Search This Blog

Jul 21, 2017

தலைப்புச் செய்திகள்: வாசிப்பது -------

தலைப்புச் செய்திகள்: வாசிப்பது -------

சென்ற சில நாட்களில் வந்த செய்தித்தாள் தலைப்புச் செய்திகள்: வாசிப்பது -------


1. எம்.எல்.ஏ சம்பளங்கள் இரண்டு மடங்காக உயர்வு.
2. நிதிநிலைமை மோசமானதால் அம்மா உணவகங்கள் குறைப்பு.
3. சசிகலாவுக்கு சிறையில் தனி சமையலறை/சமையலாட்கள் 
4. தமிழ்நாட்டில் பெண்குழந்தை/ஆண்குழந்தை விகிதாச்சாரம் குறைந்து 911: 1000 என்ற நிலைமை.
5.தமிழ் நாட்டில்  கொசுத்தொல்லை; டெங்கு பரவும் அபாயம்.
6. மருத்துவமனையில் லஞ்சத் தொல்லை: இறந்தவரின் சடலங்களை எடுத்துக்கொள்ளக் கூட , உறவினர்களிடம் பணம் பிடுங்கும் அவலம்.
7. சாராயக்  கடைகளை மூடக்கோரி பெண்கள் நடத்தும் போராட்டத்தில் தடியடி.
8. தமிழ்நாட்டில் 2016ம் ஆண்டு செய்யப்பட முதலீடுகள் அகில இந்திய முதலீடுகளில் 2.1% மட்டுமே!

இவை பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 


செய்திகள் - வாசிப்பது --------

எம்எல்ஏ     சம்பளத்தை    இரட்டிப்பு    செய்கிறார்
அவர்செய்யும்    ஊழல்களை     இருட்டடிப்பு    செய்கிறார்.
அம்மா    உணவகங்கள்    நடத்துவதை    நிறுத்துறார்
சின்னம்மா   உணவகங்கள்    சிறையில்கூட    அமைக்கிறார்.

பசுவதையைப்    பற்றியிவர்    பார்லிமென்டில்   பேசுறார்- பெண்
சிசுவதையை    தமிழ்நாட்டில்    தடுப்பதை    விடுக்கிறார்.
கொசுவதையைக்    கூடஇவர்   சரியாய்ச்    செய்யாததால்
விசுவரூப   மாய்டெங்கு    காய்ச்சல்   எடுக்குமோ?

இந்தியா    முழுதுமான     முதலீட்டுக்    கணக்கிலே
வந்தபணம்    இரண்டே    இரண்டுவிழுக்   காடுதான்.
நான்எனக்கு   என்பதையே    தலைவர்கள்   நினைப்பதால் 
டீஎன்னுக்கு*    இவ்வளவே     கிடைத்ததிலோர்     வியப்புண்டோ? (*TN- Tamil Nadu) 

ஆசுபத்திரி    சேவைக்கும்    காசுபணம்   கறக்குறார். 
டாசுமாக்கில்     சாராயம்   ஊத்திஊத்திக்   கொடுக்கிறார்.
பேசுபுக்கில்    பலருமிவரை     ஊத்திஊத்திக்   கழுவுறார்*.
பாசுமார்க்    கூடஆட்சிப்    பரிட்சையிலே   வாங்கலே !



*- "ஊத்திக் கழுவுதல்" என்ற இந்த வார்த்தைப் பிரயோகம் எனக்கும் புதியதே. எந்த ஒரு அகராதியிலும் இதற்குப் பொருள் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், ஊடகங்கள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் இவைகளிருந்து நான் கற்றுக்கொண்டது இது.
"ஒருவருக்குள்ளிருக்கும் குறைகளை  அலசி வெளியே எல்லோருக்கும் தெரியும்படி செய்வது" என்பது என் புரிதல். இந்தப் பொருளில்தான் இதை பயன்படுத்தி  இருக்கிறேன்.



5 comments:

  1. The para on amma canteens is one of your best.

    ReplyDelete
  2. ஊத்ததிக்கழுவுதல் என்பதை washing the dirty linen in public என்று சொல்லலாமே

    ReplyDelete
  3. பாசுமார்க் இதுவரை கொடுத்தது குடிமக்களே
    பாசமொடு கொடுத்த பணத்தை வாங்கினார்கள்
    பெற்றதை வாக்காகப் பெட்டியில் இட்டார்கள்
    மற்றதை மறக்கவே மதுக்கடையில் நின்றார்கள்.

    நின்றதும் குடித்ததும் பின் தின்றதும் உறங்கினார்கள்
    விழித்ததும் விழி பிதுங்கி பஸ்ஸோ ரயிலோ பிடித்து
    கைக்கூலி பெறவே கடும் வேலையில் இறங்கினார்கள்
    கூலியோ வாரத்தில் ஒருநாள், அதுவே அவர் திருநாள்

    சுழலும் இவ்வட்டத்தில் தலை சுழல்வது குடிப்பவருக்கா?
    உழலும் குடிமக்கள் நடுவில் குடி மக்களின் பணத்தில்
    அரசின் இயந்திரத்தைச் சுழல வைக்கும் அரசினருக்கா?
    அரசைத் தேர்ந்து நல்லாட்சி விரும்பும் குடிமக்களுக்கா?

    மக்களே மன்னர் என்றார், அதற்கெனவே வாக்கைக் கொடுத்தார்
    மக்களோ மாக்கள் ஆனால் வாக்கிற்கு என்ன வக்கு?
    காட்டுவதைக் காட்டிப் பெறுவதைப் பெரும் கலையாக்கி அரசு
    நாட்டுவோரிடம் மாட்டாமல் தனித்துக் கடமை ஆற்றுவோம்.

    ReplyDelete
    Replies
    1. "பெற்றதை வாக்காகப் பெட்டியில் இட்டார்கள்
      மற்றதை மறக்கவே மதுக்கடையில் நின்றார்கள்."

      "மக்களே மன்னர் என்றார், அதற்கெனவே வாக்கைக் கொடுத்தார்
      மக்களோ மாக்கள் ஆனால் வாக்கிற்கு என்ன வக்கு?"

      இவ்வரிகளை மிகவும் ரசித்தேன்! நன்றி.

      Delete