Search This Blog

Jul 17, 2017

பிரம்மா விஷ்ணு சிவன்

பிரம்மா விஷ்ணு சிவன் 

என்னுடைய பேரக்  குழந்தைகள்  மூன்று பேர் சென்னை வந்து  இன்று முதல்  எங்களுடன் சென்னையில் சில வாரங்கள்  தங்கப் போகிறார்கள்.  அதைக் கொண்டாடும் வகையில் குழந்தைகளுக்கான ஒரு பாட்டு.

பெரியவளுக்கு ஐந்து வயது. சாதாரணமாக இந்த வயதுக் குழந்தைகளுக்கு நாம் கற்பிப்பது  அர்த்தம் புரியாத சமஸ்க்ருத ஸ்லோகங்கள் அல்லது அர்த்தம் இல்லாத ஆங்கில nursery rhymes .

குழந்தைகளுக்கு புரியும் படி பாடல்களை எழுதி , கற்பித்து , அவர்கள் மனதில் நம் கலாச்சாரத்தைப் பற்றிய கதைகளையும் நல்ல கருத்துக்களையும்  பதிக்க வேண்டும் என்று ஒரு சின்ன ஆசை.

அந்த ஆசையில் விளைந்த ஒரு பாடல் இது.

இது குழந்தைகளுக்குப் புரியுமா, அல்லது இன்னும் எளிதான நடையில் இருக்க வேண்டுமா ? 

உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்! ஏதாவது திருத்தங்கள் தோன்றினாலும் சொல்லுங்கள்!

அன்புடன் 
ரமேஷ் 

பி.கு. : இதையே ஆங்கிலத்திலும் எழுதி இருக்கிறேன். அதை வரும் நாட்களில் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

பி.பி.கு : இந்தப் பாடலைப் பதித்த பிறகு, நண்பர் ராம. கிருஷ்ணன் கூறிய திருத்தங்களை ஏற்று மாறுதல்களை செய்திருக்கிறேன்.





மூன்று தெய்வங்கள்



பிரம்மா விஷ்ணு சிவன்என்று  
          பெரிய தெய்வங்கள் மூன்றுண்டு.                       
கரங்கள் கூப்பி அம்மூவரையும்
          காலையும் மாலையும் வணங்கிடுவோம்.






நான்கு முகமுடை பிரம்மனோ 
          நான்கு வேதங்கள் தந்தவராம்.  
அண்ட சரங்கள்  அத்தனையும்          
          ஆக்கிப் படைப்பது அவர்தொழிலாம்.






பாலாங் கடலில்   பாம்பின் மேல்                                    
          படுத்துப்  பள்ளி கொண்டிருக்கும்
மாலெனும்   பெயர்கொண்ட விஷ்ணுவுமே 
            மகிழ்ந்து நம்மைக் காத்திடு வார்.






சிவனுக்கு மூன்று கண்ணென்பார்                               
           சிவந்து பரந்த நெடுந்தோற்றம் 
தவறுகள் செய்யும் துட்டர்களை 
            நெற்றிக்  கண்ணால்   எரித்திடுவார்.





படைத்தல், காத்தல், அழித்தலையே   
            பாரில் மக்கள் உய்யுறவே    
இடை விடாமல் செய்பவரை
            என்றும் வணங்கி நலமடைவோம்.












10 comments:

  1. பிரம்மா விஷ்ணு சிவனென்று
    பெரிய தெய்வம் மூன்றுண்டு.
    கரங்கள் கூப்பி மூவரையும்
    காலை மாலை வணங்கிடுவோம்.

    நான்கு முகங்கொள் பிரம்மனோ
    நான்கு வேதம் தந்தவராம்.
    அண்ட சரங்கள் அத்தனையும்
    ஆக்கிப் படைப்பது அவர்தொழிலாம்.

    பாலாங் கடலிற் பாம்பின்மேல்
    படுத்துப் பள்ளி கொண்டிருக்கும்
    மாலோ விஷ்ணுப் பெயர்கொண்டு
    மகிழ்ந்து நம்மைக் காத்திடுவார்.

    சிவனின் கண்கள் முன்றென்பார்
    சிவந்து பரந்த நெடுந்தோற்றம் .
    தவறு செய்யும் கேடர்களை
    நெற்றிக் கண்ணால் எரித்திடுவார்.

    படைத்தல், காத்தல், அழித்தலென
    பாரிற் மக்கள் உய்வுறவே
    இடைத்த லின்றிச் செய்வோரை
    என்றும் வணங்கி நலமடைவோம்.

    அன்பிற்குரிய இரமேஷ்,

    ஓசை கருதிச் சிறுவர்க்கு ஏற்றவண்ணம் சற்று மாற்றியிருக்கிறேன்.
    அறுசீர் விருத்தம் சிறுவருக்குப் புரியும்.

    உகந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்.

    பிள்ளைகளுக்கு என் வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    இராம.கி.

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
    Replies
    1. அனைத்து திருத்தங்களும் மிகப் பொருத்தம். ஏற்றுக் கொள்கிறேன். நன்றி , கிருஷ்ணன்.

      Delete
  2. ”பாரில் மக்கள் உய்வுறவே” என்று திருத்திக்கொள்ளுங்கள். தட்டச்சுப் பிழை.

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
  3. Very well written Ramesh.Chitra has told my 4year old grand daughter that she will teach her to recite these poems from tomorrow.She is already learning carnatic music and listens
    to prayer songs of Surya gayathri every morning before leaving for school at 8am.

    ReplyDelete
  4. Nice. Will be easily understood by kids - if they can understand Tamil !!

    ReplyDelete
  5. Your poem is good and the corrections suggested by your friend has embellished it to make it even better. Time for you to refresh our memory on thalai, seer, virutham, venba and the different types in each of these.

    ReplyDelete
  6. There is a book titled " kavithai Ezhuthik Kalakkungal" by Dr.Pasupathi, published by S.K.M publications, 15/4, Ramanathan street, T.Nagar , Ph : 24361141. A nice book which explains these concepts beautifully.

    ReplyDelete
  7. Nice beginning....keep it up ramesh....correction suggested by your friend is indeed nice and simple and easy to learn by kids

    ReplyDelete
  8. Your poem on Brahma is suitable for reciting daily. With your permission, I like to include it in our தின வழிபாடு book - Sundararajan 9442525191 (whatsapp only)

    ReplyDelete