficult to live out!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரி! கவலைப்பட காரணங்கள் எதுவும் இல்லை என்றால், அதுவே நமக்குத் பெரிய கவலை ஆகி விடுகிறது!

      Delete
  2. அன்புள்ள ரமேஷ்
    உன் கப்பல் கவிதையைப் படித்தேன்
    கீழ்கண்ட கருத்தை பிடித்தேன்
    கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே
    கவலை அலைகளை மனதிடக்குள் விடாதே
    உன் நண்பன் ராம்மோகன்

    ReplyDelete
    Replies
    1. ராம்மோகன், நன்றி. உன் பதிலும் ஒரு கவிதை போலவே இருக்கிறதே!

      Delete
  3. Very nice. Take in necessary things and keep out what can sink you for a happy life.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரி! கவலைப்பட காரணங்கள் எதுவும் இல்லை என்றால், அதுவே நமக்குத் பெரிய கவலை ஆகி விடுகிறது!

      Delete
  4. Excellent blog.Comparison of human worries with a sailing ship is very apt.

    ReplyDelete
  5. மிக மிக உண்மை. எல்லாம் சுமுகமாய் போய்க்கொண்டுருந்தால் அதற்கும் கவலைப்படும் இந்த மனித மனம்

    ReplyDelete
  6. கவலையில் உள்ள வலையில் சிக்காத
    கலையை அறிவதே வாழும் நெறி

    ReplyDelete